கேட்ச்களை தவறவிட்டது போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது – அக்சர் படேல்

பெங்களூரு, ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 52 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் கலீல் அகமது, ராசிக் சலாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 188 ரன் எடுத்தால் வெற்றி … Read more

2 மாதங்கள் மட்டுமே வாழ்ந்தார்.. பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலம், வேமவுத் நகரைச் சேர்ந்தவர் ரிச்சர்டு ஸ்லேமன் (வயது 62). இவரது சிறுநீரகம் செயலிழந்ததால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி வெற்றிகரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. உடல்நிலை படிப்படியாக தேறிய நிலையில், கடந்த மாதம் (ஏப்ரல்) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு … Read more

“எவ்வளவு காலம் தொகுதிகள் கொடுங்கள் என கையேந்தி நிற்பது?” – செல்வப்பெருந்தகை ஆதங்கம்

சென்னை: “எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என கையேந்தி நிற்பது? தமிழகத்தில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து பிரித்து கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய செல்வப்பெருந்தகை, “1967ம் ஆண்டில் இருந்து 57 ஆண்டுகள் ஏமாந்தது போதும். தேர்தல்களின்போது தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து தொகுதிகளை … Read more

மும்பை புழுதிப் புயல் பேனர் விபத்து: பலி 8 ஆக அதிகரிப்பு

மும்பை: மும்பை நகரில் திங்கள்கிழமை 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 67 பேர் மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்த 59-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பையின் காட்கோபர் பகுதியில் விபத்து நிகழ்ந்த இடத்தை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விபத்து துரதிஷ்டவசமானது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் … Read more

சென்னை தாம்பரத்தில்…. கல்லூரி மாணவர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாம்பரம் அருகே பட்டபகலில் கல்லூரி மாணவர் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சிகிச்சை பலனின்று இன்று அதிகாலை உயிரிழந்தார்.

மோடிக்கு ராகுலுடன் நேருக்கு நேர் விவாதிக்க அச்சம் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தியுடன் நேருக்கு நேர் விவாதிக்க அச்சம் உள்ளதாக கூறி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி. லோகூர், அஜித் பி. ஷா மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் என். ராம் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த பிரதமர் மோடிக்கும், ராகுல்காந்திக்கும் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினர். இந்த … Read more

மீனாட்சிக்கு வீடு தேடி வந்த வரன்.. அதிர்ச்சியில் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் ஐஸ்வர்யா கர்ப்பம் இல்லை என்ற விஷயம் அபிராமிக்கு தெரியவர, ஐஸ்வர்யாவை கன்னத்தில் அறைந்து, இவ்வளவு நாளா கர்ப்பம் என்று சொல்லி எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்து இருக்கா என்ற உண்மையை உடைக்க அருணும் அவளை அறைகிறான். இனிமே இந்த வீட்ல உனக்கு

வாரணாசியில் பிரதமர் மோடி வாகன பேரணி

வாரணாசி, நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவானது நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் அவர் உள்ளார். இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில், வாரணாசி நகரில் பிரதமர் மோடி இன்று வாகன பேரணியில் ஈடுபட்டார். அவர், வாகன பேரணியை … Read more

பெடரேசன் கோப்பை: ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்ட போட்டியில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்

புவனேஸ்வர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா ஸ்டேடியத்தில், 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்ட போட்டியில், இந்தியாவின் சந்தோஷ் குமார் கலந்து கொண்டார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றவரான அவர், இந்த போட்டியில் 50.04 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து, முதல் இடம் பெற்றார். இந்த பிரிவில், 48.80 வினாடிகள் என்பது இந்தியாவின் தேசிய சாதனையாக உள்ளது. 2019-ம் … Read more

ராணுவ தலையீட்டை நிறுத்துக: அமெரிக்காவின் 7 நட்பு நாடுகளுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

பியாங்யாங், அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் ஆசிய பசிபிக் பகுதியில் ராணுவ தலையீட்டை உடனடியாக நிறுத்தி கொள்ளும்படி வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரலில், கொரிய தீபகற்ப பகுதியருகே கடல்வழி பகுதிகளில் தென்கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டன. தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து கடந்த மாதம் அமெரிக்காவும் 2 நாட்கள் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது. இந்த மாத தொடக்கத்தில், … Read more