நடிகை கங்கணா ரணாவத் மண்டி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல்

மண்டி இன்று மண்டி தொகுதியில் நடிகை கங்கணா ரணாவ்த் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த வருட நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இத்துடன் இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதில் இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு … Read more

Actor Dhanush: ரிலீசுக்கு தயாராகும் தனுஷின் ராயன் படம்.. இசை வெளியீடு எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் தனுஷ் ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்குப் பிறகு தற்போது ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே நிறைவடைந்த சூழலில் ஏப்ரல் மாதத்திலேயே படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இடையில் நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில்

'அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்காக முதல் முறையாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது' – ராகுல் காந்தி

லக்னோ, ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சியில் இணைந்து உத்தர பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் ஜான்சி தொகுதியில் நடைபெற்ற பிரசார பேரணியில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் ராகுல் காந்தி பேசியதாவது;- “முதன்முறையாக அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்காக தேர்தல் நடக்கிறது. ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் என யாராக … Read more

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 64-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. லக்னோ : கே.எல். ராகுல்(கேப்டன்), குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் … Read more

வெள்ளை மாளிகை மீதான தாக்குதல் வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையை குறிவைத்து கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மே 22-ம் தேதி இரவு வெள்ளை மாளிகை நோக்கி வேகமாக வந்த டிரக், எச் வீதி, வடமேற்கு மற்றும் 16-வது தெரு சந்திப்பில் வெள்ளை மாளிகை மற்றும் ஜனாதிபதி பூங்காவை சுற்றியுள்ள பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதியது. பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த உலோகத் தடுப்புகள் மீது ஒருமுறை மோதிய பிறகு, அந்த டிரக் ரிவர்சில் வந்து மீண்டும் தடுப்புகள் மீது … Read more

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பாக பொது மக்களின் விருப்பத்தை பெற்றுக்கொள்வதற்கான கூட்டம் நேற்றைய தினம் (13.05.2024) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமைய,பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

"UPSC க்ளியர் பண்ண இதுல எல்லாம் கவனம் செலுத்துங்க!" – விகடன் சிறப்பு நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ்

ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து UPSC/ TNPSC Group – I, II தேர்வுகளில் வெல்வது எப்படி என்கிற நிகழ்வை கடந்த மே 11-ம் தேதி நடத்தியிருந்தது. போட்டித்தேர்வின் மீது ஆர்வமுள்ள மாணவ மாணவியர்கள் நூற்றுக்கணக்கில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெற்று சென்றனர். மாணவர்களுக்கென பிரத்யேகமான போட்டித்தேர்வு கேள்வி – பதில்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்பட்டு சிறப்பான மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சியில் … Read more

செய்தித் தெறிப்புகள் @ மே 14: பத்திரப்பதிவு கட்டண உயர்வு சர்ச்சை முதல் மோடி வேட்புமனு தாக்கல் வரை

வாரிசு சான்று விண்ணப்பம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு: ‘பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று பெற்று, சொத்துக்களை பெயர் மாற்றம் செய்வதால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது. உண்மை தகவல்களை மறைத்து வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிக்கப்படுவது தொடர்பான வழக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் ஐந்து வாரங்களில் … Read more

DC vs LSG | 19 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி @ ஐபிஎல்

புதுடெல்லி: இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த டெல்லி அணியின் ஓப்பனராக களமிறங்கிய ஜேக் ஃப்ரேசர் முதல் பந்தில் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து கைகோத்த அபிஷேக் … Read more

சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி… வெற்றியுடன் முடித்தது டெல்லி – இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!

DC vs LSG Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. 64ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் … Read more