தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு – ஜனாதிபதி இடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு, (Donald Lu) (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பையும் டொனால்ட் லூ பாராட்டினார். இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான … Read more

CAA: முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கியது மத்திய அரசு!

பாஜக மத்தியில் 2019-ல் ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களில், நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியது. பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் விரைவாக சட்டமாகவும் மாற்றப்பட்டது. இதன் சாராம்சம் என்பது, `பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் குடியேறிய இந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம், சீக்கிய மதத்தவர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் இங்கு தங்கியிருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும்’ என்பதுதான். CAA – குடியுரிமை திருத்தச் சட்டம் இதில், … Read more

சவுக்கு சங்கர் விவகாரத்தில் மனித உரிமைகளை காவல் துறை மீறக் கூடாது: செல்வப்பெருந்தகை

தருமபுரி: சவுக்கு சங்கர் விவகாரத்தில் தமிழக காவல்துறை கண்ணியத்துடனும், மனித உரிமைகளை மீறாமலும் நடந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தருமபுரியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று (மே 15) நடந்தது. தருமபுரி பேருந்து நிலையம் அருகில் தனியார் அரங்கில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக நடந்த … Read more

சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கியது மத்திய அரசு

புதுடெல்லி: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு மத்திய அரசு குடியுரிமை சான்றிதழ் வழங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சிஏஏ அமலுக்கு பிறகு முதல் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டன. மத்திய உள்துறைச் செயலர் ஸ்ரீ அஜய் குமார் பல்லா இன்று 14 பேருக்கு குடியுரிமை … Read more

உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி’ – குழந்தைகள் உற்சாகம்

கார்கிவ்: ரஷ்ய போருக்குப் பின்னர் உக்ரைனின் கார்கிவ் நகரில் உருவாக்கப்பட்டிருக்கும் முதல் பதுங்குகுழி பள்ளிக்கு (பங்கர் பள்ளி) வந்த குழந்தைகள் தங்கள் ஆசிரியர், நண்பர்களை சந்தித்து உற்சாகம் அடைந்தனர். இரும்புக் கதவுக்கு அருகில் இரண்டு ஆசிரியர்கள் நின்று அவர்களை வரவேற்க காங்கிரீட் படிகளுக்கு கீழே இருக்கும் குண்டு துளைத்த மற்றொரு கதவைக் கடந்து ஒரு தாயும், மகளும் உற்சாகமாக கையை ஆட்டியபடி அங்கிருந்த வகுப்பறைக்குள் நுழையும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. 6 மீட்டர் ஆழத்தில்… … Read more

மாஸாக வெளியாகியுள்ள ராம் பொதினேனியின் டபுள் ஐஸ்மார் டீசர்!

நடிகர்கள் உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடிப்பில் பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியன் படமான ’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!  

அருப்புக்கோட்டையில் ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  

"அம்மாவின் நகை, என் வாழ்கையை மாற்றிய தருணம் அதுதான்…" – ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இப்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோ ஒன்றை துபாயில் அமைந்த்துள்ளார். உலகின் விலையுயர்ந்த இசைக் கருவிகள், ரெக்கார்டர்கள், மிக்ஸர்கள், தேவைக்கேற்றவாறு அறையின் உயரத்தையும், அகலத்தையும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுமளவிற்கு அதிநவீன வசதிகள் அனைத்தும் அங்கிருக்கின்றன. அதன் பெயர் ‘Firdaus Studio’. ஆரம்ப காலங்களில் சின்ன ஏசி அறையில் மிக்ஸ்ர்களை வைத்துக் கொண்டு ஸ்கோரிங், ரெக்கார்டிங் செய்வதற்குக் கூட எதையும் வாங்க முடியாமல் எதிர்காலத்தை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு உட்கார்ந்திருந்த ரஹ்மான், இன்று உலகின் மிகப்பெரிய, அதிநவீன ஸ்டுடியோவில் தனது … Read more

30 ஆம் தேதி வரை மனீஷ் சிசோடியாசின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

டெல்லி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த அண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது.  பிறகு  டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது … Read more

இதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை.. கோவை சரளா சொன்ன காரணம்.. ஓபனா பேசிட்டாங்களே

சென்னை: நகைச்சுவை ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. அது இருப்பதால்தான் பலர் தங்களது கவலைகளை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு அளப்பரியது. ஆனால் அதில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கோலோச்சுவார்கள். அப்படிப்பட்ட ஃபீல்டில் மனோரமாவுக்கு அடுத்து ஒரு பெண் கோலோச்சினார் என்றால் அது கோவை சரளாதான். இந்தச் சூழலில் தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை