Vodafone Idea Netflix Plans: ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்த்து வருகிறது எனலாம். குறிப்பாக, ரீசார்ஜ் பிளானிலும் ஒவ்வொரு வகை வாடிக்கையாளர்களுக்கும் ஏற்றது போல் வழங்கி வருகின்றன எனலாம். குறைந்த பட்ஜெட்டில் நிறைவான சேவையை விரும்பவருக்கும் சரி, அதிக பலன்கள் தேவைப்படுவோருக்கும் சரி இரண்டு நிறுவனங்களும் பரந்த அளவில் திட்டங்களை வைத்துள்ளன.
அதேபோல், இந்த இரண்டு நிறுவனங்கள்தான் இந்தியா முழுவதும் 5ஜி இணைய சேவையை வழங்கி வருகின்றன. அதுவும் வாடிக்கையாளர்கள் இந்த 5ஜி இணைய சேவையை அன்லிமிட்டேட்டாக பெறலாம். அதற்கென தனிக்கட்டணம் கிடையாது. இதனால், இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போனுக்கான தேவையும் அதிகரித்துள்ளது எனலாம். அதேபோல், ரீசார்ஜ் பிளான்களில் ஓடிடி சந்தாவையும் அளிப்பது தற்போது அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு அதிகம் கைக்கொடுத்த நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனமும் இந்த அணுகுமுறையை தற்போது கையில் எடுத்துள்ளது.
நெட்பிளிக்ஸ் கைக்கோர்த்த Vi
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் சமமாக போட்டிப்போட வோடபோன் ஐடியா இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் வோடபோன் ஐடியா நிறுவனம் நெட்பிளிக்ஸ் உடன் கைக்கோர்த்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி சந்தாவை அளிக்கும் வகையில் இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டங்களின் விலை மற்றும் பலன்கள் குறித்து இங்கு முழுமையாக காணலாம்.
வாடிக்கையாளர்களின் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், டேட்டா பலன்களை வழங்கும் வகையிலும் இந்த இரு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சமீபத்தில், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அதிகவேகத்தில் ஒரு ஆண்டுக்கு 130ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை சமீபத்தில் அறிமுகமானது. Vi Guarantee பிளானில் பிரதி மாதம் 28ஆம் தேதி அன்று மொபைல் நம்பருக்கு 10ஜிபி டேட்டா சேர்க்கப்படும். இது 13 மாதங்களுக்கு வழங்கப்படும். குறிப்பாக, 5ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், புதிய 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த திட்டம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த இரண்டு திட்டங்களும் கூடுதல் பலன்களை தருகிறது.
வோடபோன் ஐடியா ரூ.1,399 ரீசார்ஜ் பிளான்
இந்த பிளானின் வேலிடிட்டி 84 நாள்கள் ஆகும். இதில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் வரம்பற்ற காலிங் வழங்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படுகிறது. இதில் 84 நாள்களுக்கு நெட்பிளிக்ஸ் இலவசமாகும். நீங்கள் ஒரு நாளில் 2.5ஜிபி டேட்டாவை முடித்துவிட்டீர்கள் எனில், இணைய வேகம் 64Kbps ஆக குறைந்துவிடும்.
வோடபோன் ஐடியா ரூ. 988 ரீசார்ஜ் பிளான்
இந்த பிளானின் வேலிடிட்டி 70 நாள்கள் ஆகும். இதில் தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் வரம்பற்ற காலிங் வழங்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படுகிறது. இதில் 70 நாள்கள் நெட்பிளிக்ஸ் இலவசம். நீங்கள் ஒரு நாளில் 1.5ஜிபி டேட்டாவை முடித்துவிட்டீர்கள் எனில், இணைய வேகம் 64Kbps ஆக குறைந்துவிடும்.