"இதையெல்லாம் பார்ப்பது என் வேலையில்லை. அந்த நேரத்தில்…" – சர்ச்சைகளுக்கு இளையராஜா பதிலடி

இசை பெரிதா, பாடல் வரிகள் பெரிதா, காப்புரிமை சர்ச்சைகள் எனக் கடந்த சில வாரங்களாக இளையராஜா பற்றிய பேச்சுக்கள், விமர்சனங்கள் பேசுபொருளாகியிருந்தன. சமீபத்தில் வைரமுத்து இசையை விடப் பாடல் வரிகள்தான் பெரிது என்று பேசியது ‘இசை பெரிதா, பாடல் வரிகள் பெரிதா’ என்ற சர்ச்சையைக் கிளப்பியது. பலரும் இது பற்றிப் பேசியது சமூகவலைதளங்களில் வைரலாகி இருந்தது. இதற்கிடையில் ரஜினி – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் ‘கூலி’ படத்தின் டைட்டில் ரிவீலிங் வீடியோவில், இளையராஜாவின் ‘வா… வா… பக்கம் … Read more

பிரதமரை எதிர்த்து போட்டியிடும் 36 பேர் வேட்புமனு நிராகரிப்பு

வாரணாசி பிரதம்ர் மோடியை எதிர்த்து போட்டியிடும் 55 வேட்பாளர்களில் 36 பேர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட முன்வந்த நகைச்சுவை நடிகர் ஷியாம் ரங்கீலா உள்பட 36 பேரின் வேட்புமனுக்களை நிராகரித்துள்ளது. இது  மற்ற வேட்பாளர்கள் இடையே கடும் அதிருப்திய் உருவாக்கி உள்ளது. பிரபல நகைச்சுவை நடிகரும் வாரணாசியில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவருமான ஷியாம் ரங்கீலா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,  “வாரணாசி தொகுதியில் போட்டியிடும் 55 … Read more

ராஃபாவில் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துங்கள்.. சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வலியுறுத்தல்

கேப் டவுன்: ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தை தென்னாப்பிரிக்கா நாடியுள்ளது. பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட Source Link

நிலத்தகராறு.. பா. ரஞ்சித் சகோதரர் அடியாட்களுடன் சென்று தாக்குதல்.. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு நிலத்தகராறு பஞ்சாயத்தில் ஈடுபட்டு அடியாட்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் கட்டப் பஞ்சாயத்து நடப்பதாக விஷால் தனது ரத்னம் திரைப்படம் வெளியாகும் போது பேசியிருந்தார். ஆனால், சினிமா இயக்குநரான பா. ரஞ்சித்தின் தம்பியே இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறாரா என ரசிகர்கள்

அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையின் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்குவதற்காக நியாயமான வேலை திட்டத்தை தயாரிப்பதற்கு ஆலோசனை

அரச முகாமைத்துவ உதவியாளர் இச்சையில் குறைந்த புள்ளிகளை பெற்ற நபர்களுக்கு,பதவி உயர்வுகளை வழங்குவதற்காக நியாயமான வேலைத் திட்டமொன்றைத் தயாரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பாராளுமன்றத்தில் (13) இடம்பெற்ற அரசு நிர்வாக உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். அரச முகாமை உதவியாளர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சையில் குறைந்த புள்ளிகளாக 40% வீதம் … Read more

விரலுக்கு பதில் சிறுமியின் நாக்கில் ஆபரேஷன்… விளக்கம் கேட்ட சுகாதாரத்துறை அமைச்சர்!

கேரள மாநிலம், கோழிக்கோடு செறுவன்னூரைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு, கையில் ஆறாவதாக ஒரு விரல் இருந்தது. கூடுதலாக இருந்த அந்த விரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்காக, கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய் – சேய் நலப்பிரிவில் சிறுமி நேற்று அனுமதிக்கப்பட்டார். இன்று சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிச்சை முடித்து ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்த சிறுமியின் வாயில் பஞ்சு வைக்கப்பட்டிருந்ததை உறவினர்கள் பார்த்தனர். அதுகுறித்து உறவினர்கள் கேட்டபோது, தவறுதலாக … Read more

நீர் மேலாண்மையில் தமிழகத்துக்கு நம்பர் ஒன் விருது..! விவசாயி எடப்பாடியாரின் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம்.

விவசாயியாக இருப்பதால், நீர் மேலாண்மை விவகாரங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்நோக்கு சிந்தனையோடு செயலாற்றிவருகிறார். அதற்கு மத்திய அரசின் அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. Source link

திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா போலீஸில் புகார்

சென்னை: பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியாதாக திமுக பிரமுகரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா போலீஸில் புகார் அளித்துள்ளார். திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பாஜக நிர்வாகி குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து, கொடுங்கையூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் … Read more

இண்டியா கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்: மல்லிகார்ஜுன கார்கே

புவனேஸ்வர்(ஒடிசா): இண்டியா கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக் கடந்த 24 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக நரேந்திர மோடி அவருக்கு ஆதரவளித்து வருகிறார். ஒடிசாவின் முன்னேற்றத்துக்காக அவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம். நாங்கள் நினைத்ததற்கு எதிராக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் … Read more

iQOO Z9X 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z9X 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. அந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். பட்ஜெட் விலையில் மூன்று வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z9X 5ஜி ஸ்மார்ட்போனை இப்போது அந்த நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. … Read more