ஜப்பான் நாட்டில் தோலோடு சாப்பிடும் வாழைப்பழம் உருவாக்கம்

டோக்கியோ தோலோடு சாப்பிடக்கூடிய வாழைப்பழத்தை ஜப்பானில் உருவாக்கி உள்ளனர். எளிய மக்களுக்கும் கிடைக்கும் சத்தான பழமான வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ரக வாழைப்பழமும் பிரத்தியேகமான சத்துக்களையும், தித்திப்பான சுவையையும் கொண்டிருப்பவை.  நாம் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிந்து விடுவோம். வாழைப்பழத் தோலில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. இந்தத் தோல் இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பல நோய்களை குணப்படுத்தும் தன்மைகளை கொண்டுள்ளது.  தோல் கசக்கும் என யாரும் சாப்பிடமாட்டார்கள். இந்நிலையில் ஜப்பானின் … Read more

Chaya singh: நடிகை வீட்டில் நகை திருட்டு…கைவரிசை காட்டிய பணிப்பெண் கைது!

சென்னை: தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக சாயா சிங் வீட்டில், நகையை திருடிய பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும், வீட்டில் நகைகள் இருப்பதை தெரிந்து கொண்ட பணிப்பெண், யாருக்கும் தெரியாமல் நகையை எடுத்துச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. திரைப்பட நடிகையான சாயா சிங், 2000 ஆண்டு கன்னடத்தில் வெளியான முன்னாடி என்ற படத்தின்

XUV 3XO எஸ்யூவிக்கு முன்பதிவை துவங்கிய மஹிந்திரா

மே 15 ஆம் தேதி இன்றைக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள மஹிந்திராவின் புதிய XUV 3XO எஸ்யூவி மாடலின் ஆரம்ப விலை ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடும் போட்டியாளர்கள் நிறைந்த 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள எஸ்யூவி சந்தையில் முந்தைய XUV300க்கு மாற்றாக வந்துள்ள XUV3XO மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், ரெனோ கிகர், நிசான் மேக்னைட் உட்பட … Read more

அண்ணாமலை வழக்கு விவகாரமும் பதறிய ஆளுநர் மாளிகையும் – என்ன நடந்தது?!

அண்ணாமலையின் கருத்தால் சர்ச்சை! தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல நேரங்களில் சர்ச்சையான கருத்துக்களைச் சொல்லி, சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். அதுபோலவே, கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, பேரறிஞர் அண்ணா குறித்து முத்துராமலிங்க தேவர் பேசியதாக ஒரு கருத்தை முன்வைத்தார். இந்த சம்பவம் அரசியல் கட்சிகளைத் தாண்டி சாதிய அமைப்புகளிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் அண்ணாமலை தொடர்ந்து தவறான கவலைகளைப் பரப்புவதாகவும், … Read more

2 லட்சம் தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்க வேண்டும்: ராமதாஸ், அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 2 லட்சம் தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். ராமதாஸ்: தமிழகத்தில் கடந்தமூன்றாண்டுகளுக்கும் மேலாகவே மகப்பேறு நிதியுதவி முறையாக வழங்கப்படுவதில்லை என்றுகுற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. மத்திய அரசின் நிதியுதவியுடன்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதால், கருவுற்ற பெண்களின் விவரம், அவர்களுக்கு செய்யப்படும் மருத்துவ ஆய்வுகள், அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் போடப்படும் தடுப்பூசிகள் ஆகியவை குறித்த விவரங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக … Read more

அமித் ஷா குறித்து சர்ச்சை கருத்து: ராகுல் மீதான மானநஷ்ட வழக்கு மே 27-ல் விசாரணை

புதுடெல்லி: “கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பாஜகவின் தலைவராக உள்ளார்” என்று மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து 2018-ல் நடந்த கர்நாடக பேரவை தேர்தலின்போது, பெங்களூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். இதையடுத்து, அமித் ஷா குறித்து ராகுல் காந்தி அவதூறு பரப்பியதாகக் கூறி அவர் மீது பாஜக தலைவர் விஜய் மிஷ்ரா மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குத் தொடர்பாக கடந்த ஆண்டில் ராகுலுக்கு நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியது. இந்நிலையில், நீதிமன்றத்தில் … Read more

தொடர்ந்து 60 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 60 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 60 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

சைந்தவி நல்ல பொண்ணு.. ஜி.வி. பிரகாஷ் விவாகரத்து விவகாரம்.. தனுஷ் போல மாறிட்டாருன்னு ராஜன் தாக்கு!

சென்னை: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றது தொடர்பாக சமீபத்தில் வீடியோ மூலம் இருவரையும் தயாரிப்பாளர் கே. ராஜன் வெளுத்து வாங்கியிருந்தார். இருவரது தனிப்பட்ட விவகாரம் தொடர்பாக ராஜன் எந்தவொரு கருத்தையும் எப்படி சொல்லலாம் என அவரை தனுஷ் ரசிகர்கள் ரவுண்டு கட்டி பொளந்தனர். இந்நிலையில், ‘கன்னி’ எனும் படத்தின் இசை

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் பழனிசாமி ஆஜர்

சென்னை: தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். கடந்த ஏப்.15 அன்று சென்னைபுரசைவாக்கம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளரான பழனிசாமி, ‘மத்தியசென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனதுஎம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75 சதவீத தொகையை செலவு செய்யவில்லை என குற்றம் சாட்டி விமர்சித்து பேசியிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தயாநிதி … Read more

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 8000 பக்க குற்றப்பத்திரிகை: கவிதாவுக்கு மே 20 வரை காவல் நீட்டிப்பு

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள, தெலங்கானா மாநில மேலவை உறுப்பினரும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவுக்கு நீதிமன்ற காவல் நிறைவுற்றதால், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள், காணொலி மூலம் நீதிமன்ற விசாரணைக்கு நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணை நடைபெற்று வருவதால், கவிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என அமலாக்கத் துறை அதிகாரிகள் நீதிபதியை கேட்டுக்கொண்டனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக 8000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் … Read more