ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி: யார் இவர்? – முழு பின்னணி

ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவர் குறித்து அறிவோம். 63 வயதானவர் இப்ராஹிம் ரெய்சி. கடந்த 2021-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பதிவான 28.9 மில்லியன் வாக்குகளில் 62 சதவீத வாக்குகளை அவர் பெற்றார். அதற்கு முன்பாக அந்த நாட்டின் நீதித்துறையில் முக்கிய பங்காற்றியவர். தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 2017-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் … Read more

ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் இல்லையா? கவலைப்படாதீங்க இதோ 5 டிப்ஸ்

ஹலோ! உங்கள் போன் இண்டர்நெல் இல்லை என காட்டுகிறதா?. உடனே பதட்டப்படாதீங்க, கடைக்கு போகணுமோ என கவலைப்படாதீங்க. ஈஸியா நீங்களே அதனை சரிசெஞ்சுக்க முடியும். முதலில் உங்கள் போனில் ரீச்சார்ஜ் செய்த டேட்டா இருக்கிறதா? என செக் பண்ணுங்க. டேட்டா இல்லையென்றால் டேட்டா பூஸ்டர் ரீச்சார்ஜ் பண்ணி பயன்படுத்தலாம். ஆனால், இது பிரச்சனையாக இல்லாதபோது, நீங்கள் 5 ஈஸியான டிப்ஸை பாலோ பண்ணணும். இதில் ஏதேனும் ஒரு வழிமுறை உங்கள் இண்டர்நெட் பிரச்சனையை தீர்க்கும் மொபைலை ரீ … Read more

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகள்! சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு!

சென்னை: “தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து மருத்துவக் குழுக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.  தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக  செல்வ விநாயகம்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தென்மேற்கு பருவமழை மே மாதம் கடைசி வாரத்திலிருந்து தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், … Read more

சைந்தவி – ஜி வி பிரகாஷ் விவாகரத்து.. அந்த நடிகர் காரணமா? பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவி தம்பதிகள் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்துள்ளனர். இவர்கள் பிரிந்ததற்கான காரணம் தெரியாத நிலையில், வலைப்பேச்சு அந்தணன் இவர்களின் விவாகரத்து குறித்து பேசிஉள்ளார். 10ம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போதே, ஜிவி பிரகாஷும், சைத்தவியும் காதலித்து வந்த நிலையில்,

பா.ஜனதாவுக்கு 8 முறை ஓட்டு போட்டு வீடியோ பதிவிட்ட விவகாரம்: வாலிபர் கைது

புதுடெல்லி, உத்தரபிரதேசத்தின் பரூக்காபாத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் முகேஷ்ராஜ்பூதி களம் காண்கிறார். இந்த தொகுதிக்கு 4-ம் கட்டத்தேர்தலாக கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் வாலிபர் ஒருவர் பா.ஜனதா வேட்பாளருக்கு 8 முறை ஓட்டுப்போடுவது போன்ற காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லவும், வாக்காளர் ஓட்டுப்போடுவதை படம் பிடிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால் இந்த வாலிபர் சர்வசாதாரணமாக பா.ஜனதாவுக்கு 8 முறை ஓட்டுப்போட்ட காட்சி வெளியானது. இந்த வீடியோவை … Read more

ஐ.பி.எல். போட்டி: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்

கவுகாத்தி, 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்று இன்றுடன் முடிவடைந்தது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட இருந்தன. இந்த ஆட்டம் கவுகாத்தியில் நடைபெற்றது. இந்த சூழலில் அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் சிறிதுநேரம் மழை நின்றதால் போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து – அதிர்ச்சி சம்பவம்

தெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (வயது 63). இவர் இன்று காலை அண்டை நாடான அசர்பைஜானுக்கு சென்றிருந்தார். அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கை புதிதாக அணை கட்டப்பட்டுள்ளது. அந்த அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி இன்று அசர்பைஜான் சென்றிருந்தார். அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக … Read more

ஜூலை 14.., கொரில்லா 450 மோட்டார்சைக்கிளை வெளியிடும் ராயல் என்ஃபீல்டு

வரும் ஜூலை 14-17 வரை ஆட்டோமொபைல் ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் கொரில்லா 450 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் அடிப்படையிலான பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படுகின்ற கொரில்லா ரெட்ரோ ரோட்ஸ்டெர் ஸ்டைல் மாடலில் செர்பா 450 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 452cc ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சர் சந்திப்பு

இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டன் Luhut Binsar Pandjaitan ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (19) Kura Kura Bali தீவிலுள்ள “United In Diversity” வளாகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில், Global Blended Finance Alliance அமைப்பின் நாடுகள், வெப்ப வலயத்திற்கான இலங்கையின் முன்னெடுப்பு (Tropical Belt Initiative), நீலப் பொருளாதாரம் (Blue Economy) கடற்பாசி தொழில் துறை குறித்து … Read more

உ.பி: 1,2,3… என சொல்லி சொல்லி 8 வாக்குகளை செலுத்திய 16 வயது சிறுவன்… வைரலான வீடியோவால் ஷாக்!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஃபருகாபாத்தில் 4-ம் கட்டத் தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றது. அதில் 16 வயது சிறுவன் ஒருவர் பா.ஜ.க-வுக்கு 8 முறை வாக்களித்திருப்பதாக வீடியோ பரவியது. ஒவ்வொருமுறை வாக்கு செலுத்தியப் பிறகும் அவர் விரல் விட்டு எண்ணுவதை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார். அந்த … Read more