வாந்தி எடுத்ததற்காக 4 வயது சிறுவன் அடித்துக் கொலை… தாயின் ஆண் நண்பர் கைது – திருப்பூர் கொடூரம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் திவ்யா (27). இவருடைய கணவர் வன்மீகநாதன் (33). இத்தம்பதியின் மகன் பழனிவேல்ராஜன்(4). தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திவ்யா தனது 4 வயதுக் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (28). இவரும் மனைவியை பிரிந்து வாழ்கிறார். பார்த்தசாரதிக்கும், திவ்யாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது 4 வயதுக் குழந்தையான பழனிவேல்ராஜனுடம் வீட்டை விட்டு வெளியேறிய திவ்யா, பார்த்தசாரதியுடன் சேர்ந்து தான் அணிந்திருந்த நகைகளை அடமானம் வைத்து பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்குச் சென்றுள்ளார். கையில் இருந்த பணம் முழுமையாக காலியான நிலையில் இருவரும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டி கிராமத்தில் கணவன், மனைவி எனக்கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

பழனிவேல்ராஜன்

தொடக்கத்தில் இருந்தே சிறுவன் பழனிவேல்ராஜன் இருப்பது பார்த்தசாரதிக்கு தொந்தரவாக இருந்துள்ளது. இதனால், பழனிவேல்ராஜனை பார்த்தசாரதி அடிக்கடி அடித்து துன்புறுத்திள்ளார். இதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை, பார்த்தசாரதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, பழனிவேல்ராஜன் வாந்தி எடுத்துள்ளார்.

இதில், ஆத்திரம் அடைந்த பார்த்தசாரதி அடித்துள்ளார்‌. வலி தாங்க முடியாத சிறுவன் பழனிவேல்ராஜன் மலம் கழித்துவிடவே பார்த்தசாரதி மிக கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்கச் சென்ற திவ்யாவுக்கும் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

பின்னர் சிறுவன் விளையாடும்போது, வழுக்கி விழுந்து விட்டதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனிவேல்ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து மங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து மங்கலம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், பார்த்தசாரதி சிறுவனை அடித்ததால் தலையில் காயம் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து பார்த்தசாரதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பாக சிறுவனின் தாய் திவ்யாவிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.