இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம்: 37 பேர் பலி

ஜகர்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலர் வீடுகளை இழந்தனர். சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 37 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். மீட்புப்பணியில் தேசிய பேரிடர் … Read more

விதிமீறும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை வைகோ

சிவகாசி: 90 சதவீதம் உரிமையாளர்கள், மிகுந்த சிரமத்திற்கு இடையே பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 10 சதவீதம் பேர் செய்யும் விதிமீறலால் ஒட்டுமொத்த பட்டாசு தொழிலுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. விதிமீறும் ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசியில் துரை வைகோ தெரிவித்தார். சிவகாசி அருகே செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9-ம் தேதி நடந்த பயங்கர வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் ,14 … Read more

“எனது மகள் ஷர்மிளாவை ஆதரியுங்கள்” – ஜெகன்மோகன் ரெட்டி தாயார் வேண்டுகோள்

விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவரது தாயார் விஜயலட்சுமி மற்றும் தங்கை ஷர்மிளாவுக்கும் இடையே சில ஆண்டுகளாக மனக்கசப்பு உள்ளது. இதனால் இவர்கள் இருவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டிலிருந்து வெளியேறி ஹைதராபாத்தில் குடியேறினர். பின்னர், அங்கு ஷர்மிளா ஒய்எஸ்ஆர் தெலங்கானா எனும் கட்சியை தொடங்கினார். சமீபத்தில் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தார். அதன் பின்னர் அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிதலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து மேடையிலும் ஷர்மிளா, தனது சகோதரர் … Read more

அடுத்த 3 மணி நேர்த்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் ஒரு புறம் கத்தரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மறுபுறம் மிதமான மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. ஏற்கனவே தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை … Read more

பிரவீன் காந்தியின் சர்ச்சை கருத்து.. இயக்குநர் வெற்றிமாறன் நச் பதில்!

சென்னை: நடிகர் ரஞ்சித்தின் நடிப்பில் உருவாகி உள்ள குழந்தை C/O கவுண்டம்பாளையம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பிரவீன் காந்தி, சினிமாவில் சாதியைப் பற்றி பேசவே கூடாது. அதுதான் என்னுடைய கொள்கை. சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவன் ஒதுக்கப்பட வேண்டியவன் என்று பேசி இருந்தார். இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளான நிலையில், இதற்கு வெற்றிமாறன் சரியான

மோடி-ராகுல் விவாத அழைப்பு; "அவர் பிரதமர் வேட்பாளரா?" – ஸ்மிரிதி இரானி கேள்வி

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும், இதில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமருடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என ராகுல் காந்தி அறிவித்தார். இது … Read more

ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி

சென்னை, 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் … Read more

மெக்சிகோவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

மெக்சிகோ சிட்டி, வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. அந்நாட்டின் ஷைபஸ் மாகாணத்தில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. கவுதமாலா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஷைபஸ் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினத்தந்தி Related Tags : Mexico  … Read more