பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த பகீர் செயல்..! சென்னை மடிப்பாக்கத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

சென்னை மடிபாக்கத்தில் உள்ள வீட்டில் கணவன், மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் சோகத்தில் பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்கொலை என காவல் துறை சார்ப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

முதலிடம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவனின் மேல்படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும்: முதல்வருக்கு கடிதம்

சென்னை: பொதுத் தேர்வில் மாற்றுத் திறனாளிகளில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற மாணவனின் மேல்படிப்புக்கான செலவை தமிழக அரசே ஏற்க வலியுறுத்தி, முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, சங்கத்தின் மாநில தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் எல்லப்பன் நகர் பகுதியை சேர்ந்த மாணவர் வா.மதன் பார்வை மாற்றுத்திறனாளி ஆவார். இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் … Read more

“எங்கள் புதிய வாழ்க்கையின் முதல் நாள்” – சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற்ற குடும்பத்தினர் கொண்டாட்டம்

புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஒரு குடும்பத்தினர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற்றதால் நேற்று முன்தினம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதியின்படி குடியுரிமை திருத்தசட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி முதல்முறையாக 300 பேருக்கு இந்தியக் குடியுரிமை சான்றிதழை மத்திய அரசு நேற்று முன்தினம் வழங்கியது. இதையொட்டி டெல்லி ஆதர்ஷ் நகர் முகாமில் உள்ள மாதோ பாய் தாக்கூரின் வீட்டில் நேற்று முன்தினம் … Read more

சுற்றுலா பயணியின் வாட்சை ஒப்படைத்த இந்திய சிறுவனுக்கு துபாய் காவல் துறை பாராட்டு

துபாய்: துபாயில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தொலைந்தபொருட்களை எளிதில் கண்டுபிடிக்க உதவவும் ‘ஸ்மார்ட் காவல்நிலையம்’ என்ற ஆன்லைன் சேவையை காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையோடு துபாய் வீதிகளில் சிறுவன் முகமது அயன் யூனிஸ் உலாவியபோது விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை வழியில் கண்டான். உடனே ‘ஸ்மார்ட் காவல் நிலையம்’ இணையதளத்தில் இதுகுறித்து பதிவிட்டான். இதையடுத்து, துபாய் காவல் துறை அதிகாரிகள் முகமது அயனிடமிருந்து கைக்கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டனர். அதனை துபாய்க்குச் சுற்றுலா … Read more

வைகாசி விசாகத்தில் திருத்தணி முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்! 1 கோடி ரூபாய் காணிக்கை!

Thiruthani Murugan Temple : முருகன் அவதரித்த புனிதமான வைகாசி மாதத்தில் திருத்தணியில் சண்முநாதராக காட்சியளிக்கும் முருகரை தரிசித்த பக்தர்கள்… காணிக்கை விவரம்…  

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (SCBA) தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார். சிபல் 1066 வாக்குகளும், இவரை அடுத்து மூத்த வழக்கறிஞர் பிரதீப் ராய் 689 வாக்குகளும், தற்போதைய தலைவர் மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஆதிஷ் சி அகர்வாலா 296 வாக்குகளையும் பெற்றனர். இவர்களைத் தவிர, பிரியா ஹிங்கோராணி, திரிபுராரி ரே, நீரஜ் ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் போட்டியிட்டனர். SCBAவின் தலைவராக சிபல் பதவியேற்பது இது நான்காவது முறையாகும். துணைத் தலைவராக … Read more

Hot spot movie: ரசிகர்களை கவர்ந்த ஹாட் ஸ்பாட் படம்.. ஓடிடி ரிலீஸ் எப்பன்னு பாருங்க!

சென்னை: கலையரசன், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ் சோபியா ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்து கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஹாட் ஸ்பாட். சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் ஆகியோர் இசையமைத்திருந்த இந்த படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய விமர்சனங்களை பெற்றது.

பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

புதுடெல்லி, பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சார்பில் வக்கீல் கார்த்திக் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் … Read more

குஜராத் அணிக்கு எதிரான போட்டி மழையால் ரத்து: ஐதராபாத் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

ஐதராபாத், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற இருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் மொத்தமாக 15 புள்ளிகளை பெற்ற ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கொல்கத்தா , ராஜஸ்தான் … Read more

சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? ஏன்?

பிரடிஸ்லாவா, சுலோவக்கியா நாட்டின் பிரதமராக இருப்பவர் ராபர்ட் பிகோ (வயது 59). இந்நிலையில், தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் கூட்டம் ஒன்று நேற்று மதியம் நடத்தப்பட்டது. இதில், அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். துப்பாக்கி சூடு ஆதரவாளர்களுடனான இந்த சந்திப்புக்கு பின்னர் பொது மக்களையும் அவர் சந்தித்து பேசினார். அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் பிகோவை நோக்கி பல முறை சுட்டுள்ளார். இதனால், … Read more