‘இந்து தமிழ் திசை – அன்பாசிரியர் 2023' விருது: விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 15

சென்னை: ‘அன்பாசிரியர் 2023’ விருதுகளை வழங்க ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பெருமையுடன் காத்திருக்கிறது. மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், மாறுபட்ட சிந்தனையோடு, புதுமை உணர்வோடு மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி,நற்பண்புகளைப் போதித்து,பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதே ‘அன்பாசிரியர்’ விருது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள். தொடர்ச்சியாகக் கற்பித்துவரும் தலைமை … Read more

“பிரஜ்வல் வழக்கில் ஒத்துழைக்கவில்லை” – மத்திய அரசு மீது க‌ர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் புகார்

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என க‌ர்நாடக உள்துறை அமைச்சர் ப‌ரமேஸ்வர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச‌ வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியானது. அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் … Read more

சென்னை : காளிகாம்பாள் கோயில் அர்ச்சகரின் காமகளியாட்டம் – காவல்துறையிடம் 3 பேர் வாக்குமூலம்

சென்னையில் காளிகாம்பாள் கோயிலுக்கு வந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். 

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூர்கள் அமைக்க அனுமதி

சென்னை தேசிய மருத்துவ ஆணையம் தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.  சென்ற வருடம் இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மனுசுக் மாண்டவியாவை தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அப்போது அவர், ”தமிழகத்தில் ம பெரம்பலூா், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம் ஆகிய … Read more

வெற்றிமாறன் மீது கோபத்தில் இருக்கிறாரா சூர்யா?.. வாடிவாசல் படத்தில் டோலிவுட் ஹீரோ நடிக்கப் போறாரா?

சென்னை: நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பாரா? மாட்டாரா? என்கிற சிக்கல் மீண்டும் கிளம்பியிருப்பதாக திரை வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. ஏற்கனவே வணங்கான் படத்தை அறிவித்து விட்டு அந்த படத்தை தயாரிக்கவும் முன் வந்த சூர்யா திடீரென பாலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக படத்தில் இருந்து மொத்தமாக விலகினார். அருண் விஜய்யை வைத்து உருவான வணங்கான் திரைப்படம்

வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம்: புதுகை காவலரிடம் 7 மணி நேரம் விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக காவலரிடம் சிபிசிஐடி போலீஸார் நேற்று 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருப்பதாக கடந்த 2022 டிசம்பர் 26-ம் தேதி தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த சம்பவத்தில் நேரடி சாட்சி யாரும் … Read more

பூத்வாரியாக வாக்குப்பதிவு விவரம் வெளியிட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம்

புதுடெல்லி: பூத்வாரியாக முகவர்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17சி படிவத்தை வெளியிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 17சி படிவ விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய சட்டவிதிகளின் படி கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி ஏடிஆர், காமன் காஸ் ஆகிய தொண்டு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. … Read more

Jayam Ravi: தனி ஒருவன் 2 படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாகும் பாலிவுட் ஹீரோ.. சூட்டிங் அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான சைரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது. படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் அடுத்ததாக ஜெனீ, பிரதர் மற்றும் காதலிக்க நேரமில்லை படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

“அதிமுக மா.செ.க்கள் மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்” – வி.வி.ராஜன் செல்லப்பா தகவல்

மதுரை: “அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் எப்போது வேண்டுமெனாலும் நடக்கலாம்” என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான வி.வி.ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349-வது சதய விழாவையொட்டி வியாழக்கிழமை மதுரை ஆணையூரில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெண்கல சிலைக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் சொல்லப்பா கூறியது: “அதிமுகவுக்கு பழனிச்சாமி ஒற்றை தலைமையாக, ஒப்பற்ற தலைமையாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் … Read more

சொகுசு கார் விபத்து: புனே சிறுவனின் ஜாமீன் ரத்து

புனே: கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவில் அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 5-ம் தேதி வரையில் அவரை கண்காணிப்பு இல்லத்தில் வைக்க புதன்கிழமை அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புனேவின் கல்யாணி நகர் பகுதியில் ‘Porsche Taycan’ சொகுசு காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தினார் அந்த சிறுவன். விபத்தை தொடர்ந்து அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து, காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். இருந்தும் அடுத்த 15 … Read more