‛கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள்’.. மே 18 மறக்க முடியுமா? இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

கொழும்பு: இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஏராளமானவர்கள் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இலங்கையின் வடகிழக்கு பகுதியில் ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். தங்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு அவர்கள் தனிஈழம் கோரி போராட தொடங்கினர். இது இலங்கையின் உள்நாட்டு போராக உருவானது. Source Link

Inga Naan Thaan Kingu Review: சந்தானத்துக்கு சக்சஸா? சறுக்கலா?.. ’இங்க நான் தான் கிங்கு’ விமர்சனம்!

நடிகர்கள்: சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையாஇசை: டி. இமான் நேரம்: 2 மணி நேரம் 12 நிமிடங்கள் இயக்கம்: ஆனந்த் நாராயணன் சென்னை: தொடர்ந்து காமெடி படங்களில் பல ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம். இந்த ஆண்டு கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ரசிகர்களை நல்லாவே சிரிக்க

வரவுள்ள லீப்மோட்டார் T03 காரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய சந்தையில் வெளியிடப்பட உள்ள லீப்மோட்டார் நிறுவனத்தின் T03 ஹேட்ச்பேக்  எலக்ட்ரிக் காரை பற்றி முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். 2023 ஆம் ஆண்டு ஸ்டெல்லண்ட்டிஸ் குழுமம் 20 % பங்குளை கைபற்றியிருந்த நிலையில் லீப்மோட்டாரில் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் ஐரோப்பா உட்பட இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கான சந்தைகளில் விரவுப்படுத்த 49 % பங்குகளை ஸ்டெல்லண்டிஸ் மற்றும் லீப்மோட்டார் 51 %  பங்குகளை கொண்டுள்ளது. Leapmotor T03 லீப்மோட்டார் நிறுவனத்தின் … Read more

“கண்ண சிமிட்ட முடியல'' ஆசிட் வீச்சில் தப்பிய பெண்கள் KYC செய்ய முடியாமல் தவிப்பு!

ஆசிட் தாக்குதலில் இருந்து பெண்கள் மீண்டாலும், அதன் விளைவுகளால் வாழ்க்கை முழுவதும் அவதியுறும் நிலை இருக்கிறது. 2006-ல் ஆசிட் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர் பிரக்யா பிரசூன். இவர் கடந்த ஆண்டு தனது சோஷியல் மீடியா பக்கத்தில், `கண்களை சிமிட்ட முடியாததால் கேஒய்சி (KYC) செயல்முறையை நிறைவு செய்யமுடியவில்லை. இதனால் எனக்கென பேங்க் அக்கவுன்ட் உருவாக்க முடியவில்லை’ என்று வருத்தம் தெரிவித்திருந்தார். பொதுவாகவே பேங்க் அக்கவுன்ட் உருவாக்க அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கேஒய்சி செயல்முறை கட்டாயம். ஆனால், பிரக்யாவின் விஷயத்தில் அவரால் … Read more

கோடை விடுமுறை முடிவதால் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வாகனங்கள் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம்: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் வாகனங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்க வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் கோடை விடுமுறை முடிந்து தனியார் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் காஞ்சிபுரம் தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் வாகனங்களின் இருக்கைகள், அவசர உதவி கதவுகள், … Read more

ஸ்வாதி மலிவால் மீது தாக்குதல்: கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் கைது

புதுடெல்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை சந்திக்க ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கேஜ்ரிவாலின் தனி … Read more

ACE என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  ‘ஏஸ்’ ( ACE)’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.   

காதலுனுக்காக காவல் நிலையத்தில் காத்திருந்த காதலி: காதலனை கட்டிப்போட்ட சாதி

தமிழரசியும் அரவிந்தனும் கடந்த நான்கு ஆண்டுகளாக  ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் பற்றி இரு குடும்பத்தினருக்கும் தெரியும்.

உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் சிறை செல்வீர்கள்! உஷார்

ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். அது பல இடங்களில் தேவைப்படுகிறது. புதிய மொபைல் இணைப்பு பெறுவது முதல் அரசின் எந்த ஒரு திட்டத்தின் பலனையும் பெறுவதற்கும் ஆதார் அட்டை இல்லாமல் எந்த வேலை செய்ய முடியாது. இருப்பினும், வேறொருவரின் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவது அல்லது உங்கள் ஆதாரை தவறாகப் பயன்படுத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது தவிர, ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் அட்டைகள் செய்திருந்தாலும், உங்கள் மீது நடவடிக்கை நிச்சயம். ஆதார் அட்டையை தவறாகப் … Read more

வைகாசி விசாகம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு…

நெல்லை:  வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு,  திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர் உள்பட முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, வரும் 22ந்தேதி வைகாசி விசாகம் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதே வேளையில் ரயில்வேயும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து,. வைகாசி … Read more