இந்தியா கூட்டணி 315 இடங்களில் வெல்லும்.. பாஜக 195-ஐ தாண்டாதாம்.. அடித்துச் சொல்லும் மம்தா!

கொல்கத்தா: நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி குறைந்தபட்சம் 315 இடங்களையும், பாஜக அதிகபட்சமாக 195 இடங்களையும் கைப்பற்றும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கணித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று 96 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் Source Link

Actor Soori: சூரியின் கருடன்..புதிய வீடியோவுடன் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

சென்னை: வெண்ணிலா கபடி குழு படம் மூலம் காமெடியனாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சூரி. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து இவர் பல படங்களில் காமெடி கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் சூரி. விடுதலை படத்தை தொடர்ந்து சூரிக்கு

கல்யாணம் எப்போது? கேள்வி கேட்ட தொண்டர்களுக்கு ராகுல் காந்தி ருசிகர பதில்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் தனது வேட்புமனுவுக்கு பிறகு முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி. அப்போது அவர் தனது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியை மேடையின் முன் அழைத்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது, “நான் தேர்தலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறேன், எனது சகோதரி இங்கே நேரத்தை செலவிடுகிறார். இதற்காக அவருக்கு ஒரு பெரிய நன்றி” இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூட்டத்தில் திருமணம் … Read more

2024 டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரின் ரேஞ்ச், விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரூபாய் 1.08 லட்சம் முதல் ரூபாய் 1.86 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு தற்பொழுது ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. புதிதாக 2.2kwh பேட்டரி, முந்தைய 3.4kwh பேட்டரி மற்றும் டாப் ST வேரியண்டில் 5.1 kwh பேட்டரி என மூன்று விதமான ஆப்ஷனில் ஐக்யூப் 09, ஐக்யூப் 12, ஐக்யூப் S, ஐக்யூப் ST 12, மற்றும் ஐக்யூப் ST 17 என 5 … Read more

11வது கினாமி மிஷிடகா நினைவு தடகளப் போட்டியில் இலங்கை வீரன் தங்கப் பதக்கம்

ஜப்பானில் நடைபெற்ற 11வது கினாமி மிஷிடகா நினைவு தடகளப் போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலேயே முதலிடம் பெற்று காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றுள்ளார். போட்டியை நிறைவு செய்ய காலிங்க குமாரகே 45.92 வினாடிகளை எடுத்துள்ளார். இதேவேளை, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட நதிஷா ராமநாயக்க நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் போட்டியை முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் 54.02 வினாடிகள் … Read more

`முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 3 ஆண்டுக்கால ஆட்சி எப்படி இருந்தது?' – விகடன் கருத்துக்கணிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து, முதன்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமையில் செயல்படத் தொடங்கிய தி.மு.க அரசு, கடந்த மே 7-ம் தேதியோடு மூன்றாண்டுகால ஆட்சியை நிறைவுசெய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்துவைத்தது. விகடன் கருத்துக்கணிப்பு முதல்வர் ஸ்டாலின்கூட, `மூன்றாண்டுகளில் என்ன செய்தேன் என்பதற்கு, மக்களின் புன்னகையே சாட்சி’ என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதேசமயம், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி குறித்து … Read more

“ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் தேவையெனில் சபாநாயகரிடம் விசாரணை” – தென்மண்டல ஐ.ஜி. தகவல்

திருநெல்வேலி: “திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மமாக உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தேவைப்பட்டால் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவுவிடம் விசாரணை நடத்தப்படும்” என்று தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமை வகித்தார். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் மூர்த்தி, மாவட்ட … Read more

தேர்தல் பிரச்சாரம் செய்ய இடைக்கால ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்குக் ஜாமீன் வழங்கியதை அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். நில மோசடியில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன், ஜனவரி 31 அன்று கைது செய்யப்பட்டார். தற்போது, நீதிமன்ற காவலில் ராஞ்சியில் … Read more

பூரி ஜெகன்நாத் – ராம் பொதினேனி கூட்டணியில் உருவாகி உள்ள டபுள் ஐஸ்மார்ட்!

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் கிரேஸி இந்தியன் புராஜெக்ட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ டீசர் மே 15 அன்று வெளியாகிறது!  

2 சிறுமிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது – பதறவைக்கும் சம்பவம்

Udumalaipettai Gang Rape Case: உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமி மற்றும் 13 சிறுமி ஆகிய இருவரை கூட்டு பாலியல் வன்புணர்வை செய்ததாக கூறி 3 சிறுவர்கள் உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.