கோவையில் மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி பலி: பூங்காவில் விளையாடிய போது சோகம்

கோவை: கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகம் உள்ளது. இக்குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியில் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. இப்பூங்காவுக்கு இதே குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜீயானஸ் ரெட்டி (4) வைபோக பிரியா என்ற வியோமா (8) ஆகியோர் நேற்று (மே 23) மாலை விளையாடச் சென்றனர். அங்குள்ள … Read more

‘பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்’ – மேற்கு வங்க ஆளுநர் மீது புகார்

திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு புகார் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தனது அலுவலகத்தைப் பயன்படுத்துகிறார். குறிப்பாக, கடந்த ஜனவரி 23-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ராமர் கோயிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர், பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் அக்கட்சியின் சின்னத்தை தனது மார்பில் பொருத்தி இருந்தார். ஆளுநரின் இந்த செயல் … Read more

“வேலைகளை ஏஐ அழித்துவிடும்; அவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாகும்” – எலான் மஸ்க்

பாரிஸ்: ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் சூழ்ந்துள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்துவதுபோல் பேசியுள்ளார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். “எல்லா வேலைகளையும் ஏஐ அழித்துவிடும். எதிர்காலத்தில் வேலை செய்வது என்பது அவரவர் விரும்பி தெரிவு செய்துகொள்ளும் பொழுதுபோக்கு அம்சம் போல் ஆகிவிடும்” என்று எலான் மஸ்க் பேசியுள்ளது விவாதப் பொருளாகியுள்ளது. பாரிஸில் வியாழக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய எலான் மஸ்க், “ஏஐ தொழில்நுட்பத்தால் அனைத்து வேலைகளும் அழிக்கப்படும். ஒருகட்டத்தில் நம் … Read more

கார்த்திகை தீபம்: கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.. அடுத்தடுத்து ஐஸ்வர்யா செய்யும் சூழ்ச்சி

Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

IPL 2024 : விராட் கோலியை தூக்கினால் ஆர்சிபி கப் அடிக்கும் – கெவின் பீட்டர்சன்

ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பிளே ஆஃப் சுற்றில் தோல்வியை தழுவியது. இதனால் அந்த அணியின் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற கனவும் 17 ஆண்டுகளைக் கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த அணியில் ஐபிஎல் தொடங்கியது முதல் ஆடிக் கொண்டிருக்கும் விராட் கோலிக்கும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஆசை இந்த ஆண்டும் கனவாகே போய்விட்டது. அவரும் இளவு காத்த கிளி போல் … Read more

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 மிச்சமாகும்…!

இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய போட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும், அவர்கள் வேறு நெட்வொர்க்குக்கு மாறாமல் இருக்கும் பொருட்டு சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஏர்டெல் மற்றும் ஜியோ 5ஜி நெட்வொர்க் வழங்க தொடங்கிவிட்ட நிலையில், வோடாஃபோன் மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கான நெருக்கடியை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது. இதனால் வோடாஃபோன் ஐடியா சிறப்பு சலுகையை கொண்டு வந்திருக்கிறது.   இதற்குகாரணம், Vi இன் பயனர் எண்ணிக்கை … Read more

தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மேலும் 2 நீதிமன்றங்களுக்கு அனுமதி

சென்னை: தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை  கும்பகோணம் நீதிமன்றம் மட்டுமே விசாரித்து வந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு  நீதிமன்றங்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது. ஆன்மிக மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோயில்களில் உள்ள பழமையான சிலைகள் திருடப்பட்டு வருவது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.   இதை தடுக்க தமிழ்நாடு அரசு சிலை தடுப்பு பிரிவை அமைத்து, திருட்டப்பட்ட சிலைகளை மீட்டு வருகிறது. இதிலும் பல முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருந்து ஏறத்தாழ … Read more

தொடர்ந்து தொந்தரவு செய்த கணவர்.. கன்னத்தில் அடித்த அமலா பால்.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: அமலா பால் தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதனையடுத்து அவர் இரண்டவது திருமணம் செய்துகொண்டார். இப்போது கர்ப்பமாகவும் இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 'ராம் ராம்' என்று சொல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் – பிரதமர் மோடி

சண்டிகார், அரியானா மாநிலம் மகேந்திரகாரில் பிரதமர் மோடி நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “‘இந்தியா’ கூட்டணி, வகுப்புவாதம், சாதியவாதம், வாரிசு அரசியல் நிறைந்ததாக இருக்கிறது. அரியானாவில் ஒவ்வொருவரும் ‘ராம் ராம்’ என்று சொல்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ‘ராம் ராம்’ என்று சொல்பவர்களை கைது செய்து விடும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தவரை, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை. ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பையும் நிராகரித்தது. காங்கிரஸ் இளவரசரின் … Read more

தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும்

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த … Read more