மம்தா பற்றி தரக்குறைவான விமர்சனம்: பாஜக வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 

மேற்குவங்கத்தில் வரும் 25-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இங்குள்ள தம்லுக் தொகுதியில் பாஜக சார்பில் அபிஜித் கங்கோபத்யாய் போட்டியிடுகிறார். இவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி. சமீபத்தில் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார். ஹால்டியா மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பற்றி அபிஜித் கடுமையாக விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் புகார் … Read more

சிம்புவுடன் என்ன பிரச்சனை? வெந்து தணிந்தது காடு 2 எடுக்கப்படுமா? தயாரிப்பாளர் பேட்டி!

சென்னை: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கும் பி.டி சார் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை 24ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இதன் இசைவெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்றார். கார்த்திக் வேணுகோபால்

ஜூன் 1ந்தேதி முதல் அரியானாவில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

சண்டிகர், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 1ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்படுவதாக அரியானா பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரியானா பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த காலகட்டத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என்றும் ஜூலை 1ந் தேதி மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள், தொகுதிக் கல்வி அலுவலர்கள் மற்றும் தொகுதி தொடக்கக் கல்வி அலுவலர்கள் … Read more

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த படகு: 7 இலங்கை மீனவர்கள் கைது

தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 7 இலங்கை மீனவர்களை கடலோரக் காவல் படையினர் படகுடன் கைது செய்தனர். தூத்துக்குடி கடலோர காவல் படையினர் வைபவ் ரோந்து கப்பலில் இன்று (சனிக்கிழமை) காலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கன்னியாகுமரிக்கு தென் கிழக்கே 74.8 கடல் மைல் தொலைவில், இந்திய கடல் எல்லையில் வேறு நாட்டைச் சேர்ந்த படகு ஒன்று நிற்பதை கண்டனர். உடனடியாக விரைந்து சென்று, அந்தப் படகை சுற்றி வளைத்தனர். … Read more

உ.பி.யில் பெற்றோர் வாக்களித்தால் பிள்ளைகளுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்: தனியார் பள்ளி குழுமத்தின் திட்டத்துக்கு பாராட்டு

உத்தர பிரதேசத்தில் வாக்குப்பதிவை கூட்ட ஒரு கல்விக் குழுமம் பின்பற்றும் உத்தி பலரின் பாராட்டை பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தின் 80 மக்களவை தொகுதிகளுக்கு ஏழுகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் 5-ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு உ.பி தலைநகர் லக்னோவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வி குழுமம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பொதுத்தேர்தலுக்கு மறுநாளான மே 21-ல் ஆசிரியர் பெற்றோர் கூட்டங்கள் எங்களது அனைத்து பள்ளிகளிலும் … Read more

மே 22ந்தேதி தொடங்குகிறது ஏற்காடு கோடை விழா….

சேலம்: ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தை அடுத்து அமைந்துள்ளது ஏற்காடு கோடை வாசஸ்தலம். இது , ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. . இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. ஏற்காடு வட்டத்தில் அமைந்த ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623 மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் … Read more

பூவுக்கு பொறந்தநாளு.. திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாள்.. கணவருடன் கொண்டாடிய இந்திரஜா!

சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு படுகோலாகலமாக நடைபெற்றது. ஆட்டம் பாட்டத்துடன் நடந்த இவர்களின் திருமண வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. தற்போது, இந்திரஜா தனது பிறந்த நாளை கணவருடன் கொண்டாடி உள்ளார். தொலைக்காட்சியில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் பிஸியான நடிகராக இருக்கும் நடிகர் ரோபோ

RCB v CSK: `வீரர்கள் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!' அசாத்தியத்தை நிகழ்த்தி பிளேஆஃப்ஸ் போன பெங்களூரு

நடப்பு சீசனின் பெரும் பரபரப்பான போட்டி ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. வென்றே ஆக வேண்டும் எனும் கட்டத்தில் பெங்களூரு அணி சாதித்திருக்கிறது. அவ்வளவுதான், ஒரு கட்டத்தில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களுக்கு செல்லப்போகிறார்கள் என உதாசினப்படுத்தப்பட்ட அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் பிளேஆஃப் சென்றிருக்கிறது. தொடர்ச்சியாக 6 போட்டிகளை வென்று சௌகரியமாக இருந்த சென்னையை ஓடவிட்டு தகுதிப்பெற்றிருக்கிறது பெங்களூரு. RCB v CSK எப்போதும் ருத்துராஜூக்கு உதவாத டாஸ் இன்று உதவியது. டாஸை வென்றார், சேஸிங்கைத் தேர்வு செய்தார். … Read more

“கொள்ளையடிப்பதே தற்போதைய திமுகவினரின் கொள்கை” – பாஜக மாநிலத் துணைத் தலைவர் குற்றச்சாட்டு

விழுப்புரம்: “அண்ணாவின் திசையிலிருந்து மாறி, இன்று திமுக என்றாலே ஊழல் ஊழல்தான். கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்டவர்கள்தான் தற்போது திமுகவில் உள்ளனர்” என்று முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மாநிலத் துணைத் தலைவருமான ஏ.ஜி.சம்பத் கூறியுள்ளார். “ஏழை எளியோரின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்காற்றி மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் திருவுருவச் சிலையுடன் அரங்கம் அமைக்கப்படும்” என்று சட்டமன்றத்தில் 2021-ம் ஆண்டு செம்டம்பர் மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் தற்போது … Read more

“நானும் ராகுலும் போட்டியிட்டால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும்” – பிரியங்கா காந்தி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி. இந்த தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சிக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் அது குறித்து அவர் விளக்கம் தந்துள்ளார். “ரேபரேலி தொகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நான் பரப்புரை மேற்கொண்டு வருகிறேன். எங்கள் குடும்பத்துக்கு ரேபரேலியுடன் இணக்கமான உறவு உண்டு. அதனால் இங்கு நாங்கள் வர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். … Read more