தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருவதை அடுத்து பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
