Tamil News Live Today: 96 மக்களவைத் தொகுதிகள்; ஆந்திரா, ஒடிசாவில் சட்டமன்ற தேர்தல் – தொடங்கியது 4-ம் கட்ட வாக்குப்பதிவு!

நாகை எம்.பி காலமானார் இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு! நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று வருகி|றது. இந்நிலையில் இன்று 4-ம் கட்ட வாக்குப்பதி நடைபெறவுள்ளது. 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தல் மக்களவைத் தேர்தலை பொறுத்தவரையில் … Read more

நாகப்பட்டினம் எம்.பி செல்வராசு காலமானார்

சென்னை: நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திங்கள்கிழமை (மே 13) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையானில் கந்த 1957-ல் பிறந்தவர். இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்ட அவர், அதன் … Read more

கடமையைச் செய்து ஜனநாயகத்தை பலப்படுத்துவோம்: 4 ஆம் கட்ட தேர்தல்; பிரதமர் அழைப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கடமையாற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர், “இன்று நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 96 … Read more

நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு! 96 நாடாளுமன்றத் தொகுதிகள், 1717 வேட்பாளர்கள்!

4th Phase Voting In Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 9 மாநிலங்களில் நடைபெறும் வாக்குப்பதிவில் 96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம், மக்களின் கை விரல்களில் அடங்கியிருக்கிறது.

தொடர்ந்து 58 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 58 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 58 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

ஆந்திராவில் இன்று சட்டசபை தேர்தல்.. காலை முதலே வாக்களிக்க ஆர்வமாக குவித்த வாக்காளர்கள்

அமராவதி: நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் மாநிலச் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுகிறது. அங்கு ஜெகன் மோகன் vs சந்திரபாபு நாயுடு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். நமது நாட்டில் இன்று 4ஆம் கட்ட லோக்சபா தேர்தல் 96 தொகுதிகளில் நடைபெறுகிறது. அத்துடன் சேர்த்து இன்று Source Link

CSK – மந்திரவாதியா மாறிய அஞ்சனா ரங்கன்.. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கே இவங்கதான் காரணமா?

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வழக்கம் போல் ஏகப்பட்ட பிரபலங்கள் கண்டு ரசித்தனர். சன் மியூசிக்கில் விஜேவாக பணியாற்றிய அஞ்சனா ரங்கன் நேற்று நடைபெற்ற போட்டியை தனது தோழியுடன் கண்டு ரசித்தார். போட்டி முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, அவர் ஆருடம் பார்த்தது எல்லாம் அப்படியே நடந்ததாக

சென்னை – திருவண்ணாமலை வரை ரயில் சேவை நீட்டிப்பு; பயணிகள், வர்த்தகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

சென்னை: சென்னை கடற்கரை – திருவண்ணாமலை வரை நீட்டிப்பு ரயில் சேவைக்கு பயணிகள், வர்த்தகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகிடைத்துள்ளது. இந்த ரயிலில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும், புதிய ரயில்களை விடவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கடற்கரை – வேலுார் கண்டோன்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் பயணிகள் ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில், இந்த பயணிகள் ரயிலை திருவண்ணாமலை வரை … Read more

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் கலவரம் – காவல் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு; 90 பேர் காயம்

ஸ்ரீநகர்/புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல் துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 90 பேர் காயமடைந்தனர். பணவீக்கம், அதிக வரி விதிப்பு, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அடக்குமுறை: குறிப்பாக, முசாபராபாத் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பாதுகாப்பு படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கலவரமாக மாறியது. இதில், ஏராளமான வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது. … Read more

சினிமா திறமை இல்லாதவர்களை கோபுரத்தில் ஏற்றும்.. ஸ்டார் என்னோட பயோபிக்.. காதல் சுகுமார் பேட்டி!

சென்னை: நடிகர் கவின் நடிப்பில் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியான ஸ்டார் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சுகுமார், ஸ்டார் படம் என்னுடைய பயோபிக் தான் என்று பேட்டியில் கூறியுள்ளார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கிய திரைப்படம் ஸ்டார். இதில் கவினுடன் லால், அதிதி