`அரக்கோணம் ஜி.ஹெச்சில் வெடிகுண்டு’ – போதையில் 100-க்கு போன் செய்த ஆசிரியர்… கைதுசெய்த போலீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் அரசு மருத்துவமனையில் `வெடிகுண்டு’ வைக்கப்பட்டிருப்பதாகவும், எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ இரண்டு முறை தொடர்புகொண்டு மர்ம நபர் ஒருவர் `உளறல்’ மிரட்டல் விடுத்திருக்கிறார். உளறல் பேச்சை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக அரக்கோணம் நகரப் போலீஸார் உஷார்ப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனை முழுவதுமாக சோதனை செய்யப்பட்டது. தீவிர சோதனையில் சந்தேகத்திற்கிடமாக எந்த விதமான பொருள்களும் சிக்கவில்லை. போன் கால் `புரளி’ என்பதை உறுதி செய்துகொண்ட போலீஸார், … Read more

ஈஞ்சம்பாக்கம் கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்துக்கு தடை: தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் திட்டத்துக்காக கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணி மேற்கொள்ள சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. மெரினா கடற்கரையைப் போலவே எண்ணூர் தொடங்கி கோவளம் வரையிலான 20 கடற்கரைகளை மேம்படுத்தும் நோக்கில், ‘சென்னை கடற்கரை மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டத்தை’ சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) செயல்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்தின் … Read more

உங்களின் 10 ஆண்டு கால பணிகளை பேசாமல் காங்கிரஸையே வசைபாடுவதா? – மோடிக்கு கார்கே கேள்வி

சண்டிகர்: பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசின் 10 ஆண்டு கால பணிகள் பற்றிக் கூறாமல், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையே வசைபாடிக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகியவை மிகவும் வளமான மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், இம்மாநிலங்களில் இன்னும் வேலையின்மை மற்றும் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது அரசின் 10 ஆண்டு காலப் பணி குறித்துப் பேசாமல், நாள் … Read more

Lok Sabha Election 2024: பாஜகவுக்கு கண்டிப்பாக 370 கிடைக்காது.. 270க்கு குறையாது -பிரசாந்த் கிஷோர்

Lok Sabha Election 2024: ஐந்து கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அடுத்த இரண்டு கட்ட வாக்குப்பதிவுக்கு முன், பாஜக கைப்பற்றும் இடங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் என்ன சொன்னார்.. அறிந்துக் கொள்ளுங்கள்

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு பெரும் அடி, கேப்டன் ஜோஸ் பட்லர் காயம்..

ENG vs PAK T20 Match: டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே டி20 தொடர் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் ஏற்பட்டுள்ளது. ஊடக செய்திகளின்படி, ஜோஸ் பட்லர் இங்கிலாந்து-பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேற வேண்டியிருக்கும். ஆனால் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதற்குள் ஜோஸ் பட்லர் உடல்தகுதியுடன் இருப்பாரா என்பதுதான் இங்கிலாந்து ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.  … Read more

Garudan: `நானும் சூரியும் சேர்ந்து சில படங்கள்தான் பண்ணியிருக்கோம்!' – நடிகர் விஜய் சேதுபதி

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘கருடன்’ படத்தில் நடித்திருக்கிறார் சூரி. இப்படம் வருகிற மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சசிகுமார், வெற்றி மாறன், விஜய் சேதுபதி, வடிவுக்கரசி, சூரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார், ” நான் பாலு மகேந்திர சார் கிட்ட கடைசி அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்க்கும்போதுவெற்றி மாறன் அண்ணன் அசோசியேட் … Read more

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட யூடியூபர் இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்… வீடியோவை அகற்றவும் உத்தரவு…

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட யூடியூபர் இர்பானுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அவர் வெளியிட்ட வீடியோவை அகற்ற யூடியூப் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவதற்கும் அறிவிப்பதற்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘இர்பான் வியூஸ்’ என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஃபுட் ரிவ்யூவர் இர்பான் தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய துபாய்க்கு சென்று பரிசோதனை செய்தார். அவருக்கு பெண் குழந்தை பிறக்க … Read more

Jayam Ravi: ஜெயம் ரவியின் கால்ஷீட் பிரச்சினை.. தொடர்ந்து தள்ளிப்போகும் காதலிக்க நேரமில்லை சூட்டிங்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்துக் கொண்டு நடித்து வருகிறார். கடந்தாண்டில் இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகின. இதில் பொன்னியின் செல்வன் 2 படம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக கை கொடுத்தது. ஆனால் இறைவன் படம் சொதப்பியது. இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா

யானை-மனித மோதலைக் கட்டுப்படுத்த இரண்டு மாதிரித் திட்டங்கள்

யானை-மனித மோதல் அதிகம் உள்ள கிராமங்கள் மற்றும் விளைநிலங்களைப் பாதுகாக்க, ‘தற்காலிக விவசாய மின் வேலி’ மற்றும் ‘கிராம மின் வேலி’ என்ற இரண்டு மாதிரித் திட்டங்களைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. காட்டு யானை-மனித மோதல்களை கட்டுப்படுத்த அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. இங்கு யானை … Read more

`மதுரையில் அழகிரி கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே நான் அஞ்சியதில்லை! – ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

“சையது கானின் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன், எதற்கும் தயாராக உள்ளேன்..” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார். ஆர்.பி.உதயகுமார் – ஓ.பி.எஸ் எடப்பாடி பழனிசாமியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அன்னதான விழாவை தொடங்கி வைத்த ஆர்.பி.உதயகுமார், செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரை மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி, நோய் தொற்று ஏற்படும் நிலையில் உள்ளது. கலைஞர் நூலகத்திற்குள் மீண்டும் … Read more