2 கோடி பேரின் செல்போனுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி: பேரிடர் மேலாண்மை துறை அனுப்பியது

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான கனமழை குறித்து அங்குள்ள 2 கோடி பேரின் கைபேசிகளுக்கு எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் இயல்பைவிட அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் மே 21-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைமுதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. நேற்று காலை 8.30 மணிநிலவரப்படி … Read more

ஜோன்பூர் அத்தலா மசூதி ஒரு கோயிலாக இருந்தது: தொல்லியல் ஆய்வு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையான அத்தலா மசூதி உள்ளது. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்று சின்னமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உ.பி. சன்னி மத்திய வக்ஃபு வாரியத்தின் சொத்தாக உள்ளது. இந்நிலையில் இந்த மசூதி முன்பு கோயிலாக இருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆக்ரா மற்றும் மதுராவில் இதுபோன்ற வழக்குகளால் பிரபலமான வழக்கறிஞர் அஜய் பிரதாப்சிங், இந்த வழக்கையும் தொடுத்துள்ளார். ஜோன்பூரின் கூடுதல் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் இதற்கான மனு … Read more

பிரதமர் ரிஷி சுனக், மனைவி சொத்து மதிப்பு ரூ.6,800 கோடி: இங்கிலாந்து மன்னரை விட அதிகம்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்மற்றும் அவரது மனைவி அக் ஷதாமூர்த்தியின் சொத்து மதிப்பு ரூ.6,800 கோடியாக அதிகரித்துள்ளது. இது இங்கிலாந்து மன்னர் சார்லஸின் சொத்து மதிப்பை விட அதிகம் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. 2024-ம் ஆண்டுக்கான இந்தியவம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் பட்டியலை சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பணக்காரர் பட்டியலில் 44 வயதான ரிஷி சுனக் மற்றும் அக் ஷதா மூர்த்தி தம்பதி கடந்த ஆண்டு … Read more

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி, கடலூர் மாவட்டம்.

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி, கடலூர் மாவட்டம். பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட, மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக்கும், அதிதேவிக்கும் 12வது குழந்தையாக மகாவிஷ்ணு, வாமன அவதாரம் செய்தார். மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர்வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார். ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி,”இந்த உலகை ஆளும் என்னையே அளந்து கொள்ளுங்கள்” என விஷ்ணுவின் … Read more

அட செம ஐடியா.. ராபர்ட் மாஸ்டருடன் களமிறங்கிய வனிதா விஜயகுமார்.. என்ன படம் தெரியுமா?

சென்னை: தமிழ் நடிகர்களில் மூத்த நடிகராக இருக்கும் விஜயகுமாரின் மகளான வனிதாவும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராபர்ட் மாஸ்டரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்து பிரிந்த நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து இப்படத்தில் நடிக்க உள்ளதால், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது

தொண்டர்கள் ரகளை: நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வெளியேறிய ராகுல், அகிலேஷ்

பிரயாக்ராஜ், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் நேற்று பல இடங்களில் கூட்டாக பிரசாரம் செய்தனர்.அங்குள்ள புல்புர் தொகுதிக்கு உட்பட்ட படிலா பகுதியில் இருவரும் பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ஹெலிகாப்டர் மூலம் அந்த இடத்துக்கு சென்று மேடையேறினர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் கட்டுக்கடங்காத வகையில் திரண்டிருந்தனர். திடீரென அவர்கள் மேடையை நோக்கி அலையலையாக வரத்தொடங்கினர். அவர்களை போலீசார் தடுத்து … Read more

பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்

டோக்கியோ, உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில், ஆண்கள் பிரிவில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். நிஷாத் குமார் 1.99 மீட்டர் உயரத்தை தாண்டி 2வது இடம் பிடித்துள்ளார். மகளிருக்கான குறைந்த தூர(200 மீட்டர்) ஓட்டப்போட்டியில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 30.49 விநாடிகளில் கடந்து 3வது இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் இந்த … Read more

சவுதி அரேபியாவா இது… பேஷன் ஷோ, அதுவும் பிகினி உடையில்

ரியாத், சவுதி அரேபியா நாடு பழமைவாத கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டது. சமூகம், கலாசாரம், பொருளாதாரம் என எல்லாவற்றிலும் பாரம்பரிய வழிமுறைகளை அந்நாட்டு மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அந்நாட்டில் சட்டங்களும் அதற்கேற்றாற்போல் கடுமையானவை. 10 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் உடல் முழுவதும் துணியால் மறைத்தபடி ஆடைகளை அணிய வேண்டும். ஆண்களுக்கு என்றும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இதனை மீறுபவர்களுக்கு அபராதம், தண்டனை ஆகியவை விதிக்கப்படும். இந்த நடைமுறை எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் வரை கடுமையாக பின்பற்றப்பட்டு … Read more