சென்னையை குளிர்வித்த கோடை மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் ஆங்காங்கே மழை பெய்த நிலையில் வெப்பத்தால் வாடிய சென்னை மக்களை கோடை மழை குளிர்வித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலுக்கிடையில், மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் இன்று காலை 8 … Read more

“விவசாயிகள் ஏன் ஆம் ஆத்மியை எதிர்த்து போராடவில்லை” – பஞ்சாப் பாஜக தலைவர் கேள்வி

சண்டிகர்: “பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க தலைவர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மியை எதிர்த்து போராட்டம் கூட மேற்கொள்வதில்லையே! அது ஏன்?” என அந்த மாநில பாஜக தலைவர் சுனில் குமார் ஜாக்கர் கேள்வி எழுப்பியுள்ளார். மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, ஷிரோமணி … Read more

இந்தியன் 2 ட்ரெய்லர் ரெடி.. அடுத்த மாதம் ரிலீஸ், இதோ முழு அப்டேட்

Indian 2 Trailer Update: கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் தற்போது தயாராகயுள்ள நிலையில், அடுத்த மாதம் இதன் ட்ரெய்லர் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

“விஜயகாந்த் போன்ற ஒருவரை இனி பார்க்கவே முடியாது" – பத்மபூஷண் விருதுக்கு ரஜினி வாழ்த்து

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது சூப்பர் ஸ்டார் வழங்கியதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சித் தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷண் விருதை, அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா கடந்த 9-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். நடிகர் விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் … Read more

தஞ்சாவூர் மாவட்டம் ,திருப்புவனம், அருள்மிகு கம்பகரேசுவரர் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம் ,திருப்புவனம், அருள்மிகு கம்பகரேசுவரர் ஆலயம் திருவிழா: பங்குனி உத்திரம் – பிரம்மோற்சவம் -18 நாட்கள் திருவிழாசரப உற்சவம் – பங்குனி பிரம்மோற்சவம் முடிந்தவுடன் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் சரப உற்சவம் நடைபெறும். அன்று ஏக தின அர்ச்சனை நடக்கும். அன்று இரவு சுவாமி வெள்ளி ரதத்தில் புறப்பாடு – திருவீதி உலா.சரபேசர் சிறப்பு பூஜைகள் : வெள்ளி , சனி, ஞாயிறு, அஷ்டமி, பவுர்ணமி ஆகிய 5 நாட்களின் போதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. … Read more

இன்ஸ்டாகிராம் லைவில் 160 கிமீ வேகம்.. அடுத்த நொடி ஏற்பட்ட கொடூர விபத்து! பறிபோன இரண்டு உயிர்கள்! ஷாக்

காந்தி நகர்: இன்ஸ்டாகிராம் தளத்தில் லைவ் செய்யும் போது மணிக்கு சுமார் 160 கிமீ வேகத்தில் சென்ற இளைஞர்கள் கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதனால் இரண்டு உயிர்கள் பரிதாபமாக பறிபோயுள்ளது. இந்த காலத்தில் இளைஞர்கள் ரியல் வாழ்க்கையை விட சோஷில் மீடியா வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் லைக்களை பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் Source Link

சுசித்ராவால் சோஷியல் மீடியாவில் வெடித்த சர்ச்சை.. விஜய் vs தனுஷ் ரசிகர்கள் சண்டை எல்லை மீறுதே!

சென்னை: ஆர்ஜே மற்றும் பாடகியாக இருந்த சுசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் அளித்து வரும் பேட்டிகள் சோஷியல் மீடியாவில் பெரும் பிரளயத்தை உண்டாக்கி வருகிறது. சுச்சி லீக்ஸ் பிராங்க் போல சுசித்ரா தற்போதும் பிரபலங்களை வைத்து பிராங்க் செய்து வருகிறாரா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து பல

முல்லைத்தீவு மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாண பணிகள்…..

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன், மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு நேற்று (15/05/2024) அடிக்கல் நாட்டப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நிலத்தடி நீரினால் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதிகளில் … Read more

'ரேபரேலி தொகுதியும் நேரு குடும்பமும்’ – ரேபரேலியை ராகுல் தேர்ந்தெடுத்த பின்னணியும் களநிலவரமும்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோ பதிவில், “நாட்டின் பிற பகுதிகளுடன் ரேபரேலியை இணைக்க திட்டமிட்டுள்ளேன். என் அம்மா சோனியா காந்தி மற்றும் என் பாட்டி இந்திரா காந்தி செய்த பணிகளை நான் முன்னெடுத்துச் செல்வேன். எங்கள் குடும்பம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுடன் 100 ஆண்டுகளுக்கும் மேலான உறவைக் கொண்டுள்ளது. அன்பு மற்றும் நம்பிக்கையின் அடித்தளத்தில், இந்த உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. அமேதி, ரேபரேலி எங்களை அழைக்கும்போதெல்லாம், நாங்கள் அங்கு … Read more

கதவை திறக்க முடியாததால் வீட்டின் முன்பு உறங்கிய கரடி: சமூக வலைதளங்களில் வைரல் காட்சி @ குன்னூர்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டின் கதவைத் திறக்க முடியாததால், வாயிலிலேயே கரடி படுத்துஉறங்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. குன்னூர் பகுதியில் அண்மைக்காலமாக விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரைத் தேடி, மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் கரடி உள்ளிட்ட விலங்குகள் வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக குன்னூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தீயணைப்பு அலுவலகப் பகுதியில் ஒரு கரடிசுற்றி வருகிறது. அப்பகுதியில்உள்ள குடியிருப்பில் நுழைந்த கரடி, … Read more