வானிலை நிலவரம்: ‘இந்த’ மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! சென்னையின் நிலை என்ன?

Today Weather Report Tamil Nadu : கோடை காலத்திலும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

இனி அரசு மருத்துவமனைகளில் 3 ஷிப்ட் பணி

சென்னை தமிழக அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் கடைநிலை ஊழியர்கள்க்கு இனி 3 ஷிப்ட் பணி என அறிவிக்கப்பட்டுள்ளடு. நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பின் அடிப்படையில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ்வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலிய உதவியாளர் தரம்-2 மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு (D Grade Employees) கீழ்க்காணுமாறு பணி … Read more

42 ஆண்டாக என்னோடு நீங்கள்.. என் பலமே என் ரசிகர்கள் தான்… நடிகர் மம்முட்டி பேச்சு!

சென்னை: மலையாள திரையுலகில் பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் நடிகர் மம்முட்டி. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் ரசிகர்களால் மம்மூக்கா என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். டர்போ ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி ரசிகர்கள் தான் என் பலம் என்றார். 1971 ஆம் ஆண்டு வெளியான அனுபவன்

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? – வெளியான தகவல்

சென்னை, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும், ஆண்டு இறுதித்தேர்வுகளும் நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படுவது வழக்கம். சில நேரங்களில், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்படும்போது, பள்ளிகள் திறப்பு தள்ளிபோகும். நடப்பாண்டு, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந்தேதி வெளியாக இருப்பதாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளதாலும் பள்ளிகள் திறப்பு ஜூன் 2-வது வாரம் வரையில் தள்ளிபோக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் … Read more

ஒரே மைதானத்தில் அதிக ரன் குவித்து சாதனை படைத்த விராட் கோலி

பெங்களூரு, 14-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 7-வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளை எட்டியது. அத்துடன் அந்த அணி தொடர்ச்சியாக 6-வது வெற்றியை ருசித்து அசத்தியது. சென்னை அணி 7-வது தோல்வியை சந்தித்து 14 புள்ளிகளிலேயே நீடித்தது. சம புள்ளிகளில் இருந்தாலும் ரன்-ரேட் அடிப்படையில், சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நடப்பு சாம்பியன் சென்னை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. சென்னை அணி … Read more

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல்; 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு

சிங்கப்பூர், சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சிங்கப்பூரில் புதிதாக 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி … Read more

மாநிலங்களிடையே மோதலை தூண்டுகிறார்: பிரதமர் மோடி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: மதவெறுப்பு பரப்புரை கைகொடுக்காததால், மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் மலிவான உத்தியை பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெற்றி முகட்டை நோக்கி இண்டியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரைகளை பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும், அதைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் … Read more

ஆம் ஆத்மி பெண் எம்.பி.யை தாக்கிய வழக்கில் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது

புதுடெல்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள கேஜ்ரிவால் வீட்டுக்கு ஸ்வாதி மாலிவால் சென்றார். அப்போது, கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், ஸ்வாதியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் எழுத்துப்பூர்வமாக டெல்லி சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் பிபவ் குமார் மீது கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், … Read more

Actor Kavin: வெற்றிமாறனுடன் கவின் இணையும் படம்.. பூஜையுடன் துவக்கம்.. டைட்டில் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் கவின் நடிப்பில் அடுத்தடுத்து லிப்ட், டாடா படங்கள் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளன. கடந்த ஆண்டில் வெளியான டாடா படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்து வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ஸ்டார் படமும் கவினுக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற

திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: 5 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருப்பு

திருமலை, கோடையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வார நாளான நேற்று இயல்பை விட பக்தா்கள் கூட்டம் சற்று அதிகமாகக் காணப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிலாதோரணம், புரோகிதர்கள் சங்க கட்டிடம் வரை ரிங்ரோடு தரிசன வரிசையில் காத்திருந்தனர். திருமலையில் உள்ள நாராயணகிரி பூங்காவில் உள்ள … Read more