விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்

முசாபர்பாத்: பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்றுவரும் போராட்டம் நேற்று நான்காவது நாளை எட்டியது. கோதுமைமாவு விலைஉயர்வு, மின்கட்டண ஏற்றம் ஆகியவற்றை கண்டித்து அவாமி செயற்குழு தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் மக்கள் திரளாக ஈடுபட்டுள்ளனர். ஆரம்பத்தில் அமைதி வழியில் போராடி வந்தவர்களைக் கலைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இறங்கினர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வன்முறை வெடித்தது. இதில் பாதுகாப்புபடை … Read more

Vetrimaaran: வாடிவாசல் சூட்டிங் எப்ப ஸ்டார்ட் ஆகும் தெரியுமா.. வெற்றிமாறனே சொன்ன அப்டேட்!

       சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி முடித்துள்ளார். படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் வெளியாக உள்ள சூழலில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தை அவர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து தயாரிக்க

அகமதாபாத்தில் கனமழை: குஜராத் – கொல்கத்தா இடையேயான ஆட்டம் பாதிப்பு

அகமதாபாத், நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அமகதாபாத்தில் இன்று நடைபெற உள்ள 63வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோத உள்ளன. ஆட்டம் இரவு 7.30 மணியளவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மாலை முதல் அகமதாபாத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 7.30 மணிக்கு தொடக்கவேண்டிய ஆட்டம் 9 மணியை நெருங்கும் நிலையில் இன்னும் தொடங்கவில்லை. மழை தொடர்ந்து பெய்துவருவதால் … Read more

நேபாளத்தில் துணை பிரதமர் திடீர் ராஜினாமா.. பிரதமர் பிரசண்டாவின் அரசுக்கு பின்னடைவு

காத்மாண்டு: நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) கட்சியில் உட்கட்சி பிரச்சினை காரணமாக கட்சி இரண்டாக உடைந்தது. கட்சியின் தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவுக்கு எதிராக, கட்சியின் மத்திய குழு தலைவர் அசோக் ராய் தலைமையிலான குழுவினர் போர்க்கொடி தூக்கினர். பின்னர் இவர்கள் இணைந்து தனிக்கட்சியை உருவாக்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தனர். தாய் கட்சியில் … Read more

மத்திய அரசு உத்தரவால் புதுவையில் பதிவு பெற்ற மீன்பிடி விசைப் படகுகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

புதுச்சேரி: மத்திய அரசு உத்தரவால் புதுச்சேரியில் பதிவு பெற்ற மீன்பிடி விசைப் படகுகளை கணக்கெடுப்பும் பணி தொடங்கியது. இணையதள பக்கத்தைப் புதுப்பித்து விரைவில் இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு மீன்வளத் துறை அறிக்கையாக தரவுள்ளது. மத்திய அரசின் மீன்வள அமைச்சகம் அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தற்போது உள்ள மீன்பிடி தடை காலத்தில் அனைத்து பதிவு பெற்ற மீன்பிடி படகுகளையும் கள ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது புதுச்சேரி … Read more

மும்பையை துவம்சம் செய்த புழுதிப் புயல் – பேனர் விழுந்து 3 பேர் பலி, 50+ காயம்

மும்பை: மும்பை நகரில் திங்கள்கிழமை 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். 67 பேர் மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பை மாநகரில் மாலை 3 மணி அளவில் 40 – 50 கி.மீ வேகத்தில் கடுமையான புழுதிப் புயல் வீசியது. மும்பையின் வடாலா பகுதியில் புழுதிப் புயல் வீசியதில் ராட்சத இரும்பு பேனர் ஒன்று … Read more

4 கோடி ரூபாய் பறிமுதல் வழக்கு : பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சிக்கிய முக்கிய தடயம்

லோக்சபா தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு எதிரான முக்கிய தடயம் சிக்கியுள்ளது. 

சவுக்கு சங்கர் : ஒரு நாள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி

கோவை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோவை பெண் காவலர் ஒருவர் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் கொடுத்தார் இதையொட்டி கோவை ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் அவர் மீது முதல் வழக்குப்பதிவு செய்து தேனி அருகே பழனிச்செட்டிபட்டியில் இருந்த சவுக்கு சங்கரை, கடந்த … Read more

Actor Kavin: ரிலீசுக்கு தயாராகும் கவினின் அடுத்தப்படம்.. தீபாவளி ரிலீஸ்!

சென்னை: நடிகர் கவின் -இயக்குனர் இளன் கூட்டணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது ஸ்டார் படம். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கவினின் நடிப்பு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. வார இறுதி நாட்களான கடந்த மூன்று நாட்களில் இந்த படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்

கொதிக்கும் பாலை 5-வயது சிறுவன் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்: கேரளாவில் பரபரப்பு

கண்ணூர், கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் அருகே கோனோடு அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் ஷீபா (வயது 36). இவர் கடந்த 7-ந் தேதி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பால் காய்ச்சி கொடுத்து உள்ளார். அப்போது சூடான பாலை பக்குவமாக ஆற வைக்காமல், கொதிக்கும் பாலை 5-வயது சிறுவனின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் அலறி துடித்தான். அவனுக்கு வாயில் படுகாயம் ஏற்பட்டது. இருப்பினும், சிறுவனை ஆஸ்பத்திரிக்கு கூட அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை … Read more