இந்தியாவின் மிகவும் நம்பகமான மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்குகின்ற ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் தற்பொழுது மூன்று விதமான மாறுபாடுகளை பெற்றுள்ள நிலையில் ஆரம்ப விலை ரூ.75,591 (எக்ஸ்ஷோரூம்) துவங்குகின்றது.
முதலில் மூன்று ஸ்பிளெண்டர்+ பைக்குகளுக்கு ஒற்றுமையாக உள்ள முழுவிபரங்களும் பின்வருமாறு தொகுத்து வழங்கியுள்ளேன்;-
- i3S நுட்பத்தை பெறுகின்ற 97.2சிசி ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் என்ஜினை பகிர்ந்து கொண்டு 8.02 hp பவர் மற்றும் 8.05 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மோட்டார்சைக்கிளில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
- இரண்டு பக்க டயரிலும் 130 மிமீ டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
- பொதுவாக மூன்று மாடல்களிலும் 80/100-18 டியூப்லெஸ் டயர் இரு பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது.
- டியூப்லெர் டபுள் கார்டிள் சேஸ் பெற்று முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.
Splendor+ Vs Splendor+ XTEC vs Splendor+ XTEC 2.0
மூன்று மாடல்களின் பாடி கிராபிக்ஸ் டிசைன் மாறுபட்டதாக அமைந்துள்ள நிலையில், ஸ்ப்ளெண்டர்+ Xtec மாடலின் முகப்பு விளக்கின் மேற்பகுதியில் சிறியதாக எல்இடி ரன்னிங் விளக்கு வழங்கப்பட்டு, 3D Hero லோகோ, சைடு ஸ்டாண்டு உள்ள சமயங்களில் என்ஜின் கட் ஆஃப் சுவிட்ச் வசதியும் உள்ளது.
ஆனால் புதிதாக வந்துள்ள ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 மாடலில் முழுமையான எல்இடி ஹெட்லைட் H-வடிவத்தை கொண்ட ரன்னிங் விளக்குடன் மிக நேர்த்தியாகவும், மற்ற இரு வேரியண்டுகளை விட அதிக பிரகாசத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. பின்புறத்தில் உள்ள டெயில் லைட் H- வடிவத்தை பெற்றதாக அமைந்துள்ளது. மாறுபட்ட டர்ன் இன்டிகேட்டர் டிசைன் மற்றும் ஹஸார்ட் விளக்குகளும் முதன்முறையாக 100சிசி பைக் சந்தையில் உள்ளது.
டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்ற ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 மற்றும் ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் என இரண்டும் ப்ளூடுத் வாயிலாக ஸ்மார்ட்போனை இணைக்கும் பொழுது கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட், பேட்டரி இருப்பு, நிகழ் நேர மைலேஜ் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
சாதாரண ஸ்பிளெண்டர்+ மாடலில் சைடு ஸ்டாண்டு இண்டிகேட்டர், வழக்கமான பழைய அனலாக் கிளஸ்ட்டர் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.
ஸ்பிளெண்டர்+ பைக்குளின் நிறங்கள்
ஸ்பிளெண்டர் பிளஸ் தொடர்ந்து ரெட்ரோ ஸ்டைலை தக்கவைத்துக் கொண்டு மேட் கிரே, பிளாக் அன்ட் அசென்ட், ஃபோர்ஸ் சில்வர், பிளாக் கிரே ஸ்டிரிப், பிளாக் ரெட் பர்பிள், ஸ்போர்ட்ஸ் ரெட் பிளாக், ப்ளூ பிளாக், பிளாக் வித் சில்வர், பிளாக் வித் ரெட், மேட் சீல்டூ கோல்டு மற்றும் ஹெவி கிரே க்ரீன் சுமார் 11 விதமான நிறங்களை பெற்றுள்ளது. இதுதவிர கூடுதலாக ஆக்செரீஸ் மூலம் சில மாறுபட்ட டிசைனை வெளிப்படுத்துகின்ற பாடி கிராபிக்ஸ் உள்ளது.
ஸ்பிளெண்டர்+ XTEC மாடலில் பிளாக் ஸ்பார்க்கிளிங் ப்ளூ, பிளாக் டொரோன்டோ கிரே, ரெட் பிளாக் மற்றும் பேர்ல் வெள்ளை ஆகும்.
புதிய 2024 ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 மாடல் பிளாக், ரெட் மற்றும் மேட் கிரே என டூயல் டோன் நிற கலவையை பெற்றுள்ளது.
2024 Hero Splendor+ vs Splendor+ Xtec vs Splendor+ Xtech 2.0 price list
ஹீரோவின் ஸ்பிளெண்டர் பிளஸ் ஆரம்ப விலை ரூ.75,591 முதல் துவங்கும் நிலையில் டாப் Xtech 2.0 வேரியண்ட் ரூ.82,411 ஆக (தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம்) உள்ளது. கீழே உள்ள அட்டவனையில் வேரியண்ட் வாரியாக எக்ஸ்ஷோரூம் மற்றும் ஆன்ரோடு விலை தொகுக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ஷோரூம் | ஆன்ரோடு | |
SPLENDOR + DRUM | ₹ 75,591 | ₹ 91,796 |
SPLENDOR + i3S DRUM | ₹ 76,676 | ₹ 94,321 |
SPLENDOR + i3S Black & Accent | ₹ 76,676 | ₹ 94,321 |
SPLENDOR + i3S Matte Axis grey | ₹ 78,176 | ₹ 96,653 |
SPLENDOR + i3S Xtech | ₹ 79,911 | ₹ 98,432 |
SPLENDOR + i3S Xtech 2.0 | ₹ 82,411 | ₹ 1,02,021 |
(All price Tamil Nadu)
2024 ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ரூ.91,796 முதல் ரூ.1.03 லட்சம் வரை தமிழ்நட்டின் ஆன்ரோடு விலை உள்ளது. டீலர்களுக்கு டீலர் சிறிய அளவில் கூடுதல் ஆக்செரீஸ் இணைக்கும் பொழுது மாறுபடக்கூடும்.
மேலும் படிக்க – சிறந்த 100சிசி பைக்குகளின் ஒப்பீடு மற்றும் விலை