ஒன் பை டூ: “தமிழ்நாட்டின் நிலை ஆந்திராவுக்கு வரக் கூடாது…” என்ற அன்புமணி ராமதாஸின் விமர்சனம்?

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “அர்த்தமே இல்லாத கருத்து. ‘ஒன்றிய அரசுடன் இணங்கிப்போனால்தான் திட்டங்கள் கிடைக்கும். எனவே, பா.ஜ.க கூட்டணியிலுள்ள சந்திரபாபு நாயுடுக்கு வாக்களியுங்கள்’ என்ற அர்த்தத்தில், ஆந்திர தேர்தல் களத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார். ஓர் அரசியல் கட்சியைத் தனது சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்திக்கொள்பவர் அன்புமணி ராமதாஸ். ‘மீண்டும் மோடி பிரதமர் ஆவார். ஒன்றிய அரசில் நமக்கு ஏதாவது பதவி கிடைக்கும்’ என்று மனக்கணக்கு போட்டு இப்படியெல்லாம் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார் அவர். … Read more

சங்கரன்கோவில்: இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் செல்வராஜ் (15). இதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ஸ்ரீராம் (15) இவர்கள் இருவரும் சங்கரன்கோவில் – ராஜபாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு முடித்துள்ளனர். தெற்குபனவடலியை … Read more

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணா ஜாமீனில் விடுதலை

பெங்களூரு: பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணா, ஜாமீனில் வெளியே வந்துள்ளார். முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் மகனும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஹெச்.டி.ரேவண்ணா, தங்கள் வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவருக்கு முன் ஜாமின் கோரப்பட்டது. அதனை விசாரித்த மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட … Read more

தமிழகத்தில் 18 ஆம் தேதி வரை கனமழை தொடர்வதால் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்று தெரிவித்து குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோவை, தேனி,, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி,  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்து. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “வரும் மே 18- ஆம் தேதி … Read more

பெரிய இயக்குநருக்கு என் பொண்டாட்டி மேல கண்ணு…கதறும் அகோரி கலையரசன்!

சென்னை: கோயம்புத்தூரை சேர்ந்த நாட்டுப்புற கலைஞரான கலையரசன், தன்னை அகோரி என கூறிக்கொண்டு மனதில் பட்டதை பேசி பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். தற்போது இவர் அரசியல், பணம் பலம் கொண்ட பெரிய இயக்குநர் ஒருவருக்கு, தன் மனைவி மீது கண் என்று பேட்டி அளித்துள்ளார். இது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்

அண்ணாமலையின் மக்கள் பணிகளை முடக்க முடியாது- பா.ஜனதா அறிக்கை

சென்னை, தமிழக பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம், எதிர் கருத்து கூறுபவர்களை, அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை, முறைகேடுகளை அம்பலப்படுத்துபவர்களை அதிகாரம் என்ற ஆயுதம் கொண்டு நசுக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் தி.மு.க. அரசை விமர்சித்த பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. பியூஷ் மானுஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக … Read more

ஸ்டப்ஸ் , போரெல் அரைசதம்….லக்னோவுக்கு எதிராக டெல்லி அணி 208 ரன்கள் குவிப்பு

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 64-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மெக்கர்க் , அபிஷேக் போரெல் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் மெக்கர்க் அர்ஷத் கான் பந்துவீச்சில் … Read more

இந்தியாவின் தேசப்பற்று பாடல், சமோசா… ஜொலித்த அமெரிக்க வெள்ளை மாளிகை

வாஷிங்டன், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆசிய அமெரிக்கர்களின் பாரம்பரிய மாதத்திற்கான கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதனுடன், ஹவாய் மற்றும் பசிபிக் தீவு பகுதிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு இருந்தது. இந்த வருடாந்திர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்திய அமெரிக்கர்கள் பலரும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பித்தனர். இதில், இந்தியாவின் சாரே ஜகான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா என்ற பிரபல தேசப்பற்று பாடலை … Read more

காமராசர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா – ‘கன்வீனர்’ கமிட்டி அமைக்க வலியுறுத்தல்

மதுரை: மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமாவைத் தொடர்ந்து நிர்வாகத்தை கவனிக்க, விரைந்து ‘கன்வீனர்’ கமிட்டியை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக பணிபுரிந்த கிருஷ்ணன் அவரது பணிக்காலம் முடிவதற்குள் மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்றார். இவருக்கு பதிலாக காமராஜர் பல்கலை துணை வேந்தராக கடந்த 2022 மார்ச் மாதம் சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் ஜெ.குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 ஆண்டு பணிக்காலம் நிறைவு பெற, இன்னும் 11 மாதம் இருக்கும் நிலையில், … Read more

“சிஏஏ குறித்து பொய்களைப் பரப்புகிறார் மம்தா” – மேற்கு வங்கத்தில் அமித் ஷா தாக்கு

புதுடெல்லி: “மம்தா பானர்ஜி சிஏஏ சட்டம் தொடர்பாக பொய்களைப் பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகிறார். சிஏஏ சட்டத்தை அவரால் ஒருபோதும் தடுக்க முடியாது” என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பங்கானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமித் ஷா பேசியது: “4-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. அதாவது, 380 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் 18 இடங்களுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், நான் உங்களுக்கு … Read more