`தமிழர்களிடம் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால்..!' – எச்சரிக்கும் சீமான்

பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஒடிசாவில் பூரி ஜெகந்நாத் கோயிலில் வழிபட்டுவிட்டு பின்னர் பிரசாரத்தில் பேசுகையில், ஆறு ஆண்டுகளுக்கு முன் தொலைந்த கோயில் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டிலிருப்பதாகவும், நவீன் பட்நாயக் அரசு அதை மறுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அடுத்தநாளே, தமிழர்கள்மீது திருட்டுப்பழி சுமத்துவதா என்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என கண்டனம் செய்தார். ஸ்டாலின் – மோடி இந்த நிலையில் நாம் … Read more

ராகுல் காந்தியை செல்லூர் ராஜூ பாராட்டியது அதிமுக கருத்து இல்லை: ராஜன் செல்லப்பா

மதுரை: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை செல்லூர் ராஜூ பாராட்டியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், அது அதிமுகவின் கருத்து இல்லை என்றும் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பால்குடம் சுமந்து பக்தர்களுக்கு அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான ராஜன் செல்லப்பா இதனை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் … Read more

“என்னை பூமிக்கு அனுப்பியதே அந்த பரமாத்மா தான்!” – பிரதமர் மோடி

வாராணசி: “நான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை, என்னை இந்த பூமிக்கு அனுப்பியது அந்த பரமாத்மா தான்” என்று பிரதமர் மோடி கூறியது வைரலாகி வருகிறது. மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வாராணசி தொகுதியில் போட்டியிடுகிறார். வாராணசியில் கடைசி கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, ஊடகங்களுக்கும் பேட்டியளித்து வருகிறார். அதன்படி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த மோடியிடம், நிருபர் ‘நீங்கள் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றுகிறீர்கள். உங்களின் ஆற்றலுக்கு என்ன காரணம்?’ … Read more

இனி சென்னையில் ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்

சென்னை இனி சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.   சென்னையை அடுத்த நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது., தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாக இங்கு பராமரிப்பு பணிகள் நடக்க இருக்கிறது. எனவேவருகிற 24 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 2 ம் தேதி வரை 10 நாட்களுக்கு சென்னையில் 4 மண்டலங்களில் ஒரு … Read more

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி… கவலையில் ரசிகர்கள்!

சென்னை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அகமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கிற்கு காத்திருப்பு காலம்..?

ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள புதிய எக்ஸ்ட்ரீம் 125R பைக் பற்றி முதன்முறையாக நாம் தான் படத்தை வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் இந்த பைக்கிற்கு வரவேற்பு மிக அமோகமாக உள்ளதை தொடர்ந்து தற்பொழுது இந்த மாடலை டெலிவரி பெற 15 முதல் 30 நாட்கள்  வரை காத்திருக்க வேண்டி உள்ளதாக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை, பெங்களூரு, மும்பை  உள்ளிட்ட சில முன்னணி மெட்ரோ நகரங்களில் 10 முதல் 15 நாட்கள் என சொல்லப்படுகின்ற காத்திருப்பு காலம் … Read more

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பு

மட்டக்களப்பில் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளைப் பிரசவித்துள்ளதாகவும், தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக இன்று (22) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாறஞ்ஜினி கணேசலிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (22) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஏப்பிரல் மாதம் 5ம் திகதி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சோ்ந்த 25 வயதுடைய ஹரிகரன் கிருஷ்ணவேணி என்பவர், வெளிநாட்டில் இருக்கும் போதே கருத்தரித்துள்ளார். அதனால் 8 … Read more

மொத்த குடும்பமும் காதலுக்கு எதிர்ப்பு… காதலனுடன் சேர்ந்து தந்தையைக் கழுத்தறுத்துக் கொன்ற சிறுமி!

உத்தரப்பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில், கர்முல்லாபூர் கிராமத்தில் 17 வயது சிறுமி, தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையைக் காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்துக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, கொலைசெய்யப்பட்டவரின் பெயர் அஜய் பால் (50). கிராம வளர்ச்சி அலுவலரான இவருக்கு 17 வயதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறார். இந்தச் சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்திருக்கின்றனர். இதைத் தெரிந்துகொண்ட அஜய் பால், காதலை விட்டுவிட்டு அந்த இளைஞரிடம் … Read more

90 நாட்களுக்கு பிறகு பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறப்பு

கோவை: பில்லூர் அணையிலிருந்து 90 நாட்களுக்கு பிறகு இன்று மாலை (மே 22) மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, அமைந்துள்ள பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்றை மையப்படுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான 10-க்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையளவு குறைந்தது, அதிக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. … Read more

இந்தியக் கடலோர காவல் படையில்  மேம்படுத்தப்பட்ட ‘டோர்னியர் – 228’ ரக விமானங்கள் இணைப்பு

சென்னை: இந்தியக் கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட இரண்டு ‘டோர்னியர் – 228’ ரக விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை வந்த இந்த விமானங்களுக்கு பராம்பரிய முறையில் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய படைப் பிரிவில் 2 அதிநவீன ‘டோர்னியர் – 228’ விமானங்கள் இணைக்கப்பட்டு, அதன் விமானப் படை பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த விமானங்கள் கான்பூரில் இருந்து இன்று சென்னை வந்தடைந்தன. இந்த விமானங்கள் பாரம்பரிய முறையில் … Read more