பிரச்சாரத்தின்போது சாதி, மத பேச்சுகளை தவிர்க்க வேண்டும்: பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: தேர்தல் பிரச்சாரங்களின்போது சாதி, மதம் குறித்த வெறுப்பு பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தேர்தல் பாரம்பரியத்தை பாதிக்கக்கூடிய வகையில் பிரச்சாரம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தலை 7 கட்டங்களாக நடத்தி முடிக்க திட்டமிட்ட தேர்தல் ஆணையம் இதுதொடர்பான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. திட்டமிட்டபடி, மக்களவை தேர்தலில் இதுவரை 5 … Read more

மகளிர் குழுக்கள் மூலம் பள்ளி மாணவர் சீருடை தையல் பணி

சென்னை தமிழக அரசு சோதனை முறையில் மகளிர் குழுக்கள் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடை தையல் பணியை வழங்க உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தையல் பணிகள் மேற்கொள்ளும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் முதல்கட்டமாக  சோதனை அடிப்படையில் 50 பள்ளிகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர் அனைத்து பள்ளிகளுக்கும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சீருடையின் … Read more

RJ Balaji: ஒரு மொக்க படத்துல நடிச்சா.. அது அதோட நிக்காது.. ஆர்ஜே பாலாஜி பேட்டி!

சென்னை: ஆரம்பத்தில் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஒரு மொக்க படத்தில் நடித்தால், அது அதோட நிக்காது, பல நல்ல படத்தின் வாய்ப்பை கெடுக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி

தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கேரளாவில் சிலந்தி ஆறு தடுப்பணை கட்டும் பணி தீவிரம்

உடுமலை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணியை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு பாம்பாறு, சின்னாறு, தேனாறு, சிலந்தி ஆறு ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும். இந்நிலையில், வட்டவடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டிவருகிறது. முதல்கட்டமாக ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 120 அடி நீளம், 10 அடி … Read more

மேற்கு வங்கத்தில் ஓபிசி பட்டியலில் இருந்து பல பிரிவினர் நீக்கம்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கொல்கத்தா: சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இட ஒதுக்கீடு சட்டம் 2012-ன் கீழ் மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் தவிர) சான்றிதழ் பெற்றவர்களின் ஓபிசி அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. நீதிபதிகள் தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் ராஜசேகர் மந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. தீர்ப்பில் கூறி யிருப்பதாவது: கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியிலிருந்து 2012-ம் ஆண்டு மே 11-ம் … Read more

பாலஸ்தீன அரசை அங்கீகரித்த ஐரோப்பிய நாடுகளில் இருந்து தூதரை திரும்ப பெற்றது இஸ்ரேல்

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்து, நார்வே,ஸ்பெயின் ஆகியவை அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடுகளிலிருந்து தனது தூதர்களை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல்ராணுவம் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இருதரப்பு மோதலில் அப்பாவிகள் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்த போருக்கு உலக நாடுகள்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா.வும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது. … Read more

இரண்டு விஜய்கள்.. பக்கா ஆக்‌ஷன்..GOAT ரகசியம் பகிர்ந்த நடிகர்.. வேற லெவல்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருக்கிறார். ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்று அறிவித்துவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. இப்போது அவர் GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அமெரிக்காவில் இப்போது நடந்துவருகின்றன. தனக்கான பணிகளை முடித்துவிட்டு விஜய் நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து

கோவையில் இடி, மின்னலுடன் கனமழை: சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை: கோவையில் இன்று (மே 22) மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (மே 22) காலை முதல் மாலை வரை மழை பெய்யவில்லை. அதைத் தொடர்ந்து இன்று (மே 22) மாலை வழக்கம் போல் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரம் மிதமான மழையாக பெய்தது. அதைத் தொடர்ந்து இடி, … Read more