ரேபரேலி தொகுதியின் வாக்குச் சாவடியில் ஆய்வு செய்த ராகுல் காந்தி!

லக்னோ: நாடு முழுவதும் இன்று 5வது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரேபரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான, ராகுல்காந்தி, அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார். நாடு முழுவதும் இன்று உ.பி., காஷ்மீர்  8 மாநிலங்களைச் சேர்ந்த 48 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ரேபரேலி தொகுதி வேட்பாளர் ராகுல்காந்தி, இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு! முதல் நான்கு கட்டங்களிலேயே அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் … Read more

ஈரான் அதிபர் ஹெலிகாப்டரில் அப்படி எங்கே சென்றார்? நாட்டு எல்லையில் இருந்தது என்ன? ஷாக் தகவல்

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஆன நிலையில் அவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 12 மணி நேரமாக நடந்த மீட்பு பணியின் முடிவில் அவர் மரணம் அடைந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஎங்கே சென்றார்.. எப்படி இந்த விபத்தில் சிக்கினார் என்ற விவரங்கள் வெளியாகி Source Link

சம்பளத்தை உயர்த்திட்டாரா தமன்னா?.. அடேங்கப்பா இத்தனை கோடியா?.. காட்டில் மழைதான்

சென்னை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோத் விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் நடிகை தமன்னா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள்

அசாதாரண காலநிலையினால் புத்தளம் மாவட்டத்தில் 19,128 நபர்கள் பாதிப்பு

இலங்கையயைச் சுற்றி ஏற்பட்டு வரும் முன்கூட்டிய காலநிலை காரணமாக, கடந்த 24மணித்தியாலங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சியாக புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 212.5மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இம்மழை வீழ்ச்சியினால் பலத்த காற்றுடன் நீர் மட்டம் அதிகரித்து வெள்ளம் அனர்த்தம் ஏற்பபட்டுள்ளதனால் மாவட்டத்தில் 19,128நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் எச். எம். எஸ். பி. ஹேரத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரணப் பணிகளை பிரதேச செயலாளர்கள், அனர்த்த நிவாரண சேவை அதிகாரிகள் மற்றும் கிராம … Read more

கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவன்; 2 பேர் பலி – விபத்து குறித்து கட்டுரை எழுத உத்தரவிட்ட நீதிமன்றம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் அனீஷ் அவதியா (24), அஷ்வினி கோஷ்தா (24). இவர்கள் இருவரும், ஞாயிற்றுக்கிழமை மது விருந்துக்குச் சென்றுவிட்டு கல்யாணி நகர் சந்திப்பில் அதிகாலை 2:30 மணியளவில் பைக்கில் வந்துகொண்டிருந்தபோது, நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று வேகமாக வந்து மோதியது. இதில், விபத்து நடந்த இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் நண்பர் அகிப் முல்லா (24) எர்வாடா காவல் நிலையத்தில் புகாரளித்தார். விபத்து அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் … Read more

வறண்டது மேட்டூர் அணை; குறுவை தொகுப்புத் திட்டத்தையாவது அறிவிக்கவும்: ராமதாஸ்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களுக்கான குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். குறிப்பாக, அனைத்துப் பகுதிகளுக்கும் வேளாண்மைக்காக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களின் பாசன ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும், நீர் இருப்பு 13 டி.எம்.சியாகவும் குறைந்து … Read more

“பணம் பறிக்க பயன்படும் சிபிஐ, அமலாக்கத் துறையை இழுத்து மூட வேண்டும்” – அகிலேஷ்

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நீங்கள் நிதி மோசடி செய்திருந்தால் அதை விசாரிக்க வருமான வரித் துறை உள்ளது. அப்புறம் ஏன் உங்களுக்கு சிபிஐ தேவை? மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை செயல்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். பாஜகவின் அரசியல் எதிரிகளை பழிவாங்க மட்டுமே சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்சிகளை உடைக்க அவை உதவுகின்றன. சிபிஐ சோதனைகளை தவறாக பயன்படுத்துவதன் … Read more

ஈரான் அதிபர் மரணம்: மேற்கு ஆசிய அரசியலில் ஏற்படப் போகும் தாக்கம் என்ன?- ஓர் அலசல்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகள் உயிரிழந்துள்ள நிலையில், உலகின் மற்ற நாடுகள் இதன் பின்விளைவுகளையும் புவிசார் அரசியலில் ஏற்படும் தாக்கங்களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறன. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் நெருக்கடியான நேரத்தில் இப்ராஹிம் ரெய்சி உயிரிழப்பு என்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஏழு மாதங்களாக, இஸ்ரேல் – ஹமாஸ் போர் நடந்து … Read more

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கினார் எலான் மஸ்க்

ஜகர்த்தா: இந்தோனேசியாவின் மிகப்பெரிய பாலி தீவு பகுதியில் வசித்து வரும் மக்கள் பயனடையும் வகையில் தனது ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவையை எலான் மஸ்க், ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் அந்த நாட்டுக்கு பயணித்தார். இதன் மூலம் சுமார் பல ஆயிரம் தீவு பகுதிகளைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலை தூரங்களில் உள்ள அந்தப் பகுதிகளில் அதிவேக இணைய சேவையை வழங்குகிறது ஸ்டார்லிங்க். இதன் தொடக்க விழாவில் இணைய … Read more