ஜூன் 9ல் நடிகர் பிரேம்ஜி அமரன் திருமணம்…

நடிகர் பிரேம்ஜி அமரன் திருமணம் ஜூன் 9 ம் தேதி நடைபெற உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 45 வயதாகும் பிரேம்ஜி அமரன் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். அவரது திருமணம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சமீபத்தில் பிரேம்ஜி அமரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரேம்ஜி அமரனுக்கும் இந்து என்பவருக்கும் வரும் ஜூன் 9 ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் … Read more

சிக்கிமிலிருந்து ஜஸ்ட் 150 கி.மீ தூரத்தில்.. அதிநவீன போர் விமானங்களை நிறுத்திய சீனா! பரபர படம்

பீஜிங்: சிக்கிமில் இருந்து 150 கி.மீ தொலைவில் இந்திய எல்லைப்பகுதி அருகே ஜே 20 போர் விமானங்களை சீனா நிறுத்தியுள்ளது கவனம் பெற்றுள்ளது. திபெத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான சிகாட் சேவில் சீனாவின் 6 விமானங்களும் நிற்கும் படங்கள் வெளியாகியுள்ளன. தெற்கு ஆசியாவில் யாராலும் அசைக்க முடியாத நாடாக வர வேண்டும் என்பது சீனாவின் விருப்பமாக Source Link

Actor Soori: நாளை ரிலீசாகும் சூரியின் கருடன்.. வெளியானது மிரட்டலான மேக்கிங் வீடியோ!

சென்னை: நடிகர் சூரி அடுத்தடுத்து ஹீரோவாக களம் இறங்கி மாஸ் காட்டி வருகிறார். கடந்த ஆண்டில் சூரியின் நடிப்பில் வெளியாகி சிறப்பான வெற்றியை கொடுத்த விடுதலை படம் அவருக்கு தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்கும் வாய்ப்புகளை பெற்று தந்து வருகிறது. அந்த வகையில் சூரி நடிப்பில் அடுத்ததாக கருடன் படம் நாளைய தினம் தமிர் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ளது.

அக்னிபான் ராக்கெட் தேசத்தை பெருமைப்படுத்தும் சாதனை – பிரதமர் மோடி

சென்னை சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் செமி கிரையோஜெனிக் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் ஏவும் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்த நிலையில், அக்னிபான் ராக்கெட் தேசத்தை பெருமைப்படுத்தும் சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; “அக்னிபான் ஏவப்பட்டது ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தும் சாதனை. உலகின் முதல் செமி … Read more

கிளாசிக்கல் செஸ்: முதல் முறையாக கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, கிளாசிக்கல் ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல்முறை ஆகும். இதற்கு முன்னர் கிளாசிக்கல் பிரிவில் இருவரும் மூன்று முறை விளையாடி உள்ளனர். அந்த மூன்று ஆட்டமும் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. நார்வே செஸ் தொடரில் நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), முன்னாள் சாம்பியன் கார்ல்சன் (நார்வே), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட … Read more

ஈகுவடாரில் மலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: 2 பேர் பலி

குயிட்டோ, தென் அமெரிக்கா நாடான ஈகுவடாரின் கடலோர நகரமான குவாயாகில் நகரில் இருந்து, எல் ஒரோ மாகாணம் சான்டா ரோசா நகர் நோக்கி சிறிய ரக விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் விமானி டேவிட் பரேனோ மற்றும் அகஸ்டோ வீரா, அட்லியன் யும்பாலா ஆகியோர் பயணம் செய்தனர். விமானம் சான்டா ரோசா நகரை நெருங்கிய போது திடீரென அதன் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை அந்த விமானம் இழந்தது. இதனால் … Read more

சென்னை: செல்போனுக்காக நடந்த கொலை – 24 மணி நேரத்துக்குள் சிறுவன் உட்பட 3 பேர் கைது!

சென்னை, குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை செய்துவந்தவர் ராஜேஷ் (30). சம்பவத்தன்று இரவு செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே தனியாக நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் ராஜேஷிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர்களிடம் பணமில்லை என ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், ராஜேஷைக் கத்தியால் வெட்டிவிட்டு செல்போனைப் பறித்துச் கொண்டு தப்பிச் சென்றது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ராஜேஷை அக்கம் பக்கத்தில் … Read more

விஐபிகளின் காலை சிற்றுண்டிக்கான திருத்தணி கோயில் நிதியில் ரூ.6.13 லட்சம் முறைகேடு: பொன்.மாணிக்கவேல் புகார்

திருவள்ளூர்: கடந்த 2017-ம் ஆண்டு முக்கிய பிரமுகர்களின் காலை சிற்றுண்டிக்காக திருத்தணி முருகன் கோயில் நிதியிலிருந்து ரூ.6.13 லட்சம் முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளது என திருத்தணி காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் புகாரளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இன்று ‘ஆலயம் காப்போம்’ அமைப்பின் நிர்வாகி களுடன் திருத்தணி முருகன் கோயில் முறைகேடு தொடர்பாக திருத்தணி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். 38 பக்கங்கள் … Read more

தொடங்கியது தென்மேற்கு பருவமழை: எங்கெல்லாம் மழை வாய்ப்பு?

புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, தெலங்கானா, ராயலசீமா ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தென்மேற்கு … Read more

காசா போர் 2024 இறுதி வரை நீடிக்கலாம்: இஸ்ரேல் எச்சரிக்கை

காசா: காசா மீதான போர் இன்னும் ஏழு மாதங்களுக்கு நீடிக்கும் (இந்த ஆண்டு இறுதி வரை) என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 36,224 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், … Read more