அரச துறையில் ஊழலைத் தடுக்க புதிய வேலைத் திட்டம் ஆரம்பம்-  பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தெரிவித்தார். அரசியல் பொறிமுறையால் கொள்கை வகுக்க மாத்திரமே முடியும் எனவும் அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான தமது கடமையை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி … Read more

“மும்பையில் 2014-க்குபின் குண்டு வெடிக்காததை நினைவில் கொண்டு வாக்களியுங்கள்..!” – பிரதமர் மோடி

மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இக்கூட்டத்தில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”மும்பையின் உரிமைகளை திரும்ப கொடுப்பதற்காக வந்திருக்கிறேன். 2019-ம் ஆண்டு மக்கள் தீர்ப்பு திருடப்பட்டது. வளர்ச்சிப்பணிகள் தடைபட்டது. இப்போது வளர்ச்சித்திட்டங்கள் … Read more

“பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது; இந்தியா வெல்லும்” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “பாஜக.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!” என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை – பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் … Read more

5-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம்: இன்று மாலையுடன் நிறைவு

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்தாம் கட்டமாக நாளை மறுநாள் 49 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹாரில் 5, ஒடிசாவில் 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீரில் 1, லடாக்கில் 1 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட … Read more

கேன்ஸ் திரைப்பட விழாவில் தனி அங்கீகாரம் பெற்ற மலையாள படமான வடக்கன்!

மலையாள படமான ‘வடக்கன்’ திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவின் மார்ச்சு டு ஃபிலிம் ஃபென்டாஸ்டிக் பெவிலியனில் சரித்திர அறிமுகத்தை பெற்றுள்ளது.  

தமிழ்நாட்டில் மீண்டும் ‘காங்கிரஸ்’ ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா? செல்வப்பெருந்தகை

சென்னை: காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா?’  என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் ஏன் ஆட்சிக்கு வர முடியாது என்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதும் தொண்டர்களிடையே பேசிய செல்வபெருந்தகை,  தமிழ்நாட்டில்,  “என்றைக்காவது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று எங்களுக்கு கனவு உண்டு. அதற்கு எல்லோரும் சேர்ந்து அஸ்திவாரம் போடுவோம். இன்று இல்லை … Read more

\"வீட்டுக்கு போய் என்ன பதில் சொல்லுவேன்\".. குற்றாலத்தில் சிறுவன் பலியான நிலையில் கதறி அழுத பெண்!

தென்காசி: குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான நிலையில், “நான் வீட்டுக்கு போய் என்ன பதில் சொல்லுவேன்” என சிறுவனின் உறவினர் பெண் கதறிய பெண் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி Source Link

தப்பு தப்பா போடுறாங்க..இனி பேட்டி கொடுக்க மாட்டேன்.. நடுராத்திரியில் வீடியோ போட்ட சுசித்ரா!

சென்னை: பாடகி சுசித்ராவின் பேட்டி இணையத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், தனது யூடியூப் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யூடியூப் சேனல்கள் தப்பு தப்பாக தலைப்பு போடுகிறார்கள், இதனால், இனி யூடியூப் சேனலுக்கு பேட்டி தரப்போவதில்லை என்று கூறியுள்ளார். இணையத்தில் எந்த பக்கம் சென்றாலும், பாடகி சுசித்ரா பேசியது, பூதாகரமாக பேசப்பட்டு வருகிறது.

உள்நாட்டு கால்பந்து போட்டியில் அடுத்த ஆண்டு வரை ஆடுவேன் – சுனில் சேத்ரி பேட்டி

புதுடெல்லி, இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், முன்கள வீரருமான 39 வயது சுனில் சேத்ரி, அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் குவைத்துக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் சுனில் நேத்ரி காணொலி மூலம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- எனது உடல் நலம் காரணமாக நான் ஓய்வு முடிவை எடுக்கவில்லை. நான் இன்னும் நல்ல … Read more

அறிவியல் கண்காட்சி: ரோபோவுடன் கைகுலுக்கிய புதின்

பீஜிங், ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ள நிலையில் சீன அதிபர் ஜின்பிங் அவரை உற்சாகமாக வரவேற்றார். சுற்றுப்பயணத்தின் முதல்நாளில் பீஜிங்கில் நடந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளில் பெரும் தலைவர்களும் கலந்து கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இந்தநிலையில் 2-ம் நாள் பயணமாக சீனாவின் வடக்கு மாகாணமான ஹெய்லாங்ஜியாங்கில் உள்ள ஹார்பின் நகருக்கு ரஷிய அதிபர் புதின் வருகை தந்தார். அங்கே அந்த மாகாணத்தின் உச்சத்தலைவர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் சீனா-ரஷியா சார்பில் … Read more