குமரியில் மோடியின் 2-ம் நாள் தியானம்: கவனம் ஈர்த்த நிகழ்வுகள் என்னென்ன?

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை 2-வது நாள் துறவி கோலத்தில் தியானத்தில் ஈடுபட்டார். அவர் காவி உடையுடன் ருத்ராட்ச மாலையை ஏந்தியவாறு சூரிய வழிபாடு, கங்கா வழிபாட்டில் ஈடுபட்டார். இந்தியாவின் கடைக்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு தியானத்தை துவக்கினார். சனிக்கிழமை மாலை வரை அவர் 3 நாள் தொடர் தியானம் மேற்கொள்கிறார். சுவாமி விவேகானந்தர் இதே பாறையில் 132 ஆண்டுகளுக்கு முன்பு 3 நாள் … Read more

“சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” – ரேவண்ணா விவகாரம்; கர்நாடக உள்துறை அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: “பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் அதிகாரிகளுக்கு ரேவண்ணா ஒத்துழைத்ததாக தெரிகிறது” என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து நள்ளிரவு 12.50 மணிக்கு வந்தார். முன்னதாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், எஸ்ஐடி அவரை காவலில் எடுத்துள்ளது. ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் … Read more

வரும் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 31-05-2024: தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 01-06-2024: தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் … Read more

Actor Dhanush: தனுஷுடன் ஜோடி சேரும் கியாரா அத்வானி.. அட சூப்பர் காம்பினேஷன்தான்!

சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறார் நடிகர் தனுஷ். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்து வரும் தனுஷ், தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தனுஷின் இயக்கத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு ராயன் படம் அடுத்த

விமானங்கள் தாமதம்; 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ. நோட்டீஸ்

புதுடெல்லி, சர்வதேச விமானங்கள் புறப்படுவதில் தாமதம் மற்றும் பயணிகளை உரிய முறையில் கவனிக்கத் தவறியது ஆகிய காரணங்கள் தொடர்பாக ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து கண்காணிப்பு ஆணையமான டி.ஜி.சி.ஏ. இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் கடந்த 24-ந்தேதி மும்பையில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்ற ஏ.ஐ.179 விமானம் மற்றும் 30-ந்தேதி டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்ற ஏ.ஐ.183 விமானம் ஆகிய இரண்டு சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு விமானங்களும் … Read more

டி20 உலகக்கோப்பை: மிட்செல் மார்ஷ் பந்துவீச மாட்டார் – ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

நியூயார்க், 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நாளை முதல் ஜூன் மாதம் இறுதிவரை நடைபெற இருக்கிறது. இம்முறை இந்த தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருக்கும் வேளையில் இந்திய அணியானது ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்தை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது. இந்த தொடரில் … Read more

மாகாண விளையாட்டு விழா – 2024 குத்துச் சண்டைப் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான குத்துச்சண்டை போட்டி கடந்த 2024.05.25 ஆம் திகதி தொடக்கம் 27.05.2024 ஆம் திகதி வரை முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்தினைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டி அன்றைய தினம் காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகியது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டிகள் 27.05.2024 ஆம் திகதி மாலை 7.30 மணியளவில் போட்டிகள் நிறைவு பெற்றது. அதனைத் … Read more

மாருதி சுஸூகி ஸ்விப்ட் 2024: புது ஸ்விஃப்ட் – குறைந்த சிலிண்டர்… கூடிய மைலேஜ்!

ஒரு கார் 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து விற்பனையில் இருப்பது என்பது ஒரு பெரிய சாதனை. அந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது மாருதி ஸ்விஃப்ட். அதிலும் புதிய ஸ்விஃப்ட் விற்பனைக்கு வரப்போகிறது என்ற நிலையில்கூட, கடந்த ஏப்ரல் மாதம் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையானது. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்விஃப்ட், மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட்டாக விற்பனைக்கு வந்திருக்கிறது. புதிய இன்ஜின், புதிய அம்சங்கள், தரம் உயர்த்தப்பட்ட கேபின், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றோடு அறிமுகமாகியிருக்கும் ஸ்விஃப்ட்டின் துருப்புச் … Read more

ஓய்வு பெற்ற ‘டீன்’களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிப்பு: மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு

சென்னை: அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற டீன் உள்ளிட்டோருக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உஷா, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் (டீன் நிலை) பார்த்தசாரதி ஆகியோர் இன்றுடன் (மே … Read more

“இறை நம்பிக்கை இருந்தால் வீட்டில் தியானம் செய்யலாம்” – மோடியை விமர்சித்த கார்கே

புதுடெல்லி: தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் இதனை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. இது தொடர்பாக அவர் கூறுகையில், “அரசியலையும், மதத்தையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது. அது இரண்டுமே தனித்து தான் இருக்க வேண்டும். ஒரு மதத்தை சேர்ந்தவர் உங்கள் பக்கம் இருக்கலாம். மற்றொரு மதத்தை சேர்ந்தவர் உங்களுக்கு எதிராக இருக்கலாம். அதனால் மதம் சார்ந்த உணர்வுகளையும் தேர்தலையும் … Read more