மீண்டும் 21 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் கூடுகிறது

டெல்லி வரும் 21 ஆம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை வாரியம் கூடுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. காவிர் மேலாண்மை வாரியம் இதுவரிஅ 29 கூட்டங்கள் நடத்தி முடித்திருக்கிறது வரும் 21ம் தேதி 30 வது காவிரி … Read more

Star movie: கவினின் ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ்.. டேட்டை லாக் செய்த படக்குழு!

சென்னை: நடிகர் கவின் -இயக்குனர் இளன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஸ்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள சூழலில் படம் முதல் மூன்று நாட்களிலேயே 15 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 20 கோடி ரூபாய்களை நோக்கி இந்த படத்தின் வசூல், பயணம் செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

'சி.ஏ.ஏ. குறித்து மம்தா பானர்ஜி பொய்களை பரப்புகிறார்' – அமித்ஷா குற்றச்சாட்டு

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் பாங்கான் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சாந்தனு தாக்கூரை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;- “குடியுரிமை திருத்தச் சட்டம்(சி.ஏ.ஏ.) குறித்து மம்தா பானர்ஜி பொய்களை பரப்பி வருகிறார். ஆனால் சி.ஏ.ஏ.வால் யாருக்கும் எந்த அசவுகரியமோ, சிரமமோ ஏற்படாது என்று நான் உறுதியளிக்கிறேன். பா.ஜ.க.வை ஆதரிப்பதால் அகதிகள் இந்த நாட்டில் குடியுரிமை மற்றும் மரியாதை இரண்டையும் பெறுவார்கள். சி.ஏ.ஏ.வின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் … Read more

பரீட்சையின் போது சிக்கல்கள் ஏற்படுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் மாணவர்களுக்கு அநீதி ஏற்;படாத வகையில் புள்ளிகள் வழங்கப்படும்

போட்டிப் பரீட்சையொன்றின் போது சிக்கல்கள் ஏற்படுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் மாணவர்களுக்கு அநீதி ஏற்;படாத விதத்தில் புள்ளிகள் வழங்கக்கூடிய நடைமுறையொன்று மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உதாரணமாக, ஏதேனுமொரு நீக்கப்பட்ட பகுதியிலிருந்;து வினாப்பத்திரம் ஒன்று தயாரிக்கப்படடிருந்தால், அந்த வினாவிற்கு … Read more

Allu Arjun: "எந்த அரசியல் கட்சியுடனும் எனக்குத் தொடர்பில்லை!" – அல்லு அர்ஜுன் விளக்கம்

ஆந்திராவில் சட்டசபை மற்றும் மக்களைவைத் தேர்தல் நேற்று மே 13ம் தேதி நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பவண் கல்யாணுக்கு ஆதரவாக அவரின் அண்ணன் மகன் நடிகர் ராம் சரண் தேர்தல் பிரசாரம் செய்தார். மறுபுறம் தனது நண்பனும், நாந்தியால் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான ஷில்பா ரவி ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் ‘புஷ்பா’ நடிகர் அல்லு அர்ஜுன். நேரடியாக அரசியலில் பெரிதாகப் பங்கெடுக்காத இந்த இரண்டு முன்னணி நடிகர்களும் இத்தேர்தலில் ஆதரவு தெரிவித்தது ஆந்திரத் தேர்தலில் பெரும் பேசுபொருளாக மாறியது. … Read more

கோவில்பட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு – 14 பேருந்துகளுக்கு நோட்டீஸ்

கோவில்பட்டி: கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வில், குறைபாடுகள் கண்டறியப்பட்ட 14 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்கைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு இன்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடந்த ஆய்வின்போது, பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் மோட்டார் வாகன விதிகள் குறித்தும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கு.நெடுஞ்செழிய பாண்டியன் விளக்கினார். தீயணைப்புத்துறை எம்.சுந்தரராஜ் தலைமையில் குழுவினர் … Read more

சொந்த வீடு, கார் இல்லை – பிரதமர் மோடி சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி

புதுடெல்லி: தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி கோடி என்றும், சொந்தமாக வீடு, கார் இல்லை என்றும் பிரதமர் மோடி தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த சொத்து மதிப்பு என்பது அவரது அசையும், அசையா சொத்துகள், முதலீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றுள்ள தகவல்: மொத்த சொத்து … Read more

KS ரவிக்குமார் மற்றும் விக்ரமன் என்வாழ்வில் முக்கியமான நபர்கள் – சரத்குமார்!

கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகும் ‘ஹிட்லிஸ்ட்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.  

தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்…

Edappadi Palanisamy: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்குக் ஜூன் 27ஆம் தேதி மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யாமல் உணவுதானிய கிடங்கில் தேங்கியிருக்கும் அரிசியை அப்புறப்படுத்த மத்திய அரசு திட்டம்

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKY) திட்டத்தில் ஏளைகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசிக்கான வரைமுறையை மத்திய அரசு மாற்றியமைத்ததை அடுத்து இந்திய உணவுக் கழகத்தின் (FCI) குடோன்களில் 18 மில்லியன் டன்னுக்கும் அதிகமான அரிசி தேங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக கொள்முதல் செய்யப்பட்ட இந்த அரிசி தற்போது வீணாக தேங்கியிருப்பதை அடுத்து அதனை அப்புறப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாகத் தகவல் … Read more