பாஜக – ஆர்.எஸ்.எஸ். இடையே அரசல் புரசலாக இருந்த உரசல் இப்போது வெட்டவெளிச்சமானது…

மோடி பிரதமராக பொறுப்பேற்ற இந்த பத்தாண்டுகளில் பாஜக – ஆர்.எஸ்.எஸ். இடையிலான உறவு. “ச்சீ…ச்சீ… இந்தப் பழம் புளிக்கும்” என்பது போல் உள்ளதாகக் கூறப்பட்டது. இது உண்மை என்பது, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி சுதந்திரமாக செயல்படும் அளவிற்கு வளர்ந்துவிட்டதாகவும் அது இனி ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் எனும் பேரினவாத அமைப்பின் கையைப் பிடித்து நடக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜெ.பி. … Read more

Actor Simbu: STR48 படத்தில் இணையும் பாலிவுட் நடிகைகள்.. கலர்புல் காம்பினேஷன்தான்.. ஆனா சூட்டிங்?

சென்னை: நடிகர் சிம்பு -தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது எஸ்டிஆர் 48 படம். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டிலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்ட சூழலில் தொடர்ந்து இந்த ஆண்டு மே மாதம் இன்னும் சில தினங்களில் நிறைவடையுள்ள சூழலிலும் படத்தின் சூட்டிங் குறித்த எந்தவிதமான அப்டேட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளது, இதனிடையே இந்த படத்திற்காக

நீலகிரியில் தொடரும் மழை: வாகனத்தில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்வதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று பெரும் சிரமத்தை உண்டாக்கி வருகிறது. இந்த நிலையில், உதகை ரயில் பாலத்தில் தண்ணீரில் சிக்கிய வாகனத்தில் தத்தளித்த சுற்றுலா பயணிகளை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக பனிப் பொழிவு மற்றும் மழையின்மை காரணமாக கடும் வறட்சி நிலவியது. கோடை மழையும் உரிய நேரத்தில் பெய்யாததால், வறண்ட காலநிலை நிலவியது. நீர் வரத்து இல்லாமல் நீர்த்தேக்கங்கள் வறண்டன. இந்நிலையில், … Read more

“5 கட்ட தேர்தல் முடிவில் இண்டி கூட்டணி தளர்ந்துவிட்டது” – பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: “மக்களவைத் தேர்தலில் வாக்களித்தோருக்கு நன்றி. 5 கட்ட தேர்தல் முடிவில் இண்டி கூட்டணி முற்றிலுமாக அதன் மதிப்பிழந்து, தளர்ந்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மேலும் மேலும் வலுவடைந்துள்ளது” எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏப்ரல் 19, 26,மே 7, 13 ஆகிய நாட்களில் 4 கட்ட தேர்தல் ஏற்கெனவே முடிந்த நிலையில், 5-வது கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. உத்தர பிரதேசம் 14, … Read more

சிலுசிலு சாரல் காத்து… பரவலாக பெய்துவரும் மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சாந்தோம், மயிலாப்பூர், அடையாறு, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அதேபோல் அம்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக கோடை வெயிலில் தவித்து வந்த சென்னை மக்களை இந்த சாரல் மழை குளிர்வித்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமராஜன் மகளுக்கு இப்படி ஒரு சோகமா?.. அவரே சொன்ன விஷயத்தை பாருங்க

சென்னை: ராமராஜன் 80களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். கிராமத்து பக்கம் ராமராஜனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. முக்கியமாக ஹீரோவாக மட்டுமே நடித்த ஒரே ஒரு கதாநாயகன் என்றால் அது ராமராஜன் மட்டும்தான். ஒருகட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பிறகு ஆளே காணாமல் போன அவர் இப்போது

தென்மேற்கு பருவமழை | சென்னை, திருச்சி, கோவைக்கு குறைவான மழை: வேளாண் பல்கலை. கணிப்பு

கோவை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக பெய்யும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பாண்டின் தென்மேற்கு பருவமழைக் காலத்துக்கான (ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை … Read more

வி.கே.பாண்டியன் மீது பிரதமர் மோடி மறைமுக விமர்சனம் – பின்னணி என்ன?

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஏராளமான கனிம வளங்கள் இருந்தபோதிலும், அம்மாநிலம் வறுமையில் இருப்பது வேதனை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஒடிசாவின் அங்குல் நகரில் பாஜக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: ஒடிசாவில் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. ஒடிசாவில் கனிம வளங்கள் ஏராளமாக இருந்த போதிலும் மக்கள் … Read more

ராகுல் காந்தியை புகழ்ந்த அதிமுக மூத்த தலைவர்

சென்னை அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்துள்ளார். தற்போது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நடந்துவரும் நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் மீதம் உள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் சாமானிய மக்களுடன் கலந்துரையாடுவது, பஸ் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் … Read more

பால்கனியில் விழுந்த குழந்தை..ஏன் இறந்தார் ரம்யா? சோஷியல் மீடியாவால் நடந்த கொடுமை!

சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த தாய் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவின் மனிதாபிமானமற்ற பேச்சுதான் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்தவர்