போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை : அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகள்டன் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.  இது குறித்து இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில்  தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா,  முதல்வரின் முதன்மை செயலாளர் முருகாநந்தம்,  … Read more

வாய் விட்ட மோடி.. பின்னாடியே \"மீன் குழம்புடன்\" வந்த மம்தா.. மூக்கை துளைக்கும் பாஜகவின் உணவு அரசியல்

பாட்னா: பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுப்பிய கேள்வி சர்ச்சையை கிளறி விட்டுள்ளது.. இதற்கு பல்வேறு தலைவர்கள் பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது நவராத்திரி விரத நாட்களில் பொரித்த மீன் சாப்பிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். Source Link

Ilaiyaraaja: இளையராஜா வெளியிட்ட உற்சாகப்பதிவு.. வாவ் 35 நாட்கள்ல இப்படி ஒரு சாதனையா?

சென்னை: இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து பல்லாயிரக்கணக்கான பாடல்களை வெற்றி பாடல்களாக கொடுத்துள்ளார். அவரது இசை தற்போது வரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகவே அமைந்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் விடுதலை படம். விடுதலை படத்தின் பாடல்கள் மட்டுமில்லாமல் பிஜிஎம்-மும் ரசிகர்களை

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் நீண்ட காலமாக நிலவி வருகின்ற எல்லைப் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில் விசேட கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலகத்தில் இன்று (16) இடம் பெற்றது. குறித்த விசேட கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது. இதன் போது இவ்விரு மாவட்டங்களுக்கிடையில் காணப்படும் எல்லைப் பிரச்சினைகள் மற்றும் காணி பிணக்குகள் தொடர்பாக பல்வேறு … Read more

“இதெல்லாம் உன்னால பண்ண முடியாதுன்னு சொன்னாங்க!" – கார் ஓட்டுநர் உரிமம் பெற்ற தான்சேன்

இரு கைகளையும் இழந்தால் என்ன? எல்லாவற்றையும் விட, எல்லாரையும் விட தன்னம்பிக்கை எனும் மிகப்பெரிய கை என்னிடம் இருக்கிறதே எனத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பவர் தான்சேன். ராகவா லாரன்ஸின் `காஞ்சனா 3′ திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பார். டிரம்ஸ் வாசித்து பலரையும் மிரளவும் வைத்திருக்கிறார். இவர் வழக்கறிஞரும் கூட! தான்சேன் தமிழ்நாட்டில் முதன் முதலாக கார் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கிறார். அவரிடம் இது குறித்துப் பேசினோம். தான்சேன் “நிறைய பேர் மாற்றுத்திறனாளிகளை ஒதுக்குறாங்க. இவங்களால என்ன பண்ண முடியும்னு நினைக்கிறாங்க. … Read more

ஏழு பேர் விடுதலை எப்போது..? தமிழக ஆளுநருக்கு கம்யூனிஸ்ட் கோரிக்கை.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களின் தண்டனையை ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. அவர்கள் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியும் இன்று வரையிலும் இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. Source link

காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடையா? – அரசு மறுப்பு

சென்னை: உண்மைக்கு புறம்பாக “காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை” என்ற 16.05.2024 நாளிட்ட செய்தி, பிரபல நாளிதழில் வெளியாகியுள்ளது. இதுபோன்று தமிழக அரசு எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அனைத்து கூட்டங்களிலும் தமிழக அரசு சார்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ தொடர்ந்து பங்கேற்று தமிழகத்தின் … Read more

முதல் 4 கட்ட மக்களவைத் தேர்தலில் 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள நான்கு கட்ட தேர்தல்களில் 66.95 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும், மொத்தமுள்ள 95 கோடி வாக்காளர்களில் இதுவரை சுமார் 45.10 கோடி பேர் வாக்களித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட தகவல்: பிரபல கிரிக்கெட் வீரரும், தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதருமான சச்சின் டெண்டுல்கர் உங்களைத் தொலைபேசியில் அழைத்து, நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். … Read more

சத்யராஜ், வசந்த் ரவி நடிக்கும் வெப்பன் படத்தின் அப்டேட் வெளியீடு

Weapon Release Date Update: குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது.  

தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ விவகாரம் : பாஜக நிர்வாகிகள் ஜாமீன் மனு தள்ளுபடி

தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாக பணம்கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இருவரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.