சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்ட  பட்டதாரி ஆசிரியர்களையே நியமிக்க நடவடிக்கை…

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை புறக்கணித்து வெளி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள்  பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என இரத்தினபுரி மற்றும் கேகாலை  மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பட்டதாரிகள் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட  தமிழ் பாடசாலைகளில் கடமையாற்ற தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர்கள் தயாராக உள்ளதாகவும் இந்த நிலையில் இம் மாவட்ட … Read more

`9 ஆண்டாகியும் மருத்துவக் கல்வியை முடிக்காதது ஏன்?’ – மாணவர் மரணம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவர் அஜித் குமார் திடீர் மரணம் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கள ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலைச்செல்வி, களப்பிரன், வழக்கறிஞர் பன்னீர்செல்வம், செந்தில்குமார், சத்தியநாதன், அபிமன்னன், வழக்கறிஞர் தங்கமணி ஆகியோர்களைக்கொண்ட கள ஆய்வுக்குழு, கள ஆய்வை மேற்கொண்டதில் கிடைக்கப்பெற்ற விவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடலூர் … Read more

ஆண்டிபட்டி | தீயணைப்பு துறை ஊழியர் வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றில் குளித்த சென்னை தீயணைப்புத் துறை ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடலை மீட்க முடியாததால் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டு 2-வது நாளான நேற்று காலை உடல் மீட்கப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). சென்னை தாம்பரம் தீயணைப்புத் துறையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். சொந்த ஊரில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்காக 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்திருந்தார். நேற்று முன்தினம் மதியம் நண்பர்களுடன் வைகை அணை … Read more

கடந்த 2019 முதல் இதுவரை 400 சொத்துகளை முடக்கிய என்ஐஏ

புதுடெல்லி: கடந்த 2009-ம் ஆண்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, தேசிய அளவிலான தீவிரவாத வழக்குகளை விசாரித்து வருகிறது. குறிப்பாக தீவிரவாத அமைப்புகள், தீவிரவாதிகளின் சொத்துகளை முடக்கி வருகிறது. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை 400-க்கும் மேற்பட்ட சொத்துகளை என்ஐஏ முடக்கி உள்ளது. இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: என்ஐஏ அமைப்பின் ராஞ்சி பிரிவு, பிஹார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அமைப்புகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த … Read more

RCB vs CSK: இன்று பெங்களூருவில் மழை வருமா? சமீபத்திய வானிலை அறிக்கை!

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings: கடந்த வியாழன் அன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ஐபிஎல் 2024 பிளேஆஃப்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது இடத்தைப் உறுதிப்படுத்தியது. போட்டி வாஷ்அவுட் ஆனதால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றன. இதன் மூலம் ஹைதராபாத் அணி 15 … Read more

2 நிமிடம் போதும்.. மோடி அடுத்து என்ன பேசுவாருன்னு நான் முடிவு செய்வேன்.. ராகுல் காந்தி பேச்சு

ரேபரேலி: தான் விரும்பியதை எல்லாம் பிரதமர் மோடியைப் பேச வைக்க முடியும் என்ற ராகுல் காந்தி, தேர்தல் முடிந்ததும் மோடி நிச்சயம் பிரதமர் பதவியில் நீடிக்க மாட்டார் என்றும் தெரிவித்தார். நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் Source Link

நாட்டாமை படத்துல சிவாஜியா?.. குஷ்பு எப்படி வந்தாரு தெரியுமா? கே.எஸ். ரவிக்குமார் ஓபன் பேட்டி!

சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கே.எஸ். ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்றில் நாட்டாமை படத்தில் விஜயகுமார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது சிவாஜி சார் தான் என பேசியுள்ளார். மேலும், அந்த படத்தில் குஷபுவுக்கு முன்னதாக எந்த நடிகையை தேர்வு செய்திருந்தேன் என்பதையும் குஷ்பு எப்படி படத்தில் கமிட்டானார் என்பதையும் கூறியுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன்,

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – பதற வைக்கும் சிசிடிவி காட்சி

லக்னோ, உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் சாலையோரம் இருந்த மதுபானக் கடை அருகே கடந்த 14-ம் தேதி இரவு 8 மணியளவில் இளம் பெண் ஒருவர் மார்கெட்டுக்கு சென்றுவிட்டு தெருவோரமாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்து நபர் ஒருவர் இளம் பெண் ஒருவர் மார்கெட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது நபர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.டீரென பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். பெண்ணை கீழே தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அந்த … Read more

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் இடைநீக்கம்

புதுடெல்லி, உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா, கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்தார். அவர் உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையினர், தன்னிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த வருவதற்கு வசதியாக எங்கு இருக்கிறேன் என்ற தகவலை கடந்த ஒரு ஆண்டில் 3 முறை அளிக்க தவறிவிட்டார். இதனையடுத்து பிரவீன் … Read more

விமானத்தில் இருந்து திடீரென விழுந்த ஊழியர்.. வைரலாகும் வீடியோ

ஜகார்த்தா: இந்தோனேசிய தலைநகர் ஜகாத்தா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. டிரான்ஸ்நுசா விமானத்தின் உள்ளே சென்று ஆய்வு செய்த விமான நிறுவன ஊழியர் ஒருவர், ஆய்வை முடித்துவிட்டு இறங்க முயன்றுள்ளார். ஆனால் அவர் உள்ளே இருப்பதை கவனிக்காத பிற ஊழியர்கள், இறங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை அங்கிருந்து அகற்றியுள்ளனர். அந்த ஊழியர் விமானத்தின் கதவை திறந்து படிக்கட்டில் கால் வைத்தபோது, படிக்கட்டு நகர்ந்ததால் நொடிப்பொழுதில் நிலை தடுமாறி … Read more