ராஜஸ்தான் | சுரங்கத்தில் சிக்கிய இந்துஸ்தான் காப்பர் நிறுவன அதிகாரிகள்: மீட்புப் பணிகள் தீவிரம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் காப்பர் லிமிடட் நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் ஏற்பட்ட லிஃப்ட் கோளாறு காரணமாக 15 அதிகாரிகள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களில் 3 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து நடந்தது எப்படி? கொல்கத்தாவில் இருந்து அதிகாரிகள் குழு ஒன்று சுரங்கத்தை ஆய்வு செய்வதற்காக நேற்று ராஜஸ்தான் வந்திருந்தது. அந்தக் குழுவானது ஆய்வை முடித்துக் கொண்டு நேற்றிரவு 8 மணியளவில் … Read more

மீண்டும் சவுக்கு ஷங்கர் மீது வழக்கு பதிவு! இந்த முறை என்ன வழக்கு தெரியுமா?

YouTuber Savukku Shankar: இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு உதவிய நபர்களை சென்னையில் தேடுகிறது என்ஐஏ…

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு விவகாரத்தில், சந்தேகிக்கப்படும் நபர்  கைது செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னையில் தங்க உதவி செய்தவர்கள்  இருவரை தேடும் பணியில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சென்னையின் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 2024 மார்ச் மாதம் 1ந்தேதி அன்று பெங்களூரில் உள்ள  பிரபல உணவகமாக ராமேஸ்வரம் கபே உணவகத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தது. இதனால் ஏற்பட்ட  வெடி விபத்தில் பத்துக்கும் … Read more

4 கட்ட தேர்தலில் 270 இடங்களில் பாஜக வெற்றி- மெஜாரிட்டி கிடைச்சுடுச்சு..இப்பவே ரிசல்ட் சொன்ன அமித்ஷா!

கொல்கத்தா: 18-வது லோக்சபா தேர்தலில் தற்போதே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டது; பிரதமர் மோடி 5 ஆண்டுகாலம் மீண்டும் பிரதமராக தொடருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: லோக்சபா தேர்தலில் தற்போது வரை 4 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்து Source Link

Cannes 2024: கோலாகலமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா.. திரையிடப்படும் இந்திய படங்கள்!

கேன்ஸ்: Cannes 2024 (கேன்ஸ் 2024): 77ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவானது மே 15ந் தேதியில் இருந்து இம்மாதம் 25ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலகத்தில் பல்வேறு மொழிகளில் உள்ள திரைப்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இது ஒரு பெரிய கௌரவமாகவே கருதப்படும். ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவுக்கு அடுத்ததாக சினிமாத்

6 ஏர்பேக்குகளை பெற்ற மாருதி ஃபிரான்க்ஸ் காரின் Delta+ (O) வேரியண்டில் அறிமுகம்

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஃபிரான்க்ஸ் க்ராஸ்ஓவர் மாடலில் Delta+ (O) என்ற வேரியண்டில் 6 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டு Delta+ வேரியண்டை விட ரூ.15,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது. தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற Delta+ என்ற மாடலில் உள்ள 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் ஸ்டீயரிங் வீலில் கண்ட்ரோல் சுவிட்சுகள், எலக்ட்ரிக் அட்ஜெஸ்டபிள் ORVM, கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. … Read more

உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதைப் போல கலைகளையும் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – என வட மாகாண ஆளுநர்

உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதைப் போல, கலைகளையும் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் (14/05/2024) நேற்று நடைபெற்ற போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். உள்ளூராட்சி அமைப்புகள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், கிராம அபிவிருத்தி திணைக்களங்கள் தம்மிடம் காணப்படும் நிதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, உள்ளூர் எழுத்தாளர்களின் … Read more

சேலம்: பேருந்தை ஓட்டும்போதே மயங்கிய டிரைவர்… பயணிகளுடன் தடுப்புச் சுவரில் மோதிய அரசுப் பேருந்து

ஈரோடு மாவட்டம், பெரிய சேமூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் ராஜா. இவர் ஈரோடு காசிபாளையம் அரசு போக்குவரத்து டிப்போவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 5.40 மணிக்கு ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது காலை 6.30 மணி அளவில் சங்ககிரி டூ சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வி.என். பாளையம் மாரியம்மன் கோயில் பகுதியில் வந்த போது, டிரைவர் செந்தில் ராஜா உடல்நிலை குறைவால் திடீரென … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந் தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். இதன் பகுதியாக தமிழகத்தில் இன்று … Read more

தேவகவுடாவின் மகன் ரேவண்ணா ஜாமீனில் விடுதலை

பெங்களூரு: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை கடத்திய‌ வழக்கில் கைதான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணா நேற்று நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33)பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின் பேரில் அவர் … Read more