மீண்டும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ZX மற்றும் ZX (O) முன்பதிவு நிறுத்தம்

சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் எம்பிவி காரின் டாப் வேரியண்டுகளான ZX மற்றும் ZX (O) முன்பதிவு மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான தொடர் முன்பதிவின் காரணமாக தற்பொழுது 12 முதல் 15 மாதங்கள் வரை டெலிவரி பெற காத்திருக்க வேண்டிய நிலையில் தொடர்ந்து முன்பதிவினை பெறாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹைக்ராஸ் மாடலுக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு உள்ள நிலையில் தொடர்ந்து 173hp மற்றும் 209Nm வெளிப்படுத்தும் 2.0-லிட்டர், நான்கு-சிலிண்டர் … Read more

காலநிலை அனர்த்தங்களுக்கு நிதியளிக்கும் வேலைத்திட்டத்தில் துரதிஷ்டவசமாக உலக வட துருவ நாடுகள் தோல்வியடைந்துள்ளன

  காலநிலை அனர்த்தங்களுக்கு நிதியளிப்பதற்கான வரி. காலநிலை மாற்றமும், தண்ணீர் பிரச்னையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் – உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி வலியுறுத்தல் உக்ரேனில் ஏற்படும் உயிர் அழிவுகளுக்கு நிதியளிக்க தயாராக இருக்கும், உலகளாவிய வட துருவ நாடுகள் காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுக்கும் பணிகளுக்கு நிதியளிக்க பின்வாங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். இந்தோனேசியா, பாலி சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவரும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்விலேயே … Read more

Porsche: 200 கி.மீ வேகம்… விபத்தை ஏற்படுத்திய சிறுவன்; இருவர் பலி – தந்தையை கைது செய்த காவல்துறை!

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் அனீஷ் அவதியா (24), அஷ்வினி கோஷ்தா (24) ஆகிய இருவரும் புனேவில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்ற 17 வயது சிறுவன், நண்பர்களுக்கு பாரில் மது விருந்து கொடுத்துவிட்டு சொகுசு காரான Porsche காரில் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். சுமார் 200 கி.மீ வேகத்தில் மது போதையில் வந்துகொண்டிருந்த சிறுவனின் கார் கட்டுப்பாட்டை இழந்து, பைக்கில் சென்றுகொண்டிருந்த ஐடி … Read more

சைதாப்பேட்டை: வீட்டின் மேற்கூரை உட்புற சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி; ஒருவர் காயம்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் மேற்கூரை உட்புற சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இன்னொரு மூதாட்டி கை, கால், இடுப்பில் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், சேலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (62). இவர் சென்னை மேற்கு சைதாப்பேட்டை துரைசாமி தோட்டம் இரண்டாவது தெருவில் உள்ள தனது மூத்த சகோதரி கன்னியம்மாள் (76) வீட்டுக்கு கடந்த 18ஆம் தேதி வந்திருந்தார். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் நேற்று இரவு வழக்கம் போல் படுத்து … Read more

வாக்களிக்காதவர்களுக்கு வரியை உயர்த்த வேண்டும்: நடிகர் பரேஷ் ராவல்

பிரபல இந்தி நடிகர் பரேஷ் ராவல். தமிழில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் தொழிலதிபராக நடித்திருந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் அகமதாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று நடந்த 5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில், மும்பையில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் நடிகர் பரேஷ் ராவல் வாக்களித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரசு இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று குறை சொல்கிறார்கள். நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் அதற்கு … Read more

ChatGPT-4o குரல் பிரதி – ஹாலிவுட் நடிகை அதிருப்தி; ஸ்கை வாய்ஸை நிறுத்திய ஓபன் ஏஐ

கலிபோர்னியா: ஓபன் ஏஐ நிறுவனத்தின் ChatGPT-4o மாடல் தனது தனது குரலை பிரதியெடுத்ததாக ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் அதிருப்தியை தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் சர்ச்சைக்கு வழிவகுத்த ஸ்கை வாய்ஸை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம். “கடந்த செப்டம்பர் மாதம் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் எனக்கொரு ஆஃபர் தந்தார். ஜிபிடி 4o-வுக்கு எனது குரல் வேண்டுமென தெரிவித்தார். இதன் மூலம் நுகர்வோர் மற்றும் ஏஐ இடையிலான … Read more

தனது மகன் எளிமையானவர்: ‘ஆரவ்’ குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசிய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்…

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் இந்திய குடியுரிமை பெற்ற நிலையில், தற்போது தனது குடும்பத்தினர் குறித்து மனத் திறந்து பேசியுள்ளார்.  தனது மகன் ‘ஆரவ்’ குறித்து பேசியவர், னது 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும், அவர் மிகவும் எளிமையானவர், ஆடம்பரத்துக்கு ஆசைபட மாட்டார் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். பாலிவுட்டின் கிலாடி குமார், நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை அனுபவிக்கும் அக்ஷய் குமார், தனது குழந்தைகளான ஆரவ் … Read more

விடாமுயற்சி பற்றிய லேட்டஸ்ட் தகவல் என்ன தெரியுமா?.. விடிவுகாலம் வருமா வராதா?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் வைக்கப்பட்டு அஜர்பைஜானில் நடந்தது. இப்போது படம்

பண்ணை வீட்டில் மது விருந்து: தெலுங்கு நடிகர்- நடிகைகள் பங்கேற்பு – சிக்கிய போதைப்பொருட்கள்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் சிங்கேன அக்ரஹாராவில் கோபால ரெட்டி என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் இரவுநேர மது விருந்து நடைபெறுவதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். போலீசாரை பார்த்ததும் மதுவிருந்தில் பங்கேற்றவர்கள் பண்ணை வீட்டில் இருந்து ஆங்காங்கே சிறதி ஓடினார்கள். அப்போது பண்ணை வீட்டின் வளாகத்தில் … Read more

நான்காவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர்

காத்மாண்டு, நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். பிரதமர் பிரசந்தா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) அரசில் அங்கம் … Read more