ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ஈரான் தூதரகத்திற்குச் சென்று ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார்

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று (22) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம் வரவேற்றது. ஈரான் ஜனாதிபதியின் மறைவு குறித்து ஈரான் தூதுவர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் இரங்கல் குறிப்பை பதிவிட்ட பின்னர், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு ஈரான் … Read more

Yash Dayal: “நாங்க யாஷோட மேட்ச் பார்க்க மாட்டோம்…”- யாஷ் தயாளின் பெற்றோர் பகிர்வு

“ஈ சாலா கப் நம்தே” என்று ஒவ்வொரு முறையும் கூச்சலிட்ட ஆர்.சி.பி அணியின் ரசிகர்களுக்கு இம்முறை கண்டிப்பாக ‘கப்’ நமக்குதான் என்று நம்பிக்கை தரும் வகையில், கடந்த 6 போட்டிகளில் அந்த அணி வெற்றியை மட்டுமே நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இறுதியாக மே 18 அன்று, சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி மேட்ச் பரபரப்பாக நடைபெற்றது. இறுதியில் ஆர்.சி.பி அணி, 27 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணியை வீழ்த்தியது மட்டுமில்லாமல், ப்ளே- ஆஃப்ஸ்-க்கும் முன்னேறியுள்ளது. csk vs rcb … Read more

பாலியல் புகார்: கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

சென்னை: முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலோஷேத்ரா நடனப்பள்ளி மற்றும் கல்லூரியில் கடந்த 1995-2001 காலகட்டத்தில் பயின்ற தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவி ஒருவர், அந்த கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீஸில் … Read more

ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்ததாகக் கூறப்படும் நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம், ஜனவரி 31ம் தேதி ஹேமந்த் சோரனை கைது செய்தது. இதை எதிர்த்தும், 2024 மக்களவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளவும் இடைக்கால ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால … Read more

“விஜய் சேதுபதி திரையில் பார்ப்பதைவிடவும் நேரில் சிறந்த மனிதராக இருக்கிறார்" – ராம் கோபால் வர்மா

கதாநாயகனாக, வில்லனாக பல்வேறு பரிமாணங்களில் நடித்து கோலிவுட்டில் வலம் வந்த விஜய் சேதுபதி தெலுங்கு, இந்தியிலும் தனது நடிப்பால கவனம் ஈர்த்து தொடர்ச்சியாகப் பல படங்களில் பிஸியாகியிருக்கிறார். குறிப்பாக, சமீபத்தில் பாலிவுட்டில் அவர் நடித்த ‘ஃபார்ஸி’, ‘மேரி கிறிஸ்துமஸ்’, படங்கள் விஜய்சேதுபதிக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. நடிகர் சூர்யாவுடன் ராம் கோபால் வர்மா இந்நிலையில் அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து வித்தியாசமான படங்களை இயக்கிய, தேசிய விருது உள்ளிட்ட … Read more

ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடி… கில்லாடி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்… Realme 6T GT முழு விவரம்

Realme GT 6T Price And Specifications: ரியல்மீ (Realme) நிறுவனத்தின் மொபைல்கள் சந்தையில் இளைஞர்களால் மிகவும் விரும்பப்படும் பிராண்டாக உள்ளது. அந்த வகையில், பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த Realme GT 6T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Realme நிறுவனத்தின் GT சீரிஸில் Realme GT 2, Realme GT 2 Pro, Realme GT Neo 2, Realme GT Neo 3, the Realme GT Neo 3T உள்ளிட்ட மாடல்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றை தொடர்ந்து, … Read more

இந்தோனேசியாவில் இருந்து அதானி நிறுவனம் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரி வாங்கியதில் ரூ. 6000 கோடி மோசடி…

இந்தோனேசிய துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மதிப்பை இந்திய துறைமுகத்திற்கு வந்து இறங்கும்போது பலமடங்கு உயர்த்திக்காட்டி மோசடியில் ஈடுபடுவதாக அதானி நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று இந்திய வருவாய் புலனாய்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு அளித்துள்ளது. இந்த நிலையில் திட்டமிட்ட குற்றங்கள், ஊழலை அம்பலப்படுத்தும் ஓசிசிஆர்பி (OCCRP) என்ற சர்வதேச அமைப்பு அதானி நிறுவன நிலக்கரி ஊழலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. … Read more

கற்றது தமிழ் படத்தால் 2 கோடி நஷ்டம்..ஆனால், மனதிருப்தி இருக்கு.. நடிகர் கருணாஸ்!

சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில், ஜீவா, அஞ்சலி நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் கற்றது தமிழ். இத்திரைப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் இருந்தாலும், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதுகுறித்து பேசிய நடிகர் கருணாஸ், கற்றது தமிழ் படத்தால், 2 கோடியே 20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு சூர்யா நடித்த

டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி அமெரிக்கா வரலாற்று வெற்றி

வாஷிங்டன், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்க உள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் போட்டிகள் நடைபெற உள்ளன. முன்னதாக, வங்காளதேச கிரிக்கெட் அணி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, அமெரிக்கா – வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் … Read more

ஈரான் ஹெலிகாப்டர் விபத்து; தளவாட சிக்கல்களால் விசாரணையில் உதவ முடியவில்லை – அமெரிக்கா

வாஷிங்டன், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உசைன் உள்பட 9 பேர் நேற்று அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. இந்த விபத்து தொடர்பான விசாரணையை ஈரான் அரசு தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் மோசமான வானிலை நிலவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், … Read more