ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் அய்யர் அதிரடி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கொல்கத்தா அணி

ஆமதாபாத், 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஆமதாபாத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் ஷர்மாவும் ஐதராபாத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். அபாயகரமான ஜோடியாக வர்ணிக்கப்படும் இவர்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்திலேயே ‘செக்’ வைத்தனர். டிராவிஸ் ஹெட் (0), மிட்செல் ஸ்டார்க்கின் பந்தில் போல்டு … Read more

நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க சர்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை; பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

ஆம்ஸ்டர்டாம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞரான கரிம் கான், இஸ்ரேல் மற்றும் காசா முனையில் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை மந்திரி யோவாவ் காலண்ட், ஹமாஸ் தலைவர்கள் யெஹ்யா சின்வார், முகமது தெயிப் மற்றும் இஸ்மாயில் ஹானியே ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலிய தலைவர்கள் … Read more

சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை – பிரச்னையும் விளைவும்?!

இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டி வருவது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கேரளா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘சிலந்தி ஆற்றில் கேரளா அரசு தடுப்பணையைக் கட்டிவிட்டால், அமராவதி அணைக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படும். அந்த பாசனத்தை நம்பியிருக்கும் … Read more

நல வாரியங்களில் பதிவு செய்த 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் மாயம்: நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழக தொழிலாளர் நலத்துறையின்கீழ் செயல்படும் கட்டுமானம் உள்ளிட்ட உடல் உழைப்பு மற்றும் அமைப்புசாரா நல வாரியங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்கள் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கரோனா பேரிடர் காலத்தில் முந்தையஅதிமுக அரசு யாரிடமும் கலந்துபேசாமல், இதுதொடர்பான அனைத்து பணிகளையும் ஆன்லைன்மூலம் மேற்கொள்வதாக தன்னிச்சையாக முடிவு செய்தது. … Read more

புரி ஜெகந்நாதர் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விரதம்: சாம்பித் பத்ரா அறிவிப்பு

புவனேஸ்வர்: புரி ஜெகந்நாதர் குறித்து தான் வெளியிட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விரதம் இருக்கப் போவதாக பாஜக மூத்த தலைவரும், வேட்பாளருமான சாம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக சாம்பித் பத்ரா களமிறங்கியுள்ளார். இதையொட்டி நேற்று முன்தினம் புரி வந்த பிரதமர் மோடி, மிகப்பிரம்மாண்டமான வாகன பேரணியில் கலந்துகொண்டார். வாகனப் பேரணி முடிந்த நிலையில், செய்தியாளர்களிடம் சாம்பித் பத்ரா பேசும்போது புரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் தீவிர … Read more

தமிழக பாஜக பொருளாளரிடம் 2 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை

சென்னை தமிழக பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் 2 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி ரொக்கம் சிக்கியது. இது பாஜக நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டது என புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணவிவகாரம் தொடர்பாக பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் … Read more

கிச்சா சுதீப்புக்கு இவ்ளோ பெரிய மகளா?.. 20வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாழ்த்திய அப்பா!

பெங்களூர்: கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்புக்கு 52 வயதாகிறது. ராஜமெளலி இயக்கத்தில் நானி, சமந்தா நடித்த ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்து பான் இந்தியா அளவில் ரீச் ஆனார். ‘பாகுபலி’ படத்திலும் கட்டப்பா சத்தியராஜுடன் ஒரு காட்சியில் கேமியோ ரோலில் நடித்திருப்பார். தமிழில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ‘முடிஞ்சா இவன புடி’ படத்தில்

நகரை அழகுப்படுத்த வைத்த பூந்தொட்டியில் கஞ்சா செடி – பொதுமக்கள் அதிர்ச்சி

பாலக்காடு, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு நகராட்சி சார்பில், நகரில் உள்ள முக்கிய சாலைகளை அழகுப்படுத்தும் வகையில் சாலையோரம் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை நகராட்சி பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்குள்ள ஒரு பூந்தொட்டியில் கஞ்சா இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் நகராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நகராட்சி அதிகாரிகள், கலால் துறையினர் விரைந்து வந்து கஞ்சா செடி இருந்த பூந்தொட்டியை பறிமுதல் செய்தனர். 25 செ.மீ. … Read more

வாக்குகளுக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதா? – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: வாக்குகளுக்காக தமிழக மக்களைஅவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பிரச்சாரத்தில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும், தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிக்க வேண்டும். இதில், முன்னுதாரணமாக திகழ வேண்டிய பிரதமர் மோடி,வெறுப்பு பேச்சுகள் மூலம் மக்கள் இடையே பகை உணர்வையும், மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு … Read more

கேரளாவில் உடல் உறுப்புக்காக ஆள்கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது

திருவனந்தபுரம்: சர்வதேச அளவில் மனித உறுப்புகளை விற்கும் கும்பலை சேர்ந்த கேரள இளைஞர் சபித் நாசர் (30) நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபித் நாசர். இவர், கேரளாவை சேர்ந்த பின்தங்கிய மக்களை ஏமாற்றி வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருந்து சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்துள்ளார். கடந்த சில மாதங்களில் மட்டும் கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 பேரை அவர் வெளிநாடுகளுக்கு … Read more