சரிந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் – மனுஷ நாணயக்கார

நாட்டின் பொருளாதார சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அரசியல் சவாலாக எடுத்துக் கொள்ளாமல், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஏற்றுக்கொண்டது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார் . ஹம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை விளையாட்டரங்கில் கடந்த (10) அன்று ஆரம்பமான ‘ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் பதினான்காவது கட்டத்தின் அங்குரார்பண நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் “சிலரால் தாங்கள் இடதுபுறம் அல்லது வலதுபுறம் … Read more

BCCI : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக என்னென்ன தகுதிகள் வேண்டும்?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் பிசிசிஐ இறங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தப் பணியை பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன என்றும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. Rohit – Dravid இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். டிராவிட் 2021 ஆம் ஆண்டில் நடந்த டி20 உலகக்கோப்பை முடிந்த சமயத்திலிருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்றார். அவரின் பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதத்தோடு அதாவது ஓடிஐ உலகக்கோப்பையோடு முடிந்தது. ஜூன் மாதமே டி20 … Read more

கரூரில் சோகம்: கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு

கரூர்: கரூரில் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் – ஆண்டாள்கோவில் புதூரைச் சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் (12). அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் விஷ்ணு (11), இளங்கோ மகன் மாரிமுத்து (11) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் அதே பகுதியில் உலா பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை 3 பேரும் வீட்டில் விளையாடுவதாக வீட்டில் சொல்லி விட்டு … Read more

வேட்பு மனு தாக்கலுக்கு முன் கங்கைக் கரையில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

வாராணசி: வாராணசியில் இன்று பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக வாராணசி சென்றுள்ள பிரதமர், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார். தொடர்ந்து அங்குள்ள கால பைரவர் கோயிலிலும் பிரார்த்தனை செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்தே வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் உட்பட பல மத்திய அமைச்சர்கள், … Read more

TN Board Result 2024 : இன்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. ரிசல்ட் எப்படி செக் செய்வது?

TN Board Class 11th Result 2024: தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் இன்று காலை வெளியாகயுள்ளது. இந்த ரிசல்டை எந்த தளத்தில், எப்படி பார்ப்பது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

ஐபிஎல் 2024ல் சொதப்பல்! டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?

2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் ஷர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது மூன்று வித போட்டிகளுக்கும் கேப்டனாக உள்ளார் ரோஹித் சர்மா. ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது.  இதில் இந்திய அணி குரூப் Aல் பரம எதிரிகளான பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவுடன் … Read more

இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையில், கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு…

வாரணாசி: வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று வேட்புமனுதாக்கல் செய்ய உள்ள நிலையில், காலையில் கங்கையில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.  அத்தொகுதியில் அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ளாா்  அவர் இன்று(மே 14) வேட்புமனு தாக்கல் செய்கிறாா். முன்னதாக,  வாரணாசிக்கு  நேற்று (திங்கள்கிழமை) மாலை  வந்த மோடி, நேற்று  மாலையில் 6 கி.மீ. தொலைவுக்கு நகரின் முக்கியப் … Read more

கோலிவுட் ஃபேவரைட் ஜோடி விவாகரத்து.. ஜிவி பிரகாஷை பிரிந்த சைந்தவியின் குடும்ப பின்னணி தெரியுமா?

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகனும், இசையமைப்பாளர், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது பள்ளி கால தோழியான சைந்தவியை பல வருடங்கள் காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருமே ஒருவரையொருவர் அனுசரித்து, புரிந்துகொண்டு வாழ்க்கையை நகர்த்தி வந்தார்கள். இதன் காரணமாக கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்ற பெயரையும் இவர்கள் பெற்றார். ஆனால் யார் கண்

ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுக விபரம்

ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நடப்பு 2024-2025 ஆம் நிதியாண்டில் வருவதற்கு சாத்தியமில்லை என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் எந்த காலகட்டத்தில் விற்பனைக்கு வரும் என்பது குறித்து உறுதியான காலக்கெடுவை தெரிவிக்கவில்லை, ஆனால் ஒரு குழு பிரத்தியேகமாக எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் இருச்சகர வாகனங்களை தயாரிக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஸ்டார்க் என்ற நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மின்சார வாகன வணிகத்தை உருவாக்க தனியான பிரத்யேக வணிகக் … Read more

07 பில்லியன் ரூபா செலவில் மேலும் பல வீதி அபிவிருத்திப்பணிகள்…

07 பில்லியன் ரூபா செலவில் மேலும் பல வீதி அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் காலநிலைக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பில் இடம் பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 பில்லியன் ரூபா செலவில் வீதி அமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 07 பில்லியன் ரூபா செலவிலான வீதி அபிவிருத்திப்பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக … Read more