வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள்: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரத சாஹூ ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வியாழக்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 5 கட்ட தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், 6ம் கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெறுகிறது. அடுத்ததாக இறுதி கட்டத்தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. மக்களவை தேர்தலை பொருத்தவரை முதல் கட்டத்தில் தமிழகத்தில் … Read more

தானே ரசாயன ஆலையில் கொதிகலன் வெடித்து 7 பேர் உயிரிழப்பு; 48 பேர் காயம்

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் ஆம்பர் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை பகல் நேரத்தில், தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாது. இதனால், தொழிற்சாலையில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியது. தொழிற்சாலையில் மூன்று முறை … Read more

தீவுகளைச் சுற்றி போர் பயிற்சி, எச்சரிக்கை… – தைவானை ‘மிரட்டும்’ சீனா

தைபே: தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், தைவானைச் சுற்றி இரண்டு நாள் (மே 23,24) ராணுவப் பயிற்சியை சீனா தொடங்கியுள்ளது. இதனை தைவான் கடுமையாக கண்டித்துள்ளது. சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் … Read more

தனிஒருவன் 2 படத்தில் வில்லன் இவர்தான்! டாப் நடிகையோட கணவராச்சே…

Thani Oruvan 2 Villain : மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.   

மலையாளப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

சென்னை பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மஞ்சும்மல் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தமிழகத்தில் உள்ள கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான மஞ்சும்மல் பாய்ஸ், மொழிகள் தாண்டி அனைத்து மாநிலங்களில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்து. உலகெங்கும் பரவலாக ரசிக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ. 200 கோடிகளும் மேல் வசூலித்துள்ளது. ஒரு சர்வைவல் படத்திற்கான கச்சிதமான திரைக்கதையுடன், நட்பின் வலிமையைப் பேசிய மஞ்சும்மல் பாய்ஸ் தமிழ் ரசிகர்களின் இதயங்களை … Read more

Actor Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் ஏஸ் படம்.. படக்குழு வெளியிட்ட க்யூட் போட்டோஸ்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி -ஆறுமுக குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஏஸ். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படம் சூதாட்டத்தை மையமாகக் கொண்ட படம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் இணைந்துள்ளார்.7Cs என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும்

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும்மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்இ சப்ரகமுவஇ மத்தியஇ வடமேல்இ தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் … Read more

எண்ணூர்: `ஆலையைத் திறந்தால் போராட்டம் வெடிக்கும்' – பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பும் மக்கள் கொதிப்பும்!

அமோனியா வாயு கசிந்த விவகாரத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் எண்ணூர் தனியார் உர ஆலையை தமிழ்நாடு அரசின் அனுமதிபெற்ற பின் செயல்பாட்டுக்குக் கொண்டு வரலாம் என்ற தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு, எண்ணூர் பகுதி மக்களும் சூழலியலாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். வாயு கசிவு ஏற்பட்ட பகுதி எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையிலுள்ள ‘கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட்’ நிறுவனத்திலிருந்து கடந்தாண்டு டிசம்பர் 26-ம் தேதி, விஷத்தன்மை கொண்ட அமோனியா வாயு கசிந்தது. இதனால் எண்ணூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரியகுப்பம், … Read more

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மழைநீர் புகாதவாறு குழாய்கள் அமைப்பு: பொதுப் பணித்துறை தகவல்

மதுரை: “மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மீண்டும் மழைநீர் புகாதவாறு மழைநீர் குழாய்கள் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது” என்று நூலகத்தில் இன்று ஆய்வு செய்த பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ் உறுதியளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் சார்பில் குழந்தைகளுக்கான சிறப்பு கோடைகால பயிற்சி முகாம்கள் இங்கு, நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த பயிற்சி முகாமில் பாட்டுப் பாடுதல், ஒயிலாட்டம், பரதம், ஓவியம், … Read more

“நான் தாக்கப்பட்டபோது கேஜ்ரிவால் வீட்டில்தான் இருந்தார்” – ஸ்வாதி மாலிவால் விவரிப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டில் மே 13-ம் தேதி தான் தாக்கப்பட்டபோது, அவர் வீட்டில் இருந்தார் என்று தாக்குதலுக்கு உள்ளான ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மாலிவால், கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளரான பிபவ் குமாரால் கடந்த 13-ம் தேதி தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது: மே 13 அன்று … Read more