எல்லாமே வயித்துக்குத்தான் டா.. பெரிய அமவுண்ட் செட்டில்.. கிரிஞ்ச் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!

மும்பை: சும்மாவே அந்த கட்சியினர் விளம்பரத்துக்கு பெரிய தொகையை செலவு செய்வது வாடிக்கை தான். மேலும், நாடு முழுவதும் நடிகர்களை விட அதிகமாக நடிகைகளை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்திய இணைப்பாக அந்த கிரிஞ்ச் நடிகையும் வண்டியில் ஏறியிருப்பதாக கூறுகின்றனர். வெயிட்டான அமவுண்ட் கொடுத்ததால் சரக்கு விளம்பரத்தில் நடிப்பது போலத்தான் இதுவும் ஒரு

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்ய முன்வரும் தனியார் தொழில்முனைவோருக்கு அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும்

• இவ்வருடம் 100 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும். • நிதி உதவி மற்றும் பயிற்சி வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது – AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பசுமை இல்லத்தைப் பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதி தெரிவிப்பு. செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கை விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் ஆர்வமுள்ள தனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான ஆதரவை அரசாங்கம் … Read more

திருச்செந்தூர் கடலோரத்தில் மிதக்கும் ஜெல்லி மீன்கள் – அலர்ஜியால் பாதிக்கும் பக்தர்கள்! – தீர்வு?

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலம் திருச்செந்தூர்தான். பக்தர்கள், இங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு பின்னர் நாழிக்கிணற்றிலும் நீராடிவிட்டு முருகப் பெருமானை தரிசனம் செய்வது வழக்கம். சுவாமி தரிசனத்திற்குப் பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கியும், கடல் அலையில் விளையாடியும் பொழுதைக் கழிக்கின்றனர். இரவு நேரங்களில் சிலுசிலுவென வீசும் இதமான கடல் காற்றில் கடற்கரையிலேயே பக்தர்கள் உறங்குவார்கள். அலர்ஜியை ஏற்படுத்தும் ஜெல்லி மீன் இதனால், காலை முதல் இரவு … Read more

ஏற்காடு கோடை விழா: மே 22-ல் தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிப்பு

சேலம்: ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தை அடுத்துள்ள ஏற்காடு கோடை வாழிடம், ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் கோடை காலத்தில், கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதன்படி தற்போது கோடை விழா அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சியானது வரும் 22-ம் தேதி தொடங்கி 26- ம் தேதி வரை 5 … Read more

“பிரதமர் மீது அவதூறு பரப்ப டி.கே. சிவக்குமார் ரூ.100 கோடி பேரம்” – பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சையில் பிரதமர் மோடி மற்றும் குமாரசாமி மீது அவதூறு பரப்ப டிகே சிவகுமார் தனக்கு ரூ.100 கோடி அளிக்க முன்வந்ததாக பாஜக நிர்வாகி புகார் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள‌து. இந்நிலையில் அவரது வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரின்பேரில், தேவகவுடாவின் மூத்த மகன் … Read more

கிர்கிஸ்தானில் கலவரம்: இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தூதரகம் அறிவுரை

புதுடெல்லி / இஸ்லாமாபாத்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் வெடித்துள்ள கலவரத்தை ஒட்டி அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பத்திரமாக இருக்கும்படி இந்தியா, பாகிஸ்தான் அறிவுரை வழங்கியுள்ளது. கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனை ஒட்டியே இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் தத்தம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன. கடந்த மே 13 ஆம் தேதி கிர்கிஸ்தான் – எகிப்து மாணவர்கள் இடையேயான மோதல் … Read more

“வாரிசு படம் மாதிரி இருக்கே..” GOAT அப்டேட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்!

Latest News GOAT Movie Update : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் GOAT படத்தின் அப்டேட் இன்று வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள், இப்படாம் வாரிசு படத்தை நினைவூட்டுவதாக கூறி வருகின்றனர். 

நடிகை ராதிகா குறித்து அவதுாறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார்! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

சென்னை: திமுகவின் ஆபாச பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா தரப்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.  புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்குமா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. திமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் முக்கியமானவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. அவரது ஆபாச பேச்சை ஒரு தரப்பினரும் கண்டித்தாலும் திமுக தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்கின்றனர். இதனால், அவரது பேச்சு எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கனவே  தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான … Read more

\"யாராவது காப்பாத்த மாட்டாங்களா?\" குற்றால அருவியில் மிதந்தபடியே அடித்து செல்லப்படும் சிறுவன்- வீடியோ

தென்காசி: தென்காசியில் குற்றாலம் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறை என்பதால் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. தமிழகத்தில் மே 20 ஆம் தேதி வரை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் Source Link

Thalaimai Seyalagam Review: ’தலைமைச் செயலகம்’ விமர்சனம்.. ஓடிடியில் வெற்றிப் பெற்றாரா வசந்தபாலன்?

சென்னை: ‘அங்காடித் தெரு’, ‘அரவாண்’, ‘காவியத் தலைவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் கடைசியாக அநீதி படத்தை இயக்கி இருந்தார். ஷங்கரின் உதவி இயக்குநரான வசந்தபாலன் ‘முதல்வன்’ பட பாணியில் அரசியல் கதையை கையிலெடுத்திருக்கிறாரே அவரது வெப்சீரிஸ் எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், அதனை தலைமை செயலகம் வெப்சீரிஸ் பூர்த்தி செய்ததா?