இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் எக்கச்சக்க புது வரவுகள்..மிஸ் பண்ணாம பாத்துருங்க..!

OTT Releases This Week : ஓடிடி தளங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களும் தொடர்களும் வெளியாக இருக்கின்றன. அவற்றின் லிஸ்டை இங்கு பார்ப்பாேம்.   

சவுக்கு சங்கரை எதிர்த்து பெண்கள் நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம்! ஏன் தெரியுமா?

சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசி வரும் சவுக்குசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.  

ஹர்திக் பாண்டியாவை நிராகரித்த ரோஹித் சர்மா! நிர்பந்தத்தால் அணியில் சேர்ப்பு!

இந்திய அணி கடைசியாக ஐசிசி உலக கோப்பையை வென்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கடைசியாக இந்திய அணி 2007ல் டி20 உலக கோப்பையை வென்றது.  கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையை பைனலில் கைவிட்டது. இந்நிலையில், அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல சில கடுமையான முயற்சிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. அதன்படி, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை … Read more

நியாயமான உணர்வுக்கும்‌ மதிப்பளியுங்கள்;‌ தாழ்ந்த விமர்சனங்கள்‌ வைப்பது ஏற்புடையதல்ல- ஜி.வி.பிரகாஷ்

“ஒவ்வொரு தனி மனிதரின்‌ நியாயமான உணர்வுக்கும்‌ மதிப்பளியுங்கள்‌” என்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி.வி. பிரகாஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் ‘அன்வி’ எனும் மகளும் உள்ளார். இதனிடையே இருவரும் விவகாரத்துப் பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் 11 வருட காதல் திருமண வாழ்க்கையை இருவரும் முறித்துக் கொள்வதாக … Read more

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு! டிஎன்பிஎஸ்சி வெளியீடு…

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 118 காலியிடங்கள் உள்ளதாகவும், இந்த காலியிடங்களில், நிரப்பப்படும் பணியிடங்களுக்கு தேவையான அனுபவம், டிகிரி, இன்ஜினியரிங் உள்பட கல்வித் தகுதி உள்ளவர்கள் ஜூன் 14ம் தேதிக்குள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அடங்கிய பதவிகளை நிரப்புவதற்கான … Read more

இந்துவை போட்டு தள்ளி மனோகரி.. ரகசியத்தை உடைத்த வேலு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழில் கார் மீது வேனை மோதி விபத்தை ஏற்படுத்த, விபத்தை நேரில் கண்டு பதறும் சுடர் அவனை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து கனகவல்லிக்கு தகவல் கொடுத்து வேலுவால் தான் இப்படி

பாரம்பரிய பெருந்தோட்டத் தொழிற்துறைக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத்துறையொன்று நாட்டிற்கு அவசியம்

• புதிய சட்டத்தின் ஊடாக விவசாயத் தொழில் தொடர்பான நிறுவனங்களுக்கு இடையே உள்ள தடைகள் அகற்றப்படும். • தோட்டத் துறையில் புதிய தொழில்நுட்ப முகாமைத்துவம் அறிமுகப்படுத்தப்படும். • விவசாய ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சட்ட வரைவுக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் – ஜனாதிபதி. பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தாம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய … Read more

அமித் ஷா பிரதமர் ஆவாரா..?

இந்த முறை பா.ஜ.க. வெற்றி அடைந்து மீண்டும் பிரதமர் மோடியே தொடர்வார் என்று அமித் ஷா உறுதி அளித்திருக்கிறார். அது மட்டுமின்றி, தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 தென் மாநிலங்களிலும் பாஜக இந்த முறை தனித்த கட்சியாக பா.ஜ.க. வெற்றி பெறும் என்று மீண்டும் மீண்டும் அமித் ஷா கூறிவருவதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்று எதிர்க் கட்சியினர் சந்தேகம் எழுப்புகிறார்கள். Source link

யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை உனடியாக திரும்பப் பெறுக: டிடிவி தினகரன்

சென்னை: தமிழக அரசின் வனத்துறையால் அவசரகதியில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை உனடியாக திரும்பப் பெறுவதோடு, முறையான ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரித்த பின்னரே இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக அரசின் யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். வனத்துறையால் அவசரகதியில் தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு அறிக்கையை அரசு உடனடியாக … Read more