உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் – காவலர் பயிற்சி நண்பர்கள் குழு உதவி

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உடல் நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு அவருடன் காவலர் பயிற்சி பெற்ற குழுவினர் நிதியுதவி வழங்கினர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோலையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணா (51). கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் மாதம் 13-ம் தேதி பணியின்போது உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். இவருடன் 3500-க்கும் மேற்பட்ட … Read more

வடக்கு Vs தெற்கு… பிளவுவாதம் பேசுகிறாரா மோடி? – ‘மாறும்’ பாஜக தேர்தல் வியூகம்

இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 5-வது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. தென் மாநிலங்களில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்து விட்ட நிலையில், வட மாநிலங்களில் மட்டுமே தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தென்னிந்தியாவில் இருப்பவர்கள் உத்தரப் பிரதேச மக்களை இழிவாகப் பேசுகின்றனர். இதை நாம் மறக்கவோ மன்னிக்கவோ கூடாது” எனப் பேசினார். இது பெரும் … Read more

பெரிய சர்ச்சை! பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர்… ஷாக் வீடியோ

Lok Sabha Election 2024: வைரலாகி வரும் வீடியோவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞர் பாஜகவுக்கு 8 முறை வாக்குளிப்பதை பார்க்க முடிகிறது. இது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமா… உங்களுக்காகவே அடித்திருக்கிறது ஒரு ஜாக்பாட்

Ooty Rose Garden Show Date Extended: உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்ற ரோஜா கண்காட்சி இன்று நிறைவடைய இருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

IPL 2024 Play off : பிளே ஆஃப் சுற்றில் ஆர்சிபி அணி எதிர்கொள்ளப்போகும் அணி எது தெரியுமா?

ஐபிஎல் 2024 தொடர் ஆரம்பம் முதலே அதிரடியாகவும், அமர்களமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பின் உட்சத்துக்கு சென்ற நிலையில், ஐபிஎல் பிளே ஆஃப் இடங்களை அவ்வளவு எளிதாக எந்த அணியும் இம்முறை உறுதி செய்துவிடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 68வது லீக் போட்டிக்கு பிறகு தான் ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் விளையாடும் நான்கு அணிகளின் விவரமும் உறுதியாக தெரிந்தது. அந்தளவுக்கு இம்முறை போட்டி கடுமையாக இருந்தது. … Read more

3 ஆம் உலகப்போர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தொடங்க்கலாம், : டிரம்ப்

மின்சோட்டா ,மூன்றாம்  உலகப் போர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தொடங்கலாம் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய  அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியில் இருந்து முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிடுகின்றனர். அவர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். தங்கள் பிரசாரத்தின்போது இருவரும் ஒருவரையொருவர் வசைபாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அமெரிக்காவின் மினசோட்டா … Read more

அஜித்துக்கு போட்டியாக லைகா வெளியிட்ட அறிவிப்பு?.. இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போ?

சென்னை: லைகா தயாரிப்பில் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்த நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு அடுத்ததாக அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். குட் பேட் அகலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது தாறுமாறாக வெளியாகி உள்ளது. அந்த போஸ்டருக்கு போட்டியாக

சக்திவாய்ந்த BYD ஷார்க் PHEV பிக்கப் டிரக் அறிமுகமானது

மெக்சிக்கோ சந்தையில் வெளியிடப்பட்டுள்ள BYD நிறுவனத்தின் முதல் பிக்கப் டிரக ஷார்க் PHEV அதிகபட்சமாக 435 hp பவரை வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிஓய்டி நிறுவனத்தின் ‘Ocean Series’ வரிசையில் வெளியாகியுள்ள ஷார்க் டிரக்கில் பொருத்தப்பட்டுள்ள  1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டூ பெட்ரோல் என்ஜின் பிளக் இன் ஹைபிரிட் ஆப்ஷனுடன்  DMO (dual-mode off-road) வசதி கொண்டதாகவும் சிறப்பான ஆஃப் ரோடு அனுவபத்தை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு … Read more

ஜனாதிபதியின் வட மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

 ஜனாதிபதியின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (19/05/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. பாதுகாப்பு பிரிவினர், பொலிசார், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். ஜனாதிபதியால் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், திட்டங்களுக்கு பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள், பாதுகாப்பு நடைமுறைகள், நிகழ்ச்சி … Read more

இரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது… வெளியான அதிர்ச்சித் தகவல்

பாலஸ்தீன் நாட்டின்மீது கடந்த அரை வருடமாகப் போர் நடத்திவரும் இஸ்ரேலைக் கடுமையாக இரான் எதிர்த்துவருகிறது. இந்த நிலையில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் இன்று விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் ஹெலிகாப்டரில் இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனும் (Hossein Amir-Abdollahian) உடனிருந்தாகக் கூறப்படுகிறது. இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இருப்பினும், இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டரில் அவருடன் யார் யார் பயணித்தனர் என்பது பற்றிய … Read more