தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி

புதுடெல்லி, தமிழகத்தில் புதிதாக ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்களிப்போடு அமைக்கப்படும் இந்த மருத்துவ கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனை … Read more

ஜூனியர் ஆக்கி தொடர்: பெல்ஜியத்திடம் இந்திய அணி தோல்வி

பிரிடா, இந்திய ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி, ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் நெதர்லாந்தில் உள்ள பிரிடாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, பெல்ஜியத்துடன் மோதியது. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் மட்டுமே 2 கோல்கள் அடித்தார். பெண்கள் பிரிவிலும் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியை … Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு தென்கொரியா, சீனா, ஜப்பான் பங்கேற்கும் உச்சி மாநாடு

சியோல், தென்கொரியா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகள் இடையேயான முத்தரப்பு உச்சி மாநாடு 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி அந்த நாடுகளின் தலைவர்கள் ஆண்டுதோறும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த சந்திப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால் இந்த முத்தரப்பு உச்சி மாநாடு 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெற உள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான முத்தரப்பு உச்சிமாநாடு தென்கொரியா தலைநகர் … Read more

“இன்று நான் ராஜினாமா செய்தால்… அடுத்து மம்தா, பினராயி என அரசுகள் கவிழ்க்கப்படும்" – கெஜ்ரிவால்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “நான் சிறையில் இருந்தபோது ஏன் ராஜினாமா செய்யவில்லை என்பதை முதலில் விளக்குகிறேன். நான் பதவி பேராசை கொண்டதில்லை. நான் முதல்வராக பதவியேற்ற 49 நாளில் எனது கொள்கைகளுக்காக எந்தவித தூண்டுதலும் இல்லாமல் ராஜினாமா செய்தேன். எனவே, எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது. திரிணாமூல் … Read more

“பாகிஸ்தானை விட இந்தியாவில் இருமடங்கு வேலையில்லா திண்டாட்டம்” – செல்வப்பெருந்தகை

சென்னை: சமீப ஆண்டுகளில் ஐஐடி மாணவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு இல்லாத நிலை காரணமாக ஏற்படுகிற மன உளைச்சலினால் கடந்த ஓராண்டில் 6 ஐஐடி மாணவர்கள் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். பாகிஸ்தானை விட இந்தியாவில் இருமடங்கு வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று 2014 தேர்தல் பரப்புரையில் … Read more

பிஹார்: லாக் அப்பில் இருந்து 4 பேர் பலவந்தமாக விடுவிப்பு: ஆய்வாளர் சஸ்பெண்ட்

புதுடெல்லி: பிஹாரின் மதுபனி தொகுதி காவல்நிலைய சிறையில் பலவந்தாக புகுந்து 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இதை தடுக்காததுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 20 இல் மதுபனி மக்களவை தொகுதியின் ஜலே சட்டப்பேரவையின் கீழான வாக்குச்சாவடியில் தேர்தல் நடைபெற்றது. அப்போது அங்கு 3 பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் போலி வாக்குப்பதிவு செய்ததாகக் கைதாகினர். இவர்கள் அருகிலுள்ள ஜலே காவல்நிலையத்தின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதேநாள் இரவு காவல்நிலையம் வந்த ஒரு … Read more

சுடரின் கண்ணுக்கு தெரிந்த இந்து: கண்ணீர் விட்டு அழும் குழந்தைகள் – இன்றைய நினைத்தேன் வந்தாய் அப்டேட்

Ninaithen Vandhai update : நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில் குழந்தைகளை கட்டிப்பிடிக்க இந்து ஆசைப்பட்டபோதும் அது முடியாமல் போக அவள் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து அழுகிறாள். அப்போது சுடரின் திடீர் என்ட்ரி அடுத்த புயலை கிளப்புகிறது.

சன்ரைசர்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல..! 5 பாயிண்ட்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் குவாலிஃபையர் இரண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதும். எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இருப்பினும், சன்ரைசர்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையரில் ராஜஸ்தான் அணி அவ்வளவு எளிதாக எல்லாம் வெற்றி பெற முடியாது. ஏன் என்பதற்கான 5 … Read more

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி: தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்…

சென்னை: முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணிக் கட்சி என்று பாராமல், கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கை … Read more