கோழிக்கோட்டில் மோசமான வானிலை: கோவைக்கு திருப்பிவிடப்பட்ட துபாய் விமானங்கள்

கோவை: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன. சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தின் தலைநகரமான தம்மாம் மற்றும் துபாயிலிருந்து இரண்டு விமானங்கள் காலை கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு சென்று கொண்டிருந்தன. மழை மற்றும் மோசமான வானிலை நிலவிய காரணத்தால் மேற்குறிப்பிட்ட இரு விமானங்களும் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து, இரு துபாய் விமானங்களும் கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன. … Read more

டெல்லியில் 4 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தீப்சந்த் பந்து மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை மற்றும் குருதாக் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தினுள் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அந்த இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் … Read more

மத்திய ஆசியாவில் இந்தியா ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவும் சாபஹர் துறைமுக ஒப்பந்தம்…!

இந்தியாவும் ஈரானும் இணைந்து சபஹர் துறைமுகத்தை மேம்படுத்தி நிர்வகிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார கூட்டாண்மை மேலும் வலுப்பெற்றுள்ளது. 

தி வெர்டிக்ட்: கோலிவுட்டில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம்

அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது.

கொலையாக மாறிய தற்கொலை வழக்கு: தந்தையின் பகீர் வாக்குமூலம்

Crime News in Tamil Nadu: ஒசூர் அருகே வாலிபர் தற்கொலை செய்துகொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவதூறு வழக்கு காரணமாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: திமுக எம்.பி.  தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆஜர் ஆனார். இதையடுத்து வழக்கின் விசாரணை  ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பேசிய இபிஎஸ், தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 75 சதவிகித பணத்தை செலவு செய்யவே இல்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 95 … Read more

‛‛யோகியை விட முக்கியத்துவம்’’.. வேட்புமனு தாக்கலில் பிரதமர் மோடிக்கு அருகே சீட்.. யார் இந்த தமிழர்?

வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி தான் போட்டியிடும் வாரணாசி லோக்சபா தொகுதியில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். இந்த வேளையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தே பின்வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் பிரதமர் மோடி அருகே இன்னொருவர் அமர்ந்திருந்தார். அவர் யார்? யோகி ஆதித்யநாத்தை விட பிரதமர் மோடி அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? தமிழகத்துக்கும், அந்த நபருக்கும் Source Link

சுச்சி லீக்ஸ்.. தனுஷ் செய்தது இதைத்தான்.. சீக்ரெட்டை போட்டுடைத்த சுசித்ரா

சென்னை: சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதில் நிக்கி கல்ரானி, அனுயா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதனை பின்னணி பாடகி சுசித்ராதான் வெளியிட்டிருக்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சூழலில் அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்ரில் தனுஷ் மீது எக்கச்சக்கமான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது

அதிக விலையில் ஐக்யூப்.., குறைந்த விலை போட்டியாளர்கள்.. எந்த இ-ஸ்கூட்டர் பெஸ்ட்..?

குறைந்த விலையில் பல்வேறு வசதிகள் வழங்குகின்ற போட்டியாளர்களை விட அதிக விலையில் வசதிகள் மற்றும் ரேஞ்ச் வழங்குகின்ற டிவிஎஸ் ஐக்யூப் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு எந்த மாடல் சிறப்பானது என்பதை எல்லாம் தொடர்ந்து இப்பொழுது பார்க்கப் போகின்றோம். இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐக்யூபிற்கு போட்டியாக ஏதெர் ரிஸ்டா, ஆம்பியர் நெக்சஸ், பஜாஜ் சேட்டக், ஓலா S1X, S1 ஏர், மற்றும் S1 pro, ஹீரோ வீடா உள்ளிட்ட மாடல்களுடன் பல்வேறு சிறிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களும் உள்ளனர். மேலும் … Read more

இந்த ஆண்டு 20 புனிதத் தலங்களை வர்த்தமானியில் வெளியிடத் திட்டம்…

கடந்த ஆண்டு 19 புனிதத் தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது… வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட புனிதத் தலங்களின் மொத்த எண்ணிக்கை 130… இந்த ஆண்டு 20 புனிதத் தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் 09 வழிபாட்டு தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஹம்பாந்தோட்டை உத்தகந்தர ரஜமஹா விகாரை, குருநாகல் தம்பதெனிய ரஜமஹா விகாரை, மொனராகலை பிரிவு பியங்கல ரஜமஹா விகாரை, புத்தளம் வெஹெரகல ரஜமஹா விகாரை, … Read more