Tamil News Live Today: 5ம் கட்ட மக்களவைத் தேர்தல்: ரேபரேலி, அமேதி உள்ளிட்ட 49 தொகுதிகள்… தொடங்கியது வாக்குப்பதிவு!

`வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ – பிரதமர் மோடி பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. இந்த வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் இந்த ஜனநாயக திருவிழாவில் … Read more

கோடை வெயிலில் பணியாற்றும் ரயில் தண்டவாள பராமரிப்பாளர்களுக்கு குடிநீர் பாட்டில் வழங்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: கோடை வெயிலில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடுவோருக்கு 2 லிட்டர் அளவுள்ள குளிர்ந்த குடிநீர் பாட்டில் வழங்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், கோடைவெயிலில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடுவோருக்கு 2 லிட்டர் அளவிலான குடிநீர் பாட்டில்கள் வழங்க தெற்கு ரயில்வே உள்பட அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள் ளது. இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் … Read more

நாட்டுத் துப்பாக்கிகள் தயாரான உ.பி.யில் பீரங்கி குண்டுகள் தயாராகின்றன: அமித் ஷா பெருமிதம்

லலித்பூர்: ஒரு காலத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்ட உ.பியில் இன்று பீரங்கி குண்டுகள் தயாராகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மக்களவைத் தொகுதியில் பாஜக எம்.பி. அனுராக் சர்மா இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து லலித்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகவும் யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராகவும் ஆன பிறகுதான் உ.பி. வளர்ச்சி அடையத் தொடங்கியது. … Read more

Indian 2 Movie: கமல்ஹாசனின் இந்தியன் 2.. இந்த தேதியில் உலகமெங்கும் ரிலீஸ்

Kamal Haasan Indian 2 Official Release Date : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த வாலிபர் கைது

பரூக்காபாத் நடப்பாண்டு தேர்தலில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்ததாக வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் முகேஷ்ராஜ்பூதி போட்டியிடுகிறார். கடந்த 13 ஆம் தேதி இந்த தொகுதிக்கு 4-ம் கட்டத்தேர்தலாக வாக்குப்பதிவு நடந்தது.  அப்போது  வாலிபர் ஒருவர் பாஜக வேட்பாளருக்கு 8 முறை ஓட்டுப்போடுவது போன்ற காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லவும், வாக்காளர் ஓட்டுப்போடுவதை படம் பிடிக்கவும் தடை … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் ரைசி.. 12 மணி நேரமாக திக் தேடுதல் வேட்டை.. என்ன நடக்குது?

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஆன நிலையில் 12 மணி நேரமாக மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடந்தும் இதுவரை முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது. விபத்து நடந்ததாக கூறப்படும் Source Link

இதுதான் நான்.. மேக்கப் இல்லாமல் டிடியே வெளியிட்ட ஃபோட்டோ.. ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்

சென்னை: தனியார் சேனலில் தொகுப்பாளினியாக ஃபேமஸ் ஆனவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. சிறு வயதிலிருந்தே சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தலை காட்டிய அவருக்கு ஆங்கர் ரோல்தான் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அவர் சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. இந்தச் சூழலில் மேக்கப் இல்லாமல் இருக்கும்

5-வது கட்ட தேர்தல்: ரேபரேலி, அமேதி உள்பட 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

புதுடெல்லி, 543 உறுப்பினர்களை கொண்ட இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. உலகமே எதிர்பார்க்கும் இந்த தேர்தலில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதன் மூலம் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்து உள்ளது. இதில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வான குஜராத்தின் சூரத் தொகுதியும் அடங்கும். இதுவரை நடந்த 4 கட்ட தேர்தல்களின் மூலம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து விட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, … Read more

உரிமையாளரை செல்லமாக சீண்டிய சிறுத்தை – வைரலாகும் வீடியோ

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் சில பிரபலங்கள் சிங்கம்,புலி, பாம்பு, முதலை,சிறுத்தை உள்ளிட்ட காட்டு விலங்குகளை கூட அனுமதி பெற்று வீட்டில் வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் வீடுகளில் ஏராளமான விலங்குகளை வளர்த்து அவற்றுடன் விளையாடுவது போன்று எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலம் ஆனவர் நவுமன்ஹாசன். இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய வீடியோ ஒன்றில், அவர் வீட்டில் செல்லமாக வளர்த்து வரும் சிறுத்தை திடீரென அவரை சீண்டிய காட்சிகள் உள்ளது. அந்த வீடியோவில் நவுமன் மற்றொரு … Read more