ஸ்விஃப்ட் Vs பஞ்ச் vs எக்ஸ்டர் விலை, என்ஜின், வசதிகள் ஒப்பீடு.., எந்த காரை வாங்கலாம்.?

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற மைக்ரோ எஸ்யூவி டாடா பஞ்ச், அதன் போட்டியாளர் ஹூண்டாய் எக்ஸ்டர் உடன் அதே விலை பிரிவில் வந்துள்ள பிரசத்தி பெற்ற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலை ஒப்பீடு செய்து முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். குறிப்பாக ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்குள் உள்ள பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்ற ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கிற்கும், இந்த மைக்ரோ எஸ்யூவி மாடல்களுக்கும் நேரடி போட்டியில்லை என்றாலும் விலையின் அடிப்படையில் மட்டுமே இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன். … Read more

'45 Under 45’ இளம் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட விருது 

45 Under 45′ சுயதொழில் முயற்சியாளர்களுக்கு விசேட விருது வழங்கும் நிகழ்வு (16) கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.  குறுகிய காலத்தில் புதிய கண்டுபிடிப்பு முறைகளை பின்பற்றி வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெற்ற மற்றும் தமது திறமையினால் பிரதான நிறைவேற்று அதிகாரியாக இளம் சுயதொழில்  முயற்சியாளர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் விசேட விருது வழங்கும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.  இதன் போது இளம் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் 56 … Read more

Tamil News Live Today: கனமழை டு மிக கனமழை எச்சரிக்கை… தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு!

கனமழை டு மிக கனமழை வாய்ப்பு..! தமிழகத்தில் கோடை காலம் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக கோடை மழை குளிர்வித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, `தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய … Read more

வாட்ஸ்-அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி

சென்னை: வாட்ஸ்-அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை, மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழக மின்வாரியம் சார்பில்வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மொத்தம் 3.5 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தைக் கணக்கெடுக்க இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்படுகிறது. இந்த மீட்டரில் பதிவாகும் மின்நுகர்வை மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுத்து அதற்கேற்ப மின்கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இந்த மின்கட்டணத்தை மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் உள்ள கவுன்ட்டர்கள், மொபைல் செயலி மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி உள்ளது. … Read more

ஜார்க்கண்டில் டெண்டர் ஒதுக்கீட்டுக்கு அமைச்சர் ஆலம்கீர் 1.5% கமிஷன் பெற்றார்: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

ராஞ்சி: ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலம், ஒவ்வொரு டெண்டர் ஒதுக்கீட்டுக்கும் 1.5 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளார் என்று அமலாக்கத் துறை ராஞ்சியில் உள்ள பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது. டெண்டர் ஒதுக்கீட்டுக்கு லஞ்சம் பெற்றதாக ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் வீரேந்திர குமார் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித்துறை … Read more

மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் – நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் முறையீடு!

Savukku Shankar Latest News: மனரீதியாக, உளவியல் ரீதியாக கோவை சிறையில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் முறையீடு செய்துள்ளார்.  

பிரபல சீரியல் நடிகர் தற்கொலை… காரணம் என்ன தெரியுமா?

சென்னை: கடந்த வாரம் சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார். இது சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பவித்ரா ஜெயராமுடன் அந்த சீரியலில் இணைந்து நடித்த மற்றொரு நடிகரும் அவரது கணவருமான சந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை பவித்ரா ஜெயராம் Trinayani எனும் தெலுங்கு

வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை

ஜம்மு, காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில் மிகவும் பிரபலமானது. அக்கோவிலில் ஒரே நாளில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் தனது ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறது. அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் ஹெலிகாப்டர் சேவை தொடங்கும். ஜம்முவில் இருந்து சஞ்சி சாத்வரை ஹெலிகாப்டர் இயக்கப்படும். அங்கிருந்து பேட்டரி கார் மூலம் கோவில் அமைந்துள்ள பவனுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். சிறப்பு தரிசனம் முடித்து, அதே நாளில் திரும்ப விரும்பும் பக்தர்களுக்கு ரூ.35 ஆயிரமும், … Read more

2027-ம் ஆண்டுக்கான பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடக்கிறது

பாங்காக், சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) சிறப்பு கூட்டம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் 2027-ம் ஆண்டுக்கான 10-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு எது என்பது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டியை நடத்த பிரேசில் தனியாகவும், பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகள் இணைந்தும் விண்ணப்பித்து இருந்தன. கூட்டாக நடத்த முயற்சித்த அமெரிக்கா, மெக்சிகோ நாடுகள் கடந்த மாதமும், தென்ஆப்பிரிக்கா கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் … Read more

மது குடித்தபோது இளைஞருடன் வாக்குவாதம்: மண்ணுக்குள் புதைக்கப்பட்ட முதியவர் – 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

சிசினோவ், கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு மால்டோவா. அந்நாட்டின் உஷ்டியா கிராமத்தை சேர்ந்த 74 வயது மூதாட்டி கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து பிணமாக கிடந்தார். இந்த மர்ம மரணம் குறித்து மூதாட்டியின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையை தொடங்கிய போலீசார் மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர். இந்த கொலையில் மூதாட்டியின் உறவினரான … Read more