'மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆவார்' – அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் நம்பிக்கை

வாஷிங்டன், பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சஜித் தரார். இவர் கடந்த 1900-களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவர் பாகிஸ்தானின் அரசியல் வட்டாரத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்பார் என சஜித் தரார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;- “மோடி ஒரு குறிப்பிடத்தக்க தலைவர். அவரிடம் இயல்பாகவே தலைமைப் பண்பு … Read more

பெண் காவலர்கள் குறித்த நேர்காணல்: பகிரங்க மன்னிப்பு கோரிய ‘ரெட் பிக்ஸ்’ யூடியூப் சேனல்

சென்னை: “தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது” என்று ரெட் பிக்ஸ் ஊடகத்தின் பொது மேலாளரும், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவியுமான ஜேன் ஃபெலிக்ஸ் கூறியுள்ளார். … Read more

சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் டீ, காபி குடிப்பதை தவிர்க்கவும்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை

புதுடெல்லி: உடலுக்கு இரும்புச் சத்து வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஊட்டச்சத்து மையத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உணவுமுறை வழிகாட்டல் தொடர்பாக 17 புதிய விதிமுறைகளை கூறியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பல வகை உணவு மற்றும் வழக்கங்களின் … Read more

நெல்லை வந்த அரசு விரைவு பேருந்தில்  துப்பாக்கி பறிமுதல்

நெல்லை இன்று சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவு பேருந்தில்  துப்பாக்கி, அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன்.  இவ்வாறு. அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தீவிர விசாரணை நடத்தி … Read more

கிரிமினல் மனநோயாளி.. அவரை பத்தி சுசித்ரா அப்படி பேசவே கூடாது.. பயில்வான் ரங்கநாதன் பதிலடி!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், தனுஷ், திரிஷா உள்ளிட்ட பலர் குறித்து படுமோசமாக பாடகி சுசித்ரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் குறித்தும் படுமோசமாக சுசித்ரா பேசியுள்ளார். இந்நிலையில் அதற்கு பதிலடி தரும் விதமாக பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் சுசித்ராவை

காதலை ஏற்க மறுப்பு; வீடு புகுந்து இளம்பெண்ணை குத்தி கொன்ற வாலிபர்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் உப்பள்ளி பெண்டிகேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட வீராப்புரா ஓனி பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (வயது 20). இவர் தனது பாட்டி கங்கம்மா மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வந்தார். அதேப்பகுதியை சேர்ந்தவர் விஸ்வா என்கிற கிரீஷ் சாவந்த் (23). இவரும் அஞ்சலியும் வகுப்பு தோழர்கள் ஆவர். இதனால் அஞ்சலி, விஸ்வாவுடன் நட்பாக பேசி வந்தார். அத்துடன் விஸ்வா திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. … Read more

டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா புறப்பட்ட வங்காளதேச அணி

கொழும்பு, 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் மோதுகின்றன.உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், அணிகள் ஒவ்வொன்றாக அமெரிக்கா புறப்பட்டன. சில … Read more

சிங்கப்பூரின் புதிய பிரதமராக லாரன்ஸ் வாங் பதவியேற்பு

சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் இன்று பதவியேற்றார். சுமார் 20 ஆண்டுகள் பதவியில் இருந்த லீ சியென் தனது பதவியை துறந்த நிலையில், துணை பிரதமராக இருந்த லாரன்ஸ் வாங் இன்று சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்றுள்ளார். 51 வயதான லாரன்ஸ் வாங், சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகிக்க உள்ளார். அவருக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சிங்கப்பூரில், திட்டமிடப்பட்ட அரசியல் தலைமை … Read more

தேர் திருவிழாக்களில் அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில் தேர் திருவிழாக்களின் போது அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள காளியம்மன் கோயிலில், கடந்த 2022-ம் ஆண்டு தேர் திருவிழா நடத்தப்பட்டது. மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த திருவிழாவின் போது, தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. … Read more