சில புத்தகங்கள் நமது வாழ்க்கையை மாற்றும் அளவிற்குச் சக்தி படைத்தவை. இதனாலேயே தாங்கள் படித்த புத்தகங்களை பலரும் பிறருக்குப் பரிந்துரைப்பதுண்டு. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தான் வாசித்த சிறப்பான ஏழு புத்தகங்களைப் பரிந்துரைத்துள்ளார்.
1. கிளேட்டன் எம். கிறிஸ்டென்சனின் `தி இன்னோவேட்டர்ஸ் டைல்மா’…
புதிய எதிர்பாராத போட்டியாளர்கள் சந்தையில் எழுச்சி பெறும்போது, வெற்றிகரமான நிறுவனங்களின் வெற்றி, தோல்வி மற்றும் தலைமைத்துவத்தைக் குறித்து இந்த புத்தகம் பேசுகிறது.
2. ஆடம் ஸ்மித்தின் `வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’…
பொருளாதாரம் மற்றும் முதலாளித்துவத்தின் கொள்கைகளையும், செல்வத்தை உருவாக்குதல், மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் செழிப்பை வளர்ப்பதில் அரசாங்கத்தின் பங்கு பற்றிய நுண்ணறிவுகளை இந்த புத்தகம் விவாதிக்கிறது.
3. தாமஸ் எல். பிரைட்மேனின் `த வேர்ல்ட் இஸ் ஃபிளாட்’
நவீன உலகில் உலகமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கத்தைக் குறித்து ஆராய்வதோடு, டிஜிட்டல் யுகத்தில் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரங்கள் எப்படி ஒன்றோடொன்று இணைந்திருக்கிறது என்பதை இந்த புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
4. டான் பிரவுனின் `டா வின்சி கோட்’…
அம்பானியின் வாசிப்பு ரசனை வெறும் வணிகம் மற்றும் பொருளாதாரம் என்பதை தாண்டி பொழுதுபோக்கு மற்றும் சதி செய்யும் கதைகளை வாசிப்பது என விரிவடைந்துள்ளது.
5. பகவத்கீதை…
முகேஷ் அம்பானி பகவத்கீதையை உயர்வாகக் கருதுகிறார். இந்த புத்தகம் பண்டைய இந்திய வேதம் கடமை, ஒழுக்கம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றில் காலமற்ற ஞானத்தை வழங்குகிறது. அதோடு வாழ்க்கையில் தெளிவு மற்றும் நோக்கத்தைத் தேடும் நபர்களுக்கு வழிகாட்டும் ஒளியாகச் செயல்படுகிறது.
6. வால்டர் ஐசக்சனின் `இன்னோவேடர்ஸ்’…
இந்தப் புத்தகத்தில் டிஜிட்டல் புரட்சியின் முன்னோடிகள் முதற்கொண்டு தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொலைநோக்கு பார்வையாளர்கள் வரை, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் வரலாற்றைக் குறித்து விவரிக்கிறது.
7. டேனியல் கான்மேனின் `திங்கிங் ஃபாஸ்ட் அன்ட் ஸ்லோ’…
இந்தப் புத்தகம் மனிதர்கள் முடிவெடுப்பதில் உள்ள நுணுக்கங்களை ஆராய்கிறது; நமது சிந்தனைகளை பாதிக்கும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் விஷயங்கள் குறித்து பேசுகிறது.