நடிகர் ஷாருக்கான் வெப்ப வாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி…

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் வெப்ப வாதத்தால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக நடிகர் ஷாருக்கான் கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ப்ளே ஆப் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று விளையாடிய நிலையில் போட்டி முடிந்து விடுதிக்கு திரும்பிய ஷாருக்கானுக்கு இன்று காலை உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து இன்று பிற்பகல் அவர் மருத்துவமனையில் … Read more

ராமராஜனின் சாமானியன் படம் எப்படி இருக்கு.. பிரபலங்கள் சொல்வது என்ன?

சென்னை: ராமராஜன் சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் மக்கள் அவரை மறக்காமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இப்படியான நிலையில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பின் சாமானியன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், ப்ரீமியர் ஷோ இன்று சினிமா பிரபலங்களுக்காக திரையிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். ராமராஜன் முன்னணி

இந்தியாவில் புதிய கியா கார்னிவல் எம்பிவி அறிமுக விபரம்

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற நான்காம் தலைமுறை 2024 கியா கார்னிவல் எம்பிவி காரின் சாலை சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதனால் பண்டிகை காலத்துக்கு முன்பாக இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்க துவங்கலாம். கார்னிவல் எம்பிவி ரக மாடலில் 3.5 லிட்டர் பெட்ரோல் V6 என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் பெற்றிருந்தாலும், இந்திய சந்தைக்கு  200bhp மற்றும் 400Nm டார்க் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் … Read more

Porsche Crash: `ஜாமீன் உறுதி, ஆனால்…' – சிறுவனுக்கு விதிக்கப்பட்ட 7 நிபந்தனைகள் என்னென்ன?

மகாராஷ்டிராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 வயது சிறுவன், அவரின் தந்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த ரூ.2.5 கோடி மதிப்பிலான விலையுயர்ந்த Porsche காரில் மதுபோதையில் அதிவேகமாகச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் விசாரணையில், அந்த சிறுவன் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், தான் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்காக தன் நண்பர்களுக்கு பாரில் (BAR) சரக்கு பார்ட்டி வைத்து மதுபோதையில் திரும்பியபோது விபத்து ஏற்பட்டது என்றும் … Read more

மோசமான வானிலையால் அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது: பயணிகள் வாக்குவாதம்

சென்னை: அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால் அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. விமான சேவை திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து அந்தமானுக்கு ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புதன்கிழமை காலை புறப்பட்டது. விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர். மதியம் அந்தமான் வான்வெளியை விமானம் நெருங்கிய போது, கடுமையான சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியதால், அந்தமானில் விமானம் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை … Read more

மேற்கு வங்கத்தில் 2010-க்குப் பின் வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களும் ரத்து: கொல்கத்தா ஐகோர்ட்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2010-க்குப் பின் வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களும் ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் தவிர) (சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இடஒதுக்கீடு) சட்டம், 2012-க்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் மீது நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, இந்த வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் ராஜசேகர் … Read more

கார்த்திகை தீபம் அப்டேட்: வீடு மாறிய அபிராமி குடும்பம்.. கார்த்திக்கால் உச்சகட்ட சந்தோஷத்தில் ரம்யா

Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

'கூட்டுச் சதி…' சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதி தாயார் பரபரப்பு புகார் – என்ன விஷயம்?

Savukku Shankar Latest Updates: கள்ளக்குறிச்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் காயமடைந்த 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றனர்…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-300ER விமானம் மோசமான வானிலை காரணமாக 6000 அடி பள்ளத்தில் தள்ளப்பட்டது. லண்டனில் இருந்து நேற்று சிங்கப்பூர் சென்ற SQ321 என்ற இந்த விமானம் திடீரென திசைமாறியதை அடுத்து பயணிகள் பலரும் இருக்கையில் இருந்து தூக்கிவீசப்பட்டனர். இதில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் இருந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஸமிதிவெஜ் ஸ்ரீநாகரின் … Read more

நார்வே, அயர்லாந்தை தொடர்ந்து.. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க சர்வதேச நாடுகள் திட்டம்! மாறும் சூழல்

காசா: பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ள நிலையில், சர்வதேச சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மேலும் சில ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1988ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரம் தொடர்பான குரல்கள் தீவிரமாக எழுந்து வருகின்றன. இதே ஆண்டில்தான் பாலஸ்தீன விடுதலை அமைப்பு பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான அறிவிப்பை Source Link